استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة
The Perfect Holiday Gift Gift Now

உயர் கல்வியில் முந்தும் இந்தியா!

July 05, 2025

|

Dinamani Puducherry

உயர் கல்வியின் வெற்றி, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அளிக்கும் கல்வியின் தரத்தையும், மாணவர்களின் திறனையும் பொருத்தே அமைகிறது. மாணவர்களுக்கு உண்மைத்தன்மையும், படைப்பாற்றலும் உள்ளடக்கிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டிய பெரும் பொறுப்பு இன்றைய வளரும் கல்வி நிறுவனங்களிடம்தான் உள்ளது.

- பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

லகின் பல்வேறு பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது. பல்வேறு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்து வருகின்றன. இதனால், அந்த நாடுகளுக்கு உயர் கல்வி பயிலச் சென்றவர்களும், வாழ்வாதாரங்களுக்காக சென்றவர்களும் உயிருக்கு உத்தரவாதமின்றி, தங்கள் உடைமைகளை இழந்து பெரும் பயத்துடனும், கவலைகளுடனும் தங்களின் தாய் நாடு திரும்பி வருகின்றனர்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உயர் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. தன் திறமைகளை உணர்ந்து, அதை மெருகேற்றி, குடத்தில் இருக்கிற விளக்கை, குன்றின் மேலிட்ட விளக்காய், தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஒருவருக்கு உயர் கல்வி அவசியமாகிறது. தான் சார்ந்த துறையில் யாரும் தொடாத உயரத்தைத் தொட்டு முன்மாதிரியாக விளங்கும் வழிகாட்டும் வாழ்க்கை அமைய சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வியைத் தொடர்கின்றனர்.

உக்ரைன் - ரஷியா இடையே 2022-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் தொடங்கிய போரின் போது அங்கு உயர் கல்வி பயின்ற வந்த மாணவர்கள் சுமார் 14,000-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் பெரும் முயற்சிக்குப் பிறகு இந்தியா அழைத்துவரப்பட்டனர். இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஹமாஸ் அமைப்பு போர் காரணமாக இஸ்ரேலில் 1,200-லிருந்து 1500 மருத்துவ மாணவர்களும், இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக 1,500-லிருந்து 2,000 மருத்துவ மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.

ஒவ்வொர் ஆண்டும், சுமார் 25,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். காரணம், அங்கு மருத்துவப் படிப்புகளுக்கு எளிதாக இடம் கிடைப்பதுடன், இந்தியாவில் மருத்துவப் படிப்புக்கு ஆகும் செலவைவிட குறைவான செலவேயாகும்.

இந்தியாவில், ஒவ்வொர் ஆண்டும், சுமார் 22 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். இது பாரீஸ் நகரத்தில் வாழும் மக்களைவிட மிகவும் அதிகம்.

சுமார் 90,000 மருத்துவ இடங்களுக்கு சுமார் 12 லட்சம் பேர் தகுதி பெறுகின்றனர். இதில் தனியார் கல்லூரிகளில் சுமார் 20,000 மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) ஒதுக்கீடு ஆகியனவும் அடங்கும். இதனால், லட்சக்கணக்கானோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பண வசதியின்றி எங்கும் சேர முடியாத காரணத்தால், அவர்கள் உக்ரைன், இஸ்ரேல், ஈரான், சீனா ஆகிய நாடுகளுக்குச் சென்று மருத்துவப் படிப்பைப் படிக்கின்றனர்.

المزيد من القصص من Dinamani Puducherry

Dinamani Puducherry

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு

ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Puducherry

வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை

வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

time to read

1 min

December 20, 2025

Dinamani Puducherry

மாணவர்களை உடல், மன ரீதியாக துன்புறுத்தக் கூடாது

தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

time to read

1 min

December 20, 2025

Dinamani Puducherry

Dinamani Puducherry

பெண்ணையாறு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசு விதிகளை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.

time to read

1 mins

December 20, 2025

Dinamani Puducherry

4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு

நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 20, 2025

Dinamani Puducherry

நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி

சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Puducherry

மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி

time to read

1 min

December 20, 2025

Dinamani Puducherry

கரூர் சம்பவம்: நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஆய்வு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழுவினர் வெள்ளிக்கிழமை கரூருக்கு வந்து ஆய்வு செய்தனர்.

time to read

1 min

December 20, 2025

Dinamani Puducherry

1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி

மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Puducherry

ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா

கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.

time to read

1 min

December 20, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back