يحاول ذهب - حر
மரபணு மாற்ற பயிர்கள் ஜனநாயகத்தை என்ன செய்யும்?
July 28, 2025
|Dinamani Chennai
லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இந்த வணிகப் பெரு நிறுவனங்கள் உலகில் உணவுப் பற்றாக்குறை இருப்பதாக மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்கின்றன. தங்களது தொழில்நுட்பங்களால்தான் உலகில் பசியை நீக்க முடியும் என்று நம்ப வைக்கின்றன.
ஜெப்ரி ஸ்மித் நிறைய கள ஆய்வுகளுக்குப் பிறகு 2004-இல் எழுதிய 'சீட்ஸ் ஆப் டெசெப்சன்' என்ற மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தின் அறியப்படாத, மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிய நூல் அமெரிக்கர்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த நூலுக்கு 'தி நெக்ஸ்ட் டயர் பார் ஸ்மால் பிளானெட்' என்ற உணவு அரசியல் குறித்து ஆழமான நூலை எழுதிய பிரான்செஸ் மூரே லேப்பி என்ற அணிந்துரை எழுதியிருந்தார்.
மரபணு மாற்று விதைகள் ஜனநாயகத்தை என்ன செய்திட முடியும்? இப்படியொரு கேள்வியோடு தனது அணிந்துரையைத் தொடங்கியிருந்தார். கொஞ்சம்கூடப் பொருத்தமாக இல்லாத கேள்வியைப் போல இது நமக்குத் தோன்றும். இதற்கு அவர் கூறிய பதில், மரபணு மாற்று விதைகள் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பது; அந்த நூலின் பெரும் பகுதி, மரபணு மாற்று உயிரினங்களுக்காக நடந்தவை, நடப்பவை, எந்த அளவுக்கு மரபணு மாற்று விதைகளுக்காக நம் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு இருப்பதை ஆதாரங்களுடன் தெரிவித்தது.
55 ஆண்டுகளுக்கு முன்பு தானியங்களைத் தீவனமாக்கி, இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்க்கும் முறை வந்த போது, அது ஒரு ஆபத்தின் அடையாளம் என்று எழுதினேன். இறைச்சிக்காகக் கால்நடைகளை வளர்ப்பதில் என்ன ஆபத்து இருக்க முடியும்? இறைச்சிக்காகவே மாடு வளர்ப்பது பற்றி அறியும்போது தான் அந்த ஆபத்து புரியும்.
அந்தக் காலக்கட்டத்தில்தான் இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்ப்பும், மாட்டிறைச்சி உற்பத்தியும் பெருந்தொழில் வணிகமானது. மாடுகளுக்குத் தேவைப்படும் தீவன மக்காச்சோளத்தை விளைவிப்பது தொடங்கி, உணவாக மக்களின் இல்லங்களுக்குச் செல்லும் வரை பல்வேறு படிகள் உள்ளன. அவற்றை அரசு அமைப்புகள் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதற்கான விதிமுறைகள், ஒழுங்காற்று அமைப்பு முறைகள், கட்டுப்பாடுகளை வடிவமைத்ததில் அந்தப் பெருந்தொழில் நிறுவனங்கள் பெரும்பங்காற்றின. இதைத்தான் ஆபத்தின் அடையாளம் என்கிறார் அவர்.
மேலும், அவை வணிகத்தை அதிகப்படுத்துவதற்காக மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்தன. காடுகளை அழித்துத் தீவனத்தை வளர்த்தது. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தது. மாடு வேகமாக அதிகச் சதைப் பிடிப்புடன் வளர ஹார்மோன்கள் தந்தது, ஆன்டிபயாட்டிக் களுக்கு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கியது. மக்களுக்கு இதய நோயை அதிகமாக்கியது, இன்னும் பல பாதிப்புகளை எல்லாம் உருவாக்கியது என்கிறார் அவர்.
هذه القصة من طبعة July 28, 2025 من Dinamani Chennai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Chennai
Dinamani Chennai
அடுத்த மாதம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்
மிஸ்ரி உடனான சந்திப்புக்குப் பிறகு அறிவிப்பு
1 min
April 11, 2026
Dinamani Chennai
சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் ரூ.3.10 கோடி தங்கக் கட்டிகள்
சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை
1 min
April 11, 2026
Dinamani Chennai
இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.9%-ஆக உயரும்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ஏப். 1ஆம் தேதி தொடங்கிய நடப்பு 2026-27 நிதியாண்டில் 6.9 சதவீதமாக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) தெரிவித்துள்ளது.முன்னதாக இது 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், உள்நாட்டுத் தேவை அதிகரிப்பு, அமெரிக்க இறக்குமதி வரி குறைப்பு மற்றும் தளர்த்தப்பட்ட நிதிச் சூழல் போன்ற காரணிகளால் இந்த வளர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
April 11, 2026
Dinamani Chennai
சமையல் எரிவாயு விநியோகத்தில் தாமதம்: 200 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
ஐஓசி தலைவர் சஹானி
1 min
April 11, 2026
Dinamani Chennai
நவாஸ்கனி தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
நவாஸ்கனிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கைத் திரும்பப் பெறுவதற்கு ஆட்சேபணை ஏதேனும் உள்ளதா என்பது குறித்து அரசிதழில் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
April 11, 2026
Dinamani Chennai
மாநிலங்களவை நியமன எம்.பி.யானார் ஹரிவன்ஷ்
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மாநிலங்களவை எம்.பி.யாக குடியரசுத் தலைவரால் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
1 min
April 11, 2026
Dinamani Chennai
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள்: மாவட்டத் தேர்தல் அலுவலர் ஆய்வு
சென்னையில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்டத் தேர்தல் அலுவலர் ஜெ. குமரகுருபரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
April 11, 2026
Dinamani Chennai
சட்டம் இயற்றுவதில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும்
மக்களவைத் தலைவர் வலியுறுத்தல்
1 min
April 11, 2026
Dinamani Chennai
சென்னை-திருநெல்வேலிக்கு 3 நாள்கள் சிறப்பு ரயில்கள்
திருநெல்வேலி இடையே வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
1 min
April 11, 2026
Dinamani Chennai
வெனிசுலாவில் புதிய சுரங்க சட்டம்
வெனிசுலாவில் முடங்கிக் கிடக்கும் சுரங்கத் தொழிலை மேம்படுத்தவும், அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கவும் வகை செய்யும் புதிய சுரங்க ஒழுங்குமுறை சட்ட மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
1 min
April 11, 2026
Translate
Change font size
