يحاول ذهب - حر
மூத்த குடிமக்களுக்குப் பயன் தருமா ஆயுஷ்மான் பாரத்?
December 07, 2024
|Dinamani Chennai
70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு ஆயுஷ்மான் பாரத் - பிரதமரின் ஜன ஆரோக்கிய திட்டம் (ஏபிபிஎம்-ஜெய்) என்ற இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை இந்திய அரசு 2024 அக்டோபர் 29-இல் தொடங்கி இருக்கிறது.
இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் நிறை, குறைகளை இங்கே பரிசீலிப்போம்.
அரசின் எந்த ஒரு மக்கள்நலத் திட்டமும் அதனை உண்மையாகத் தேவைப்படுவோருக்கு மட்டுமே கொண்டு சேர்க்க கடுமையான விதிமுறைகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவையே திட்டத்தின் எதிர்மறை அம்சங்களாக மாறி விடுகின்றன. அதனால்தான், மக்கள் நலத்திட்டங்கள் பாதியளவிற்கும் கூட பயனளிக்காதது மட்டுமல்ல, தேவைப்படுவோர் பலரையும் புறக்கணிப்பதாகவும் அமைந்துவிடுகின்றன. எனவேதான், முழுமையான சுகாதாரம், கல்வி, பொது விநியோகத்திற்கான திட்டங்கள் அரசு செலவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுகின்றன.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், உணவுப் பாதுகாப்பு சட்டம், அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம், அரசு இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்தாலும், அவை அரைமனதுடன் செய்தவையாகவே தோற்றமளிக்கின்றன. திட்டங்களில் காணப்படும் முரண்பாடுகள், குறைபாடுகளால் அவை முழுமையான பலன்களை அளிப்பதில்லை.
அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், முழுமையான பயன்களைத் தரும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டிருப்பதாகவே கூறப்பட்டுள்ளது. எனினும் இதில் பல குறைபாடுகள் காணப்படுவது, திட்டத்தின் நம்பகத்தன்மையைப் பாதிக்கின்றன.
இந்தத் திட்டம், 2018-இல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (பிஎம்-ஜெய்) நீட்டிப்பே ஆகும். அத்திட்டம், நாட்டிலுள்ள பரம ஏழைகளில் 40 சதவீதம் பேருக்கு, அதாவது 12 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீட்டை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தத் திட்டத்தின் வெற்றி குறித்து, மத்திய அரசு புள்ளிவிவரங்களுடன் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறது. அதன்படி, கடந்த நவம்பர் 1 வரை, நாடு முழுவதிலும் பிஎம்-ஜெய் திட்டத்தின் கீழ் 8.20 கோடி பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
هذه القصة من طبعة December 07, 2024 من Dinamani Chennai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Chennai
Dinamani Chennai
எஸ்.ஜே.ஆர் பணி ஒரு வாரம் நீட்டிப்பு
ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளின் ஒட்டுமொத்த அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரம் நீட்டித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
பிரிட்டனில் இந்தியர் கொலை: ஹரியானாவைச் சேர்ந்தவர் எனத் தகவல்
பிரிட்டனில் உள்ள வூர்ஸ்டர் நகரில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு 30 வயது மதிக்கத்தக்க இந்தியர் கொல்லப்பட்டார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Chennai
இலங்கை மக்களுக்கு உதவத் தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அரசுப் பேருந்துகள் மோதல்: 11 பேர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டத்தில் விபத்து
1 mins
December 01, 2025
Dinamani Chennai
நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்
விவசாயிகள் கடும் பாதிப்பு
1 min
December 01, 2025
Dinamani Chennai
தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஹசீனா நாடு கடத்தல் விவகாரம் இந்தியாவிலான உறவை பாதிக்காது: வங்கதேசம்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் விவகாரம் இந்தியாவுடனான உறவை பாதிக்காது என்று அந்நாட்டு இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு... தற்காத்துக் கொள்ள அவசியம் தடுப்பூசி!
தமிழகம் முழுவதும் பருவ கால காய்ச்சல் மற்றும் சுவாசப் பாதை தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்
சென்னை மாநகராட்சியில், ஞாயிற்றுக்கிழமை 726 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது.
1 min
December 01, 2025
Translate
Change font size

