Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

அன்றே சொன்னார் அறிஞர் அண்ணா!

September 15, 2025

|

Dinamani Puducherry

'முதலில் நாடு, கட்சி பிறகு' என்பதுதான் அண்ணாவின் நிலைப்பாடு. அது மட்டுமல்ல, பண்டித நேருவின் மறைவுக்கு திமுகவின் கொடிகள் ஒரு வாரத்துக்கு அரைக்கம்பத்தில் பறந்தன. ஒரு வாரம் எந்தக் கட்சி நிகழ்ச்சியும் நடக்கவில்லை. அண்ணாவின் அரசியல் நாகரிகத்துக்கு இது ஓர் உதாரணம்.

- கோ.விசுவநாதன்

மக்களுக்காக அரசியல், அரசியலுக்காக மக்கள் அல்ல என்பதை நன்கு அறிந்தவர் பேரறிஞர் அண்ணா. 'அடைந்தால் திராவிட நாடு இல்லையெனில் சுடுகாடு' எனச் சொல்லித்தான் திமுகவை அவர் வளர்த்தார்.

திமுகவின் வளர்ச்சியில் மிரண்டு போன காங்கிரஸ் அரசு, பிரிவினை பேசும் கட்சிகளைத் தடை செய்ய சட்டம் இயற்றியது. பிரிவினைவாதிகளைக் கைது செய்யவும் திட்டமிட்டது. இந்தச் சட்டம் திமுகவை தடை செய்ய என்பதை உணர்ந்த அண்ணா, மக்களுக்காகத்தான் அரசியல் என்ற உயர்ந்த கொள்கை பிடிப்பாளரான அவர், 'திராவிட நாடு உருவாவதற்கான காலம் கனியும் வரை எமது தரத்தை பலமுள்ளதாக உருவாக்குவேன்' என்று சொன்னார். அதனால்தான், சீனப் படையெடுப்பின்போது திராவிட நாடு கொள்கையை தற்காலிகமாகக் கைவிடுவதாக அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்யும் போதும் எதிர்க்கும் போதும் கூட அவரது அரசியல் நாகரிகம் வெளிப்பட்டது. 'காங்கிரஸ் பேரியக்கம் சுதந்திரப் போராட்டத்தின் போதும், அதற்கு முன்னரும் செய்த நல்லவை எதையும் நான் மறுக்கவும் இல்லை; எதிர்க்கவுமில்லை. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸையும் அதன் செயல்பாடுகளையும் தான் எதிர்க்கிறேன்' என்று சொன்னார் அண்ணா.

ஆகஸ்ட் 15-ஆம் தேதியை துக்க நாளாக பெரியார் அறிவித்தபோது அண்ணா அந்தக் கருத்தை ஏற்கவில்லை. 'இரண்டு நூற்றாண்டுகளாக இந்தத் துணைக்கண்டத்தின் மீது இருந்து வந்த பழிச்சொல்லை, இழிவை நீக்கும் அந்த நாள் திராவிடருக்கும் திருநாள், துக்க நாள் ஆகாது' என்று ஆணித்தரமாகத் தனது கருத்தைப் பதிவு செய்தார்.

المزيد من القصص من Dinamani Puducherry

Dinamani Puducherry

Dinamani Puducherry

ஆட்சியையும் பிடிக்கலாம்

ஒரு செயலைத் தொடங்கு முன் நன்றாக எண்ணுதல் வேண்டும். அச்செயலைச் செய்யுங்கால் தோன்றும் இடர்களைக் கருதுதல் வேண்டும். அச்செயற்குத் துணையாவாரைப் பற்றி நினைத்தல் வேண்டும். செயலைச் செய்யுங்கால் உண்டாகும் ஆக்க அழிவுகளைக் குறித்து உள்ளுதல் வேண்டும். செயலின் இறுதியில் விளையப் போகும் பயனை உன்னுதல் வேண்டும்.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Puducherry

அரிமா பசித்தாலும் புல்லைத் தின்னாது

பாமரப் பண்டிதர்களின் பட்டறிவுப் பண்ணையில் பழுத்த கனிப்பிழிவே பழமொழியாகும். அது, மனிதர்கள் தங்களுக்குரிய உயர்ந்த குணங்களிலிருந்து வழுக்குகின்றபோது இடைநிறுத்திக் காக்கும் தன்மையது. தடம்மாறித் தடுமாறும்போது வழுக்கல் பாதையில் கிடைத்த ஊன்றுகோல்போல் காக்கும் வன்மையது. சில பழமொழிகள் குறளினும் குட்டையானவை.

time to read

1 mins

June 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

உணவுப் பாதுகாப்பு: தேவையும் அவசியமும்!

உணவுப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 7-இல் உலக உணவுப் பாதுகாப்புத் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Puducherry

ஆசிரியப்பாவின் சிறப்பு!

மேற்கணக்கு நூல்களில் உள்ள பதினெட்டு நூல்களில் பெரும்பாலானவை ஆசிரியப்பாவாலே எழுதப்பட்டுள்ளன. நால்வகைப் பாக்களில் ஆசிரியப்பா எழுதுவது மிகவும் எளிது. ஆசிரியப்பாவானது மூன்று அடி முதலாய்ப் புலவனின் விருப்பத்துக்கு ஏற்ப அடிகளைப் பெறக் கூடியது.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Puducherry

தில்லியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு ஆதரவாக திரண்டனர்

time to read

1 mins

June 07, 2026

Dinamani Puducherry

மேக்கேதாட்டு அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம்

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

time to read

1 min

June 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

வரலாறு படைத்தார் பிரக்ஞானந்தா

நார்வே செஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் சிறப்பாக ஆடிய இந்திய வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Puducherry

பசுக்களைப் பாதுகாப்போம்!

ஹிந்து தர்மத்தின்படி, பசுக்களைப் பாதுகாத்தல் என்பது முக்கியக் கடமை. 'கோ சம்ப்ரக்ஷணம்' எனப்படும் கறவைப் பசுக்களைப் பாதுகாப்பது உயர்ந்த தர்மமாகக் கருதப்படுவதோடு, அறிவியல்ரீதியான தத்துவங்களும் உள்ளன.

time to read

2 mins

June 07, 2026

Dinamani Puducherry

பாமக பிரமுகர் கொலை வழக்கு: 4 பேர் மீது குற்றப்பத்திரிகை

திருப்புவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் 4 பேர் மீது பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

time to read

1 min

June 07, 2026

Dinamani Puducherry

Dinamani Puducherry

அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா

அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவர்

time to read

1 mins

June 07, 2026

Translate

Share

-
+

Change font size