يحاول ذهب - حر

விவாகரத்து அதிகரிச்சிருக்கு...ஆனா, சமூக கட்டமைப்பு அப்படியேதான் இருக்கு!

13-12-2024

|

Kungumam

சமீபத்தில் நடிகர்கள், இசையமைப்பாளர் நாடறிந்த பிரபலங்களின் விவாகரத்து செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

- 'பேராச்சி கண்ணன்

விவாகரத்து அதிகரிச்சிருக்கு...ஆனா, சமூக கட்டமைப்பு அப்படியேதான் இருக்கு!

செலிபிரிட்டீஸ் என்பதால் அவர்களின் விவாகரத்து அறிவிப்புகள் ஊடகங்கள் மூலம் பரவலான கவனம் பெற்றுவிடுகின்றன; சமூக வலைத்தளங்களில் வைரலாகின்றன.

ஆனால், சாதாரண தம்பதிகள் விவாகரத்துக் கோரி கோர்ட் படி ஏறி வரும் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளதாகச் சொல்கின்றனர் நிபுணர்கள்.

இதனால், சிங்கிள் பெற்றிங் என்ற நிலை தமிழ்ச் சமூகத்தில் உயர்ந்து வருவதாகச் சொல்கின்றனர்.

இதற்கு என்ன காரணம்? விவாகரத்து ஏன் அதிகரிக்கிறது என்பது குறித்து துறை சார்ந்தவர்களிடம் பேசினோம்.

முதலில் மூத்த வழக்கறிஞரான கே.சாந்தகுமாரி "முன்பெல்லாம் திருமணம் என்பது புனிதமான பந்தமாக பார்த்தோம். ஆனால் இப்போது திருமண பந்தங்கள், உறவுகள் சம்பந்தமான விஷயங்களில் நிறைய மாற்றங்கள் சிந்தனை ரீதியாக வந்திருக்கின்றன. அதனால் விவாகரத்து கூடுகின்றது..." என்றபடி பேசத் தொடங்கினார்.

"முன்பு அடிச்சாலும் புடிச்சாலும் புருஷன். அவருடன்தான் வாழ்ந்தாகணும். ஏன்னா, அப்ப பெண்கள் வேலைக்குப் போகல. ஆண்கள்தான் பொருளாதார ரீதியாக குடும்பத்தை கவனித்தார்கள். எனவே, ஆண் இல்லாவிட்டால் பெண் தனியாக வாழவே முடியாது. குழந்தைகளை வளர்க்க முடியாது.

அப்படிப்பட்ட சூழலில் எல்லாத்தையும் பொறுத்துக்கொண்டு போகும் நிலை இருந்தது.

இப்ப, பெண்கள் நன்கு கல்வி கற்றவர்களாக இருக்கின்றனர். கேரளாவுக்கு அடுத்தபடி பெண்கள் அதிகம் படித்த மாநிலமாக தமிழகம் இருக்குது.

இந்தப் படிப்பறிவினால் நல்ல வேலைக்குப் போகின்றனர். பொருளாதார ரீதியாக தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்வதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கின்றனர்.

அதனால், முன்னாள் கணவன் அடிப்பதை பொறுத்துக்கொண்டு போவது அவசியம் என்று நினைக்கவில்லை.

விவாகரத்தை ஒரு பெண், மனைவியாக இருந்து மட்டும் எடுக்கும் முடிவல்ல. நிறைய இடங்களில் கணவர்கள் குடித்து வந்து அடிக்கின்றனர், கெட்டவார்த்தைகள் பேசுகின்றனர்... இப்படியாக பல சிக்கல்கள்.

இதில் மனைவியுடன் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்.

அவங்கள் மனநிலையும் பாதிக்கப்படுகிறது. அப்ப அதையும் யோசித்து, நாம் பேசாமல் தனியாக வந்துடலாமென்று நினைக்கின்றனர்.

இதில் தப்பு இருக்கிற மாதிரி தெரியவில்லை.

المزيد من القصص من Kungumam

Kungumam

Kungumam

லாக்டவுனில் உருவாகிய சதிர்ஙக இளவரசி!

சமீபத்தில் ரோட்ஸ் தீவில் ஐரோப்பியன் கிளப் கோப்பைக்கான சதுரங்கப் போட்டிகள் நடந்தன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

Apple Free!

சின்ன வயசில் எங்கள் பள்ளியில் சர்க்கரை ஆலை ஒன்றிற்கு எக்ஸ்கர்ஷன் அழைத்துச் சென்றார்கள்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

பாஸ்...நான் Pass!

\"எந்தப் படத்துக்கும் இப்படி நான் இவ்வளவு தயாரானதில்லை. நேரமும் கொடுத்ததே இல்லை.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இதைப் படிச்சுட்டு வெளிநாடு போங்க!

அயல்நாட்டுப் பயணங்களுக்கான ரூபாக்ஸ் அட்டையில் பெரும் 14 நாடுகளின் நாணயங்கள் மட்டுமே இடம் பெறுகின்றன.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழக கபடி எக்ஸ்பிரஸ்!

சமீபத்தில் பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

இந்தியாவில் ஒரு மாநில செயலகத்தை வடிவமைத்த முதல் பெண்!

இந்திய அரசியலமைப்பின் சிற்பி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைச் சூடி, ஹைதராபாத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது தெலங்கானா மாநிலச் செயலகம்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஆர்யன் பார்த்ததும் ராட்சசன் கூட ஒப்பிட மாட்டீங்க...

ஏனெனில் 'ராட்சசன்' த்ரில்லர் ஜானரில் வெளிவந்த படங்களில் தனித்துவமாக இருந்துச்சு.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ம்க்கும்....ரொம்ப முக்கியம்!

பின்வரும் விவரங்கள் திரைப் பிரபலங்கள் படங்களில் அடிக்கடி பயன்படுத்தும் கதாபாத்திரப் பெயர்களைக் குறிக்கின்றன:

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

ஜப்பானின் முதல் பெண் பிரதமர்!

சமீபத்தில் சனாயே டகாய்ச்சி என்ற பெண்ணை ஜப்பானின் பிரதமராகத் தேர்வு செய்திருப்பதுதான் உலக அரசியலில் ஹாட் நியூஸ்.

time to read

1 min

7-11-2025

Kungumam

Kungumam

தமிழ்ப் படம் 3

கோலிவுட்டில் இதுதான் இப்பொழுது ஹாட் டாக். தமிழ்ப் படங்களை கலாய்த்து மிர்ச்சி சிவா நடிப்பில், 'தமிழ்ப் படம்' என்ற காவியத்தை இயக்குநர் சி.எஸ். அமுதன் எழுதி இயக்கினார்.

time to read

1 min

7-11-2025

Translate

Share

-
+

Change font size