يحاول ذهب - حر
ஞானவாபி மசூதி இடத்தில் கோயில் இருந்ததற்கான சான்றுகள்
January 28, 2024
|Dinamani Chennai
தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் தகவல்: ஹிந்துக்கள் தரப்பு
-
‘வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ள இடத்தில் மிகப்பெரிய ஹிந்து கோயில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன’ என்று தனது அறிவியல்பூா்வ ஆய்வறிக்கையில் இந்திய தொல்லியல் துறை குறிப்பிட்டுள்ளதாக ஹிந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கள ஆய்வின்போது கிடைத்த கல்வெட்டுகளும் சிற்பங்களும் மசூதி அமைந்துள்ள இடத்தில் ஏற்கெனவே கோயில் இருந்துள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன’ என்றும் தனது ஆய்வறிக்கையில் தொல்லியல் துறை குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின் நகல்கள், வழக்கின் இரு தரப்பினருக்கும் வழங்கப்பட்ட நிலையில் இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதா் கோயில் அமைந்துள்ளது. அதன் அருகில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, அந்தப் பகுதியில் அமைந்திருந்த கோயிலை இடித்துவிட்டு முகலாய மன்னா்களால் கட்டப்பட்டதாக சா்ச்சை எழுந்தது. அதாவது, 17-ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக ஹிந்துக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், மசூதி வளாகத்தில் அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி ஹிந்துக்கள் சிலா் தரப்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்படும் சீலிடப்பட்ட நீா்நிலையைத் தவிர, பிற பகுதிகளில் அறிவியல்பூா்வ ஆய்வு மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்னா் அலாகாபாத் உயா்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன.
அதனடிப்படையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் அறிவியல்பூா்வ ஆய்வை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கினா். அதன் பிறகு ஆய்வை நிறைவு செய்ய தொல்லியல் துறைக்கு மாவட்ட நீதிமன்றம் 6 முறை கால நீட்டிப்பு வழங்கியது. மொத்தம் 2150.5 சதுர மீட்டா் அளவுக்கு வேலி அமைத்து அறிவியல்பூா்வமான ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வை நிறைவு செய்த தொல்லியல் துறை, தனது 839 பக்க ஆய்வறிக்கையை சீலிட்ட உறையில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த டிசம்பா் 18-ஆம் தேதி சமா்ப்பித்தது.
هذه القصة من طبعة January 28, 2024 من Dinamani Chennai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Chennai
Dinamani Chennai
திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை
தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
1 min
May 18, 2026
Dinamani Chennai
ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதலை ஏற்க முடியாது
ஐ.நா.வில் இந்தியா
1 mins
May 18, 2026
Dinamani Chennai
புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு
ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.
2 mins
May 18, 2026
Dinamani Chennai
கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு
ராகுல், பிரியங்கா பங்கேற்பு
1 mins
May 18, 2026
Dinamani Chennai
ரஷியாவில் மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
இந்தியர் உள்பட 4 பேர் உயிரிழப்பு
1 min
May 18, 2026
Dinamani Chennai
ரயில் மறியல் போராட்டம்
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக இளைஞர் காங்கிரஸார் எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் விரைவு ரயிலை மறித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
May 18, 2026
Dinamani Chennai
திரைப்படக் கல்வியின் அவசியம்
மானுடத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு திரைப்படம். ஆனால், இங்கு ஒரு கலையாக, ஒரு சமூகத்தின் மனசாட்சியாக மலர்ந்திருக்க வேண்டிய தமிழ் திரைப்படங்கள் எப்படி மாறின?
3 mins
May 18, 2026
Dinamani Chennai
மருத்துவப் படிப்புடன் ஆராய்ச்சி திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்
பேராசிரியர் நாராயணசாமி
1 mins
May 18, 2026
Dinamani Chennai
ஐக்கிய அரபு அமீரகத்தில் அணுமின் நிலையத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்
ஈரான் மீது சந்தேகம்
1 min
May 18, 2026
Dinamani Chennai
பாஜகவின் 'ஹாட்ரிக்' வெற்றி!
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதும், தமிழ்நாட்டில் கட்சியைத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் நடிகர் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று வெற்றி பெற்றதும், மூன்றாவது முறையாக அஸ்ஸாமில் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.
2 mins
May 18, 2026
Listen
Translate
Change font size
