يحاول ذهب - حر

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.517 கோடி செலவில் 90 முடிவுற்ற பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

June 27, 2025

|

DINACHEITHI - DHARMAPURI

60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,00,168 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக நேற்றுமுன்தினம் (25.6.2025) சென்னை, சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து வேலூர் புறப்பட்டுச் சென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு காட்பாடி இரயில் நிலையத்தில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், வேலூர், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடியே 81 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் வேலூர் மாவட்டத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வரும் நபர்களுக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ், நிலங்களை வரன்முறை செய்து 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

பின்னர், வேலூர் மாவட்டம், பூதூரில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன் தொடர்ச்சியாக, நேற்றைய தினம் (26.6.2025) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், 174 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் 90 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 68 கோடியே 76 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 273 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 1,00,168 பயனாளிகளுக்கு வழங்கினார்.

المزيد من القصص من DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஒரே நாடு ஒரே தேர்தல்: தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு

ஒரே நாடு, ஒரே தேர்தல், மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - DHARMAPURI

புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமைந்திட வாழ்த்துகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது :-

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்த்தப்படும்

அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

time to read

1 min

January 15, 2026

DINACHEITHI - DHARMAPURI

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை, என குறிப்பிட்டு, ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.

time to read

1 min

January 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை

ஒன்றிய மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

time to read

1 min

January 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 mins

January 14, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மகளிர் உரிமைத்தொகை 50 சதவீதம் உயரப்போகிறதா?

பெண்களுக்கு இனிப்பான செய்தி

time to read

1 min

January 12, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வருகிற 13-ந்தேதி கூடலூர் வருகிறார் ராகுல் காந்தி

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 10, 2026

DINACHEITHI - DHARMAPURI

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: ஜன.28-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை?

தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

time to read

1 min

January 08, 2026

Translate

Share

-
+

Change font size