சீரிய தலைமை-கட்டுப்பாடான இயக்கம்!
October 03, 2025
|Dinamani Dharmapuri
ஏலகின் மிகப் பெரிய கலாசார, பண்பாட்டு இயக்கமாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவாக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) உயர்ந்திருக்கிறது என்றால், அதன் பின்னணியில் டாக்டர் ஹெட்கேவாரின் தொலைநோக்குச் சிந்தனையும், 'குருஜி' கோல்வல்கரின் இயக்கத்தைக் கட்டமைக்கும் பேராளுமையும், பாலாசாகேப் தேவரஸின் சித்தாந்தச் செயலாக்கமும் இருப்பதை, நூற்றாண்டு விழாவின்போது நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த மூவரால் வடிவமைக்கப்பட்ட பாதையில், அடுத்த மூவரின் சீரிய தலைமையில் ஈடு இணையற்ற இயக்கமாக ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் வெற்றி நடைபோடுகிறது.
1925-ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று 'டாக்டர்ஜி' என்று அழைக்கப்பட்ட கேசவ பலிராம் ஹெட்கேவார் ஐந்தாறு இளைஞர்களுடன் தொடங்கிய பாதுகாப்புக்கான குழு ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி இன்று மகத்தான பேரியக்கமாக உருப்பெற்றிருக்கிறது. தேசபக்தி, கட்டுப்பாடு, ஒழுக்கம், ஈடுபாடு, சகோதரத்துவம் உள்ளிட்ட பண்புகளை உள்ளடக்கியதாக அந்த இயக்கத்தை உருவாக்கியதால்தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
எனது 16-வயதில் முதல்முறையாக ஆர்.எஸ்.எஸ். ஷாகாவில் (கூட்டத்தில்) கலந்து கொண்டபோது எனக்கு போதிக்கப்பட்ட கருத்து- தனிமனித ஒழுக்கம் பேணிப் பாதுகாக்கப்பட்டால்தான் ஓர் உயர்ந்த, நல்ல சமுதாயத்தைக் கட்டமைக்க முடியும் என்கிற உயர்ந்த சிந்தனை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணையும் ஒவ்வொருவருக்குமான அடிப்படை இலக்கணமாக இந்தக் கட்டளை இருப்பதால் தான் ஆர்.எஸ்.எஸ். மிகப் பெரிய, மிகச் சிறந்த இயக்கமாக உருவாகியிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். என்பது ஏதோ ஹிந்து மதத்தையும், பாரதத்தின் பண்பாட்டுக் கூறுகளையும், அகண்ட பாரத தேசத்தையும் பாதுகாப்பதற்கான இயக்கம் மட்டுமே என்று நினைப்பவர்கள், அந்த இயக்கத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாதவர்கள். மிகச் சிறந்த ஒழுக்கமான நற்பண்புகளுடன்கூடிய தனி மனிதர்களை உருவாக்குவதுதான் (மேன் மேக்கிங்) ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலையாய கடமையாகக் கருதப்படுகிறது. அதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அத்தனை துணை அமைப்புகளும், பல்வேறு துறைகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வளர்ந்ததற்கு என்ன காரணம் என்று கேட்பவர்கள், அந்த இயக்கம் தன்னலமில்லாமல் செய்யும் சேவைகள் குறித்த புரிதல் இல்லாதவர்கள். தேசத்தின் எந்தவொரு பகுதியில் இயற்கைப் பேரழிவு ஏற்பட்டாலும், கலவரத்தால் பாதிக்கப்பட்டாலும் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களின் சேவைக்காக ஓடிச் செல்லும் முதல் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.ஸாகதான் இருக்கும்.
1947 பிரிவினையைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் மேற்கு பஞ்சாபில் இருந்தும் (இப்போதைய பாகிஸ்தான்) கிழக்கு வங்கத்தில் இருந்து (இப்போதைய வங்கதேசம்) அகதிகளாக அடித்து விரட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கிய முதல் இயக்கம் ஆர்.எஸ்.எஸ். மட்டும்தான். அதன் சேவைகளைப் பார்த்துத்தான் காங்கிரஸ் கட்சியும் முகாம்களை அமைத்து அகதிகளுக்கு உதவ முன்வந்தது என்பது வரலாறு.
هذه القصة من طبعة October 03, 2025 من Dinamani Dharmapuri.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி
மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதி தற்கொலை
ஸ்ரீரங்கம் கோயில் விடுதியில் 2 மகள்களுடன் தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ
அமெரிக்காவின் தகவல்தொடர்பு செயற்கைக்கோளை இந்தியாவின் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் வரும் டிச.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
நவம்பரில் 28% குறைந்த தாவர எண்ணெய் இறக்குமதி
சுத்திகரிக்கப்பட்ட ஆர்பிடிபி பால்மோலின் இறக்குமதி வீழ்ச்சியால், இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த நவம்பரில் 28 சதவீதம் குறைந்துள்ளது.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
வெனிசுலாவுடன் போருக்கு வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
வெனிசுலாவுடன் போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!
உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.
2 mins
December 20, 2025
Dinamani Dharmapuri
கட்சி நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: ஜனவரி 5-க்குள் அரசிதழில் வெளியிட உத்தரவு
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், சாலைப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதற்கான இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜன.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியர் கைது
திருப்பூரில் பெண் நீதிபதியை தாக்கிய நீதிமன்ற ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
December 20, 2025
Dinamani Dharmapuri
மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி
1 min
December 20, 2025
Translate
Change font size

