Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

அறிவுக் கருவூலத்தின் திறவுகோல்!

February 25, 2026

|

Dinamani Cuddalore

இன்றைய இணையயுகத்தில் எல்லா திசைகளிலிருந்தும் தகவல்கள் பெருக்கெடுத்து வருகின்றன.

- பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

தகவல் தொழில்நுட்பப் புரட்சியால், தொலைக் காட்சி, ஃபேஸ்புக், வாட்ஸ்-ஆப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் என பல சமூகவலைதளங்கள் மூலம் உடனுக்குடன் செய்திகள் நம்மை வந்தடைகின்றன. எனினும், மக்களின் மனதோடு நெருக்கமானதாகவும், சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் பன்னெடுங்காலமாக செய்தித் தாள்களும், புத்தகங்களும் விளங்கி வருகின்றன.மின்னணு ஊடகங்கள் வருவதற்கு முன்பு, அச்சு ஊடகங்கள் மக்களுக்குத் தகவல்களைப் பரப்புவதில் முக்கியப் பங்கு வகித்தன. சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு சிறந்த நண்பராக புத்தகங்கள் உள்ளன.

புத்தக வாசிப்பு என்பது உலக நடப்பை அறியவும், மொழித் திறனை மேம்படுத்தவும், சமூகங்களிடையே நல்லுறவை வளர்க்கவும், மனிதர்களைப் புரிந்து கொள்ள உதவும் ஒரு முக்கியமான கருவியாகவும் விளங்குகிறது. மக்களிடையே அறியாமை இருளை அகற்றி, அவர்களின் சிந்தையில் ஒளியேற்றும் கைவிளக்காகவும், அறிவுக் கருவூலத்தின் திறவுகோலாகவும் புத்தகங்கள் உள்ளன. சாதாரண மக்களுக்கு சமூகத்தை ஒட்டு மொத்தமாக அறிந்து கொள்ளக்கூடிய சக்தியை செய்தித்தாள்கள் அளிக்கின்றன.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் தாமஸ் ஜெஃபர்சனிடம் 'நீங்கள் செய்தித் தாளே இல்லாத அரசை விரும்புவீர்களா அல்லது அரசே இல்லாத செய்தித்தாள்களையா' என நிருபர் ஒருவர் கேட்டார். அதற்கு அவர், 'செய்தித்தாள்களையே நான் விரும்புவேன்' எனப் பதிலளித்தார்.

'வாளின் முனையைவிட பேனாவின் முனை கூர்மையானது' என்பார்கள். எழுத்தின் தாக்கம் சக்தி வாய்ந்தது, ஆயுதத்தைவிட வலிமையானது. ஒரு கத்தி உடலுக்கு காயத்தை ஏற்படுத்தலாம். ஆனால், ஒரு பேனா, ஒருவரின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி, சிந்தனையை வளர்த்து, சமூகத்தில் மாற்றத்தையும் கொண்டு வரும்.

பத்திரிகைகள் ஜனநாயகத்தில் நான்காவது தூணாக விளங்கி வருகின்றன. இது பேச்சு, கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையை சட்டத்துக்கு உட்பட்டு பயன்படுத்துகின்றன. ஜனநாயகத்தின் முக்கிய காவலாளியாக பத்திரிகைகள், அச்சு ஊடகங்கள் செயல்படுகின்றன. 'அரசமைப்புச் சட்டம் உறுதி அளித்துள்ள கருத்துச் சுதந்திரம் என்பது, நம் ஜனநாயகத்தின் அழகு' என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் தெரிவித்துள்ளது.

المزيد من القصص من Dinamani Cuddalore

Dinamani Cuddalore

விஜய் சந்திப்பு: இந்திய கம்யூனிஸ்ட், விசிக வரவேற்பு

எதிர்க்கட்சித் தலைவர்களின் இல்லங்களுக்குச் சென்று முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றதற்கு இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.

time to read

1 min

May 12, 2026

Dinamani Cuddalore

கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு

கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

எரிபொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க இந்தியா உறுதியான நடவடிக்கை

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Cuddalore

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Cuddalore

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Cuddalore

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Cuddalore

நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!

காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

time to read

2 mins

May 11, 2026

Listen

Translate

Share

-
+

Change font size