செங்கல்பட்டு To தாதா சாகேப் பால்கே!
Kungumam|13-10-2023
இந்தியளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்த ஆண்டு பாலிவுட் மூத்த நடிகை வஹீதா ரஹ்மான் பெறுகிறார். 1960 - 70களில் பாலிவுட் வெள்ளித்திரையை ஆண்ட வஹீதா ரஹ்மான், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர் என்பது சுவாரஸ்யமான விஷயம்!
ஜான்சி
செங்கல்பட்டு To தாதா சாகேப் பால்கே!

செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்த தக்னி முஸ்லிம் மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள் முகமது அப்துர் ரஹ்மான் - மும்தாஜ் பேகம் தம்பதி. அப்துர் ரஹ்மான், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றியவர்.

இந்த தம்பதிக்கு நான்கு மகள்கள். இவர்களில் கடைக்குட்டிதான் வஹீதா ரஹ்மான். 1938 பிப்ரவரி 3 அன்று பிறந்தார். சிறு வயதாக இருக்கும் போதே, இவரும் இவரது சகோதரிகளும் சென்னையில் பரத நாட்டியம் பயின்றனர்.

இப்படி நாட்டியம் பயின்றாலும் உண்மையில் வஹீதாவுக்கு மருத்துவராக வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், காலம் இவரை நடிகையாக அழகு பார்த்தது.குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வஹீதா வாழ்ந்து வந்தபோது ஒருநாள் இடி இறங்கியது.

ஆம். வஹீதாவின் இளமைக் காலத்திலேயே அவரது தந்தை அப்துர் ரஹ்மான் திடீரென்று காலமானார். விளைவு, குடும்பம் நிலைகுலைந்தது. அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் போனது. போதும் போதாததற்கு குடும்பத்தின் பொருளாதார நிலையும் கவலைக்கிடமானது.

இச்சூழலில் தனது கனவான மருத்துவர் ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டு, கற்றுக்கொண்ட பரதம் துணையுடன் சினிமாவில் நடனக் கலைஞராக நுழைந்தார் வஹீதா ரஹ்மான்.

1955ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஜெய்சிம்மா’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதே ஆண்டு தெலுங்கில் வெளியான அக்கினேனி நாகேஸ்வர ராவின் ‘ரோஜுலு மாராயி’ (Rojulu Marayi) படத்தில் ஒரு நாட்டுப்புற பாடலில் மட்டும் நடனமாடினார். தொடர்ந்து தமிழில் எம்ஜிஆர், பி. பானுமதி நடிப்பில் வெளியான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ (1956) திரைப்படத்திலும் நடித்தார்.

இக்காலத்தில்தான் தற்செயலாக, இந்தி திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான குருதத் பார்வையில் வஹீதா விழுந்தார்.அதன்பிறகு இவரது வாழ்க்கை, இவரே எதிர்பார்க்காத அளவுக்கு மாறியது.உண்மையில் இதற்காக ஒரு எருமை மாட்டுக்குத்தான் வஹீதா நன்றி சொல்ல வேண்டும்!ஆம். குருதத் வாழ்க்கையில் ஒரு எருமை மாடு குறுக்கிட்டதன் வாயிலாகத்தான், அவர் வஹீதா ரஹ்மானைக் கண்டடைந்தார்.

This story is from the 13-10-2023 edition of Kungumam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the 13-10-2023 edition of Kungumam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM KUNGUMAMView All
ரூ.2 கோடி வேண்டாம்!
Kungumam

ரூ.2 கோடி வேண்டாம்!

நடிகைகள் தங்களது திருமண வைபவத்தை இப்பொழுதெல்லாம் பணமாக்கும் வித்தையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். திருமணம் முடிவானதுமே, அவர்கள் செய்யும் முதல் வேலை, தங்களது மானேஜர்களை விட்டு ஏதாவது ஓடிடி தளத்தில் பேசச் சொல்வதுதான்.

time-read
1 min  |
26-04-2024
ப்ளஸ்ஸே மைனஸ் ஆன கீர்த்தி சுரேஷ்.!
Kungumam

ப்ளஸ்ஸே மைனஸ் ஆன கீர்த்தி சுரேஷ்.!

