يحاول ذهب - حر

இந்த முன்னணி மாநாட்டில் அண்ணா, பெரியாரை சிறைப்படுத்தியுள்ளனர்; வீடியோ வெளியிட்டது மிகவும் தவறு

June 24, 2025

|

DINACHEITHI - NAGAI

மதுரையில் நேற்று முன்தினம் இந்துமுன்னணி சார்பில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், வீடியோ படம் ஒன்று திரையிடப்பட்டது. அதில் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் மற்றும் அண்ணா, பெரியார் போன்றோரை விமர்சிப்பது போன்ற காட்சிகளும், நாத்திக நரி, அதர்மம், போலி திராவிடம், வழிபாடு இல்லாத ஆலயமா, கடவுளை காணக்கூட நாணயமா? போன்ற வசனங்களுடன் இடம் பெற்றிருந்தன.

இந்த முன்னணி மாநாட்டில் அண்ணா, பெரியாரை சிறைப்படுத்தியுள்ளனர்; வீடியோ வெளியிட்டது மிகவும் தவறு

அதே வேளையில் இந்த மாநாட்டில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.டி. ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்று இருந்தனர். இந்த வீடியோ திரையில் ஒளிபரப்பானபோது, அவர்கள் எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாநாடு நிறைவு பெற்ற நிலையில் அண்ணா, பெரியார் குறித்து முருகன் மாநாட்டில் எழுந்த விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதொடர்பாக சிவகாசியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது :-

தி.மு.க. கூட்டணிக்கு ஒரு பயத்தை, ஒரு பீதியை முருக பக்தர்கள் மாநாடு உருவாக்கியிருக்கிறது. இதனால் அவர்கள் மாநாடு குறித்து மாற்று கருத்து தான் கூறுவார்கள். முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீகத்தின் அடையாளமாக ஒரு எழுச்சி மாநாடாக தான் அமைந்திருந்தது. முருக பக்தர்கள் மாநாட்டில் மக்கள் குவிந்ததன் காரணமாக மக்கள் மத்தியில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது. ஆளுகின்ற தி.மு.க. அரசிற்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது.

அ.தி.மு.க.வில் பா.ஜ.க. இருப்பதால்தான் தங்களால் அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்ல முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார். அவரது கருத்துக்கள் அவர் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வரக்கூடிய கருத்துக்கள். தி.மு.க. கட்சியோடு மனதளவில் உறவை முடித்துக் கொண்டார். பெயரளவில் மட்டுமே உறவு வைத்துள்ளார். திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணி வருவது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார்.

المزيد من القصص من DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - NAGAI

மதுரையில் 23-ந்தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்

கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடை ஏற்ற திட்டம்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - NAGAI

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - NAGAI

முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - NAGAI

ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி

முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NAGAI

தமிழக அமைச்சரவை கூட்டம்

ஆளுனர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NAGAI

உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - NAGAI

சென்னையில் புத்தகத் திருவிழா: வரும் 8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, வரும் ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.

time to read

1 min

January 06, 2026

DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI

வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

DINACHEITHI - NAGAI

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 9.14 லட்சம் பேர் விண்ணப்பம்

தேர்தல் ஆணையம் தகவல்

time to read

1 mins

January 06, 2026

Translate

Share

-
+

Change font size