Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

ஜாதி ஆதிக்கத்தில் பிகார் தேர்தல் அரசியல்!

November 04, 2025

|

Dinamani Chennai

பிகார் தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் தேர்வு, வாக்கு வங்கியைத் தக்கவைப்பது ஆகியவற்றில் ஜாதிய ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

- ம.ஆ. பரணிதரன்

243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11-ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் நிதீஷ் குமாரை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது. மறுபுறம் காங்கிரஸ் மற்றும் அந்த மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) அங்கம் வகிக்கும் அணியான 'மகாகட்பந்தன்' (மாபெரும் கூட்டணி) அதன் முதல்வர் வேட்பாளராக லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவை அடையாளப்படுத்தியுள்ளது.

பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை ஆளும் நிதீஷ் குமார் அரசு 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியிட்டது. அதன்படி, இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) மற்றும் தீவிர பிற்படுத்தப்பட்டோர் (இபிசி), மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 63 சதவீதம் உள்ளனர். பட்டியலினத்தவர் (எஸ்சி) 19.65 சதவீதமும், பழங்குடியினர் (எஸ்டி) 1.68 சதவீதமும் உள்ளனர்.

தரவுகளின்படி, தேஜஸ்வி சார்ந்த யாதவர் சமுதாயம் (ஓபிசி வகுப்பு) 14.27 சதவீதமாக உள்ளது. 1990-களில் மண்டல் ஆணைய பரிந்துரை (அரசுப் பணிகளில் ஓபிசி-களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு) அமல்படுத்தப்படும் வரை பிகார் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய உயர் வகுப்பினர், 2023-இல் மாநில அரசால் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் 15.5 சதவீதம் உள்ளதாக தரவுகளில் தெரிய வந்துள்ளது. அந்த வகையில் யாதவர் சமுதாயத்தின் எண்ணிக்கை சரிந்துள்ளது.

المزيد من القصص من Dinamani Chennai

Dinamani Chennai

இயக்குநர் நியமனம் ஓராண்டாக காத்திருக்கும் மருந்து கட்டுப்பாட்டுத் துறை

தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்குநர் பதவிக்கு கடந்த ஓராண்டாகியும் எவரும் நியமிக்கப்படாததால் கூடுதல் பொறுப்பாக அப்பணிகளை ஐஏஎஸ் அதிகாரியே மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவர் கைது

கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

சேவைத் துறையில் குஜராத் முன்னிலை வகிக்க உகந்த தருணம்

அமைச்சர் அமித் ஷா

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

அரசு மருத்துவமனையில் கையூட்டு எம்எல்ஏ புகாரில் 4 பேர் மீது நடவடிக்கை

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் கையூட்டு பெற்ற 4 பணியாளர்கள் மீது, தொகுதி எம்எல்ஏ அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

இரு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேரும், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 இளைஞர்களும் உயிரிழந்தனர்.

time to read

1 mins

May 18, 2026

Dinamani Chennai

தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்

மின் நுகர்வோர் தங்களுக்கான மின் கட்டணத்தை தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிப்பு

பெட்ரோல், டீசலுக்கு பதிலாக வாகனங்களில் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி (எரிவாயு) விலை கிலோவுக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Chennai

பாஜகவின் 'ஹாட்ரிக்' வெற்றி!

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதும், தமிழ்நாட்டில் கட்சியைத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் நடிகர் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று வெற்றி பெற்றதும், மூன்றாவது முறையாக அஸ்ஸாமில் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Chennai

உணவுப் பாதுகாப்பை தக்கவைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை தக்கவைக்க முதல்வர் விஜய் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக துணைப் பொதுச் செயலர் துரை. ரவிகுமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Listen

Translate

Share

-
+

Change font size