Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

ரஷியா - உக்ரைன் போர்: என்னதான் தீர்வு?

June 10, 2025

|

Dinamani Cuddalore

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கண்டனங்கள் குறித்து கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல் 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது ரஷியா. இந்த நிலையில்தான் போர் தொடர்பாக உக்ரைனுடன் இஸ்தான்புல்லில் கடந்த மே 15-ஆம் தேதியன்று நேரடிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

- முனைவர் வைகைச்செல்வன்

மெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரஷியா 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் போர் தொடுத்தது. மூன்று ஆண்டு காலமாக இடைவிடாத தாக்குதலை உக்ரைன் தாக்குப் பிடித்து வருகிறது. ஒரு வாரப் போரையே உக்ரைன் தாக்குப் பிடிக்க முடியாது என்று ரஷியா தப்புக் கணக்கு போட்டு விட்டது.

ஆனால், நிலைமை வேறு மாறாகி விட்டது. அதன்பிறகு எத்தனையோ பேச்சுவார்த்தைகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கண்டனங்கள் குறித்து கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல் 3 ஆண்டுகளாகத் தொடர்ந்து உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது ரஷியா. இந்த நிலையில் தான் போர் தொடர்பாக உக்ரைனுடன் இஸ்தான்புல்லில் கடந்த மே 15-ஆம் தேதியன்று நேரடிப் பேச்சுவார்த்தையை தொடங்கியது.

2022-இல் உக்ரைன்தான் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டது; ரஷியா அல்ல. ஆகவே எந்த முன் நிபந்தனைகளும் இல்லாமல் உக்ரைன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ரஷியா முனைந்தது.

ஏற்கெனவே நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் உக்ரைன் பேச்சுவார்த்தை குழு தலைவரின் முயற்சியால் ஒரு கூட்டு வரைவு ஆவணம் தயாரிக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக மேற்கத்திய நாடுகளின் வற்புறுத்தலின்பேரில், அது குப்பையில் வீசப்பட்டது என்பதை பதிவு செய்தே ஆக வேண்டும். இருந்தபோதிலும் ரஷியா பலமுறை போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ரஷியா- உக்ரைன் போர் நிறுத்தம் எப்போது? அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்களே! அவர்களின் துயரத்துக்கு ஆறுதலும், தேறுதலும் எப்போது கிடைக்கும் என்பதற்கான விடை கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை கிடைக்கவில்லை. ஆகவேதான் 'எங்களின் போர் நிறுத்த திட்டங்கள் எதற்கும் உக்ரைன் அதிகாரிகள் செவி மடுக்கவில்லை' என்று ரஷியா கனத்த இதயத்தோடு மீண்டும் சொன்னது. இதற்கு ஒரு உதாரணமாக இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட 3 நாள்களில் 5 முறை ரஷிய எல்லையைத் தாக்க முயற்சிகள் மேற்கொண்டது உக்ரைன் என்பதை தெரிவித்தே ஆக வேண்டும்.

المزيد من القصص من Dinamani Cuddalore

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகம்

சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகமும், உலக நன்மை வேண்டி ருத்ர ஜபம் மற்றும் ருத்ர யாகமும் சனிக்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

May 10, 2026

Dinamani Cuddalore

அதிர்ச்சியச் செலாவணி! கையிருப்பு 69,069 கோடி டாலராக குறைவு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த மே 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,069 கோடி டாலராக குறைந்துள்ளது.

time to read

1 min

May 10, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது

அமலாக்கத் துறை நடவடிக்கை

time to read

1 mins

May 10, 2026

Dinamani Cuddalore

எகிப்தில் தமிழ் கல்வெட்டுகள்!

தொல்காப்பியத்துக்குப் பாயிரம் வகுத்த பனம்பாரனார், 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறுநல்லுலகம்' என்று பழந்தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கின்றார்.

time to read

1 mins

May 10, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

பெண் பார்க்கச் செல்லும் மரபு

திருமணப் பருவம் எய்திய சங்ககாலப் பெண்ணொருத்தியை மணம் பேசுவதற் காக, மாப்பிள்ளை வீட்டார் அப்பெண்ணின் இல்லத்துக்கு வருகின்றனர்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

முப்படைகளின் புதிய தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமனம்

கடற்படைக்கும் புதிய தலைமைத் தளபதி அறிவிப்பு

time to read

1 mins

May 10, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

சாமானியர்களும் கர்நாடக இசையை அறிய ரீல்ஸ்கள்

கர்நாடக இசை குறித்து அரிய தகவல்கள், அற்புத நிகழ்வுகளை கடந்த ஓராண்டாக நேரம் கிடைக்கும்போதெல்லாம் 'ரீல்ஸ்'களாக வெளியிட்டு வருகிறேன்.

time to read

2 mins

May 10, 2026

Dinamani Cuddalore

அம்மா என்று அழைக்காத உயிரில்லையே...

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

time to read

2 mins

May 10, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

முதல்வராகப் பொறுப்பேற்கும் விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து

தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள விஜய்க்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 10, 2026

Dinamani Cuddalore

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: வீர் சோட்ராணி வெற்றி

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடக்க சுற்றில் இந்தியாவின் வீர் சோட்ராணி சக வீரர் அபய் சிங்கை 5 கேம்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

time to read

1 min

May 10, 2026

Translate

Share

-
+

Change font size