இட்லியை குறுக்குவாக்கில் இரண்டு ஸ்லைஸ் ஆக வெட்டி கன்னத்தில் ஒட்டிவைத்தால் எப்படியிருக்குமோ, அப்படியொரு கொழுகொழு கன்னங்களோடும் அழகாய் உருட்டிப் பேசும் கண்களோடும் நடித்து அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.

time-read
1 min  |
26-04-2024
விஜய் 69ல் ஹெச். வினோத்?
Kungumam

விஜய் 69ல் ஹெச். வினோத்?

‘‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு என்னுடைய அடுத்த படத்தை இயக்கப் போவது இவர்தான்’ என கமல் எங்கு சென்றாலும் தன்னுடனேயே அழைத்துச் சென்ற ஹெச். வினோத், இப்போது ‘விஜய் 69’ படத்தை இயக்கப் போவதாக செய்திகள் கசிகின்றன.

time-read
1 min  |
26-04-2024
சூர்யாவுடன் அருவா டிராப் ஆனது பத்தி பேச விரும்பலை...ரத்னம் பத்தி நிறைய பேசலாம்!
Kungumam

சூர்யாவுடன் அருவா டிராப் ஆனது பத்தி பேச விரும்பலை...ரத்னம் பத்தி நிறைய பேசலாம்!

‘தமிழ்’, ‘சாமி”, ‘ஐயா’, ‘தாமிர பரணி', 'சிங்கம்', 'யானை' என பல வெற்றிப் படங்களைத் தந்த முன்னணி இயக்குநரான ஹரி, இப்போது மூன்றாவது முறை யாக விஷாலுடன் இணைந்து ‘ரத்னம்' படத்தை இயக்கியுள்ளார்.

time-read
3 mins  |
26-04-2024
திருவாரூர் தினேஷ்... சினிமாவுக்காக தீனா
Kungumam

திருவாரூர் தினேஷ்... சினிமாவுக்காக தீனா

நடிகர் தீனாவிற்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. ‘கைதி’ படம் மூலம் ரசிகர்களின் இதயத்திற்குள் நுழைந்தவர். விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் முத்திரை பதித்தவர். இப்போது காமெடி நடிகராக மட்டுமில்லாமல் ஸ்கிரிப்ட் ரைட்டராகவும், டயலாக் ரைட்டராகவும் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.சமீபத்தில் வெளியான ‘கள்வன்’ திரைப்படம் ஒரு நடிகராக தீனாவை இன்னும் கவனிக்க வைத்திருக்கிறது.

time-read
2 mins  |
26-04-2024
உலகின் விதைப் பெட்டகம்!
Kungumam

உலகின் விதைப் பெட்டகம்!

24 மணிநேரமும் சூரியன் இருக்கும் இத்தீவில்தான் உலகின் 13 லட்சம் பயிர் விதைகள் பாதுகாக்கப்படுகின்றன!

time-read
3 mins  |
26-04-2024
இந்தியப் பெண்கள் அதிகம் பாதிப்படைய வப்பம் காரணமா.?
Kungumam

இந்தியப் பெண்கள் அதிகம் பாதிப்படைய வப்பம் காரணமா.?

‘‘2010 மற்றும் 2019க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆண்களின் இறப்பைவிட பெண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருந்ததை வைத்து பார்க்கும்போது ஒருவேளை இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலைகள்தான் இந்த இறப்புக்கு காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது...’’ என்று சொல்கிறது அண்மைய ஆய்வு ஒன்று.

time-read
1 min  |
26-04-2024
மீண்டும் கமல்...மீண்டும் அபிராமி
Kungumam

மீண்டும் கமல்...மீண்டும் அபிராமி

உன்னை விட இந்த உல -கத்தில் ஒசந்தது யாரும் இல்ல...' என்ற 'விருமாண்டி' பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனசுக்குள் மத்தாப்பாக வந்து போகும் அசத்தல் அழகி அபிராமி.

time-read
1 min  |
26-04-2024
மகாபலிபுரம் to சென்னை...
Kungumam

மகாபலிபுரம் to சென்னை...

நீச்சலில் சாதித்த, ஆட்டிசம் குறைபாடுள்ள சிறுவன்.

time-read
4 mins  |
26-04-2024
2024 Pan India நடிகைகள் இவர்கள்தான்!
Kungumam

2024 Pan India நடிகைகள் இவர்கள்தான்!

ஒரு நடிகை நம்பர் ஒன் இடத்திற்கு செல்வதும், அவரின் சம்பளம் அதிகரிப்பதும் அவர் நடிக்கும் படங்களைப் பொருத்ததுதான்.

time-read
1 min  |
26-04-2024