The Perfect Holiday Gift Gift Now

வரலாறு மன்னிக்காது!

August 11, 2025

|

Dinamani Karur

இந்தியா, ரஷியா பொருளாதாரம் சிதைந்து போய்விட்டால், இரு நாடுகளின் பொருளாதார வளம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்படும் என்பதற்கான இந்த மிரட்டல் போக்கில் டிரம்ப் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் 140 கோடி மக்களும் விழிப்போடு எதிர்கொள்ள வேண்டும் என்பதே இப்போதைக்கான நமது நிலை.

ஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து நான்தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என தொடர்ச்சியாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது இந்தியப் பொருள்களின் மீது 25% வரி விதித்திருக்கிறார்.

ஏற்கெனவே, ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களிடம் தங்களின் தொழிற்சாலைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நிறுவக் கூடாது என எச்சரித்து வந்த டிரம்ப், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கும், உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுக ஆதரவு வழங்குவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை இந்தியா நிறுத்தா விட்டால், வரியை மேலும் அதிகரிப்பேன் என்று டிரம்ப் கூறிவந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திலேயே இந்தியா மீதான வரியை மேலும் 25% உயர்த்தி, 50% அதிகரித்திருக்கிறார்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி வருவதால், அதற்கு அபராதமாக இந்த 25% வரியை உயர்த்தியிருப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். இந்த அபராத வரி விதிப்பு அடுத்த 21 நாள்களில் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் பிரேசிலுக்கு அடுத்தபடியாக, அமெரிக்காவால் 50% வரி விதிப்புக்கு உள்ளான நாடாக இருக்கிறது இந்தியா.

ஒரு நாடு எந்த நாட்டுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பது அந்நாட்டின் உரிமை. அதை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது. டிரம்ப்பின் இந்த நடவடிக்கை நியாயமற்றது; காரணமற்றது.

ரஷியாவிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குகிறோம்; ஆனால், ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. இதற்கு உக்ரைன் மீதான போர்தான் முக்கியக் காரணம். நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 36% முதல் 38% வரை ரஷியாதான் நிறைவு செய்கிறது.

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று டிரம்ப் கூறிவந்த நிலையில், இந்தியா அதை ஏற்கவில்லை. தேச நலன்தான் முக்கியம் என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.

المزيد من القصص من Dinamani Karur

Dinamani Karur

எல்லாவற்றையும் வாசியுங்கள்

தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Karur

காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிக்க இரு மாத சிறப்பு திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கான இரு மாத சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

Dinamani Karur

பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்

லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

Dinamani Karur

நீரில் விழுந்த நெருப்பு!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Karur

வருடச் சிவந்த மலரடிகள்

சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.

time to read

2 mins

January 04, 2026

Dinamani Karur

அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!

“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை விடுவித்தது கேகேஆர்

பிசிசிஐ உத்தரவு எதிரொலி

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

எம்பியை ஈங்குப் பெற்றேன்!

உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்

யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 04, 2026

Translate

Share

-
+

Change font size