Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

தேவை அரசியல் விழிப்புணர்வு!

August 09, 2025

|

Dinamani Chennai

நல்லவர்கள் என்று கூறிக்கொண்டு தங்கள் வீட்டில் இருந்து புலம்புவதால் நாம் நல்லவர்கள் அல்ல. நல்லது செய்வோருடன் இணைந்து செயல்படுவதுதான் நல்லோரின் செயல். தனித்திருந்து நாம் நல்லவர் என்று கூறுவது தவறு செய்கிறவர்களுக்கு ஊக்கமளிக்கிறோம் என்பதே பொருள்.

- க. பழனித்துரை

ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியை மாணவி ஒருவர் ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, அவர் தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டார். 'நான் இளம் அறிவியல் (இயற்பியல்) முடித்து தற்போது முதுநிலை அரசியல் அறிவியல் படித்துக் கொண்டிருக்கிறேன்' என்றார். அப்போது, ஓர் இளைஞர் "இளம் அறிவியல் (இயற்பியல்) முடித்துவிட்டு ஏன் அரசியல் அறிவியல் முதுநிலை படிக்க வேண்டும்' என்று கேட்டார். அதற்கு அந்த மாணவி கூறிய பதில் வகுப்பு எடுக்கச் சென்ற என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது.

இன்று நம் நாட்டில் தேநீர்க் கடையில் விவாதிக்கும் அரசியலைத்தான் அரசியலாகவே மக்கள் எண்ணுகிறார்கள். அப்படித்தான் எங்கும் பொறுப்பற்ற தன்மையில் பொறுப்புமிக்க தலைமைப்பதவியில் இருப்பவர்களும், நம் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்களும்கூட நடந்து கொள்கிறார்கள். இந்த நாட்டையும், மக்களையும் மையப்படுத்தி செயல்படுவதற்குப் பதிலாக, தன்னையும் தன் கட்சியையும் மையப்படுத்துகின்றனர்.

அரசியல் என்பது ஓர் அறிவியல். அறிவியல் என்றால் உண்மை; உண்மையுடன் இருந்தால்தான் அது அறிவியல். அந்த அறிவியலைப் படித்து மக்களிடம் அரசியல் அறிவியலை எடுத்துச் சென்று மக்களுக்கு நாம் விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டால், இந்த நாட்டில் நல் அரசியலை-அற அரசியலை நம்மால் உருவாக்க முடியும். ஆகவேதான், இந்தப் படிப்பை நான் எனக்காகப் படிக்கவில்லை; இந்த சமூக அவலங்களைப் போக்கப் படிக்கிறேன்' என்றார்.

அந்த மாணவிக்கு இருந்த புரிதல், நாட்டுப்பற்று, சமூகப் பார்வை, பொறுப்பு நம் தலைவர்களிடம் இல்லையே; அவர் கூறிய பொறுப்பற்ற தன்மைக்கு நம் அரசியலில் பல உதாரணங்களைக் காட்டலாம்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியப் பொருள்களுக்கு புதிய வரிகளை விதித்தார். அதில் நம் அரசியல்வாதிகள் பொறுப்பற்று செயல்பட்ட விதத்தை நாம் அவர்களின் விவாதங்களில் கண்டோம். ஜப்பானுக்கும் டிரம்ப் இதையேதான் செய்தார். உடனே தன் நாட்டுப் பொருள்களின் விலையை ஜப்பான் குறைத்து விட்டது. பாதிப்பை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு ஓசையின்றி உடனே முடிவெடுத்துவிட்டனர்.

المزيد من القصص من Dinamani Chennai

Dinamani Chennai

எங்கே கொண்டு போகிறாய் காலமே?

அண்மையில் மறைந்த பிரபல திரையுலகப் பிரமுகரின் உடலைச் சுமந்து வந்த வண்டியிலிருந்து அவ்வுடலை இறக்கிட இயலாதபடி நூற்றுக்கணக்கான கேமரா கருவிகள் முற்றுகையிட்டன.

time to read

3 mins

July 01, 2026

Dinamani Chennai

தவெக தலைமையில் புதிய கூட்டணி?

தவெக சார்பில் தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை அருகே கோவளத்தில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் புதன்கிழமை (ஜூலை 1) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

விழிஞ்ஞம் துறைமுகத்தின் 49% பங்குகளை வாங்கும் உலகின் மிகப் பெரிய கப்பல் நிறுவனம் 'எம்எஸ்சி'

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த உலகின் மிகப் பெரிய கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாட நிறுவனமான எம்எஸ்சி, கேரளத்தில் உள்ள அதானி குழுமத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் 49 சதவீத பங்குகளை சுமார் 140 கோடி டாலருக்கு வாங்குகிறது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடி

நடப்பு 2026-27 நிதியாண்டின் மே மாத இறுதி நிலவரப்படி, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

வடதமிழகத்தில் இரு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன், வியாழக்கிழமை (ஜூலை 1, 2) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

தென்மேற்குப் பருவமழை தாமதம்: காரீஃப் பருவ விதைப்பு 23% குறைந்தது

தென்மேற்குப் பருவமழை தாமதமானதால் நாடு முழுவதும் நெல் உள்ளிட்ட காரீஃப் பருவ விதைப்பு 23 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை

தொடர்ந்து 9-ஆவது காலாண்டாக சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு மாற்றம் ஏதும் மேற்கொள்ளவில்லை.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்காவில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை பெற தகுதியுள்ளது என அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

போதை எனும் உபாதை!

போ தைப் பொருள் தடுப்பு முகமையின் 2026-ஆம் ஆண்டு அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷா புது தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 26) வெளியிட்டார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Chennai

ஆராய்ச்சிக்காக பறக்கவிடப்பட்ட பாறு கழுகு உதகை அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை அருகே எப்பநாடு வனப் பகுதியில் ஆராய்ச்சிக்காக ஜிபிஎஸ் கருவி பொருத்தி அனுப்பப்பட்ட வெண்முதுகு பாறு கழுகு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இதுகுறித்து வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

time to read

1 min

July 01, 2026

Translate

Share

-
+

Change font size