يحاول ذهب - حر
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.846.47 கோடி மதிப்பீட்டிலான 1,234 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2,423 புதிய திட்டப் பணிகளுக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
July 11, 2025
|DINACHEITHI - DHARMAPURI
சென்னை ஜூலை 11தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (10.7.2025) திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 73 கோடியே 74 இலட்சம் ரூபாய் செலவில் 1234 முடிவுற்றபணிகளை திறந்து வைத்து, 172 கோடியே 18 இலட்சம்ரூபாய்மதிப்பீட்டிலான 2423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 600 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 67,181 பயனாளிகளுக்கு வழங்கினார்.
-
திருவாரூர் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், திருவாரூர் மாவட்டத்தின் புதிய ஊராட்சி மன்ற அலுவலகங்கள், பொது விநியோகக் கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், கோ-லொகேஷன் சென்டர், பள்ளிக் கட்டடங்கள், பொது நூலகக் கட்டடங்கள், பேருந்து நிழற்குடைகள், மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள், நேரடி கொள்முதல் நிலையங்கள், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் என மொத்தம் 42 கோடியே 8 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் 1209 முடிவுற்ற பணிகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் 9 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம், மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் 1 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் மாவட்ட ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகம், விஜயபுரம் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் 6 கோடி ரூபாய் செலவில் சீமாங்க் கட்டடம், ஆதிச்சபுரத்தில் 50 இலட்சம் ரூபாய் செலவில் பொது சுகாதார அலகு கட்டடம், பெரும்புகலூரில் 20 இலட்சம் ரூபாய் செலவில் துணை சுகாதார நிலையம், கூத்தாநல்லூரில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் செலவில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்;
பள்ளிக் கல்வித் துறை சார்பில், கடுவங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 52 இலட்சத்து 22 ஆயிரம் ரூபாய் செலவில் கலை பண்பாட்டு அறை, ஆய்வகம் மற்றும் நூலகம் கட்டடங்கள்: பொது நூலகத் துறை சார்பில், உள்ளிக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை மற்றும் எடையூர் ஆகிய இடங்களில் 66 இலட்சம் ரூபாய் செலவில் கிளை நூலகங்கள்;
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நன்னிலம் பேரூராட்சி, மணவாளன்பேட்டையில் 19 இலட்சம் ரூபாய் செலவில் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி;
கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கொற்கை கால்நடை பண்ணையில் 1 கோடியே 1 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் வற்றுப் பசுக்களுக்கான வலுவூட்டப்பட்ட கான்கிரீட் கொட்டகை, 1 கோடியே 1 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் கறவைப் பசுக்கள் மற்றும் கன்றுகளுக்கான கான்கிரீட் கொட்டகை, 25 இலட்சம் ரூபாய் செலவில் பண்ணை மேலாளர் அலுவலகக் கட்டடம், 30 இலட்சம் ரூபாய் செலவில் கறவைப் பசுக்களுக்கான கொட்டகை;
هذه القصة من طبعة July 11, 2025 من DINACHEITHI - DHARMAPURI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
ஒரே நாடு ஒரே தேர்தல்: தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு
ஒரே நாடு, ஒரே தேர்தல், மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
1 min
January 15, 2026
DINACHEITHI - DHARMAPURI
புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட வாழ்த்துகள்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது :-
1 min
January 15, 2026
DINACHEITHI - DHARMAPURI
பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்த்தப்படும்
அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
1 min
January 15, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை, என குறிப்பிட்டு, ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
1 min
January 14, 2026
DINACHEITHI - DHARMAPURI
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை
ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
1 min
January 14, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
January 14, 2026
DINACHEITHI - DHARMAPURI
மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயரப்போகிறதா?
பெண்களுக்கு இனிப்பான செய்தி
1 min
January 12, 2026
DINACHEITHI - DHARMAPURI
வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 10, 2026
DINACHEITHI - DHARMAPURI
சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்
1 min
January 09, 2026
DINACHEITHI - DHARMAPURI
சூடு பிடிக்கும் தேர்தல் களம்: ஜன.28-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை?
தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
1 min
January 08, 2026
Translate
Change font size
