Denemek ALTIN - Özgür
அகிலத்தின் தாயான அகிலாண்டேஸ்வரி
Aanmigam Palan
|July 01, 2024
அன்று சர்வாலங்கார பூஷிதையாக அகலமான கரை போட்ட பச்சைநிற பட்டுப்புடவையில் ஜொலித்தாள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி.
அம்பிகையைத் தரிசித்த ராஜலட்சுமி அம்மாள், கண்களில் நீர்வீழ்ச்சியாக வழிந்தது! புடவை தலைப்பால், தன் கண்களைத் துடைத்துக் கொண்டவர், “அம்மா அகிலாண்டேஸ்வரி... இந்த உலகத்துக்கு தாயான உன்னோட காலடியில சரணடைந்து இருக்கிறதாலதான் மனநிம்மதியோடு நான் இருக்கேன்! சகல ஜீவராசிகளையும் எப்பவும் காப்பாத்திக்கிட்டு இருக்கணும்” என்று மனம் உருக வேண்டிக்கொண்டார். வெளியே வந்தோம். குளிர்ந்த காற்று வீசியது. அப்போது இரவு மணி 9.30 இருக்கும்!
"நேரம் ஆயிடுச்சே... நீங்க ஒண்ணும் சாப்பிடலையே" என்று கேட்டேன்.
"மத்தியானமே ரெண்டு பூவன் வாழைப்பழம் வாங்கி வெச்சுட்டேன். ராத்திரி சாப்பாடு அவ்வளவுதான்! அது சரி... நீ என்ன பண்ணப்போறே?" என்றார் அவர்.
"திருச்சியில போய் சாப்பிடுவேன்!” என்றேன்.
"அப்படியானால் நீ சீக்கிரம் புறப்படு. நாளைக்கு சாயந்திரம் வந்துடு. ஏன்னா... இனிமேதான் என் வாழ்க்கை சரித்திரத்தில் சுவாரஸ்யமெல்லாம் வரப்போகுது!" என்று சிரித்தார் ராஜலட்சுமி அம்மாள். நானும் சிரித்தபடியே புறப்பட்டேன். மறுநாள் மாலை 5 மணிக்கே அன்னை அகிலாண்டேஸ்வரியின் கோபுர வாசலில் நின்றேன். அந்தத் திண்ணையில், பளிச் செந்நெற்றியில் திருநீறு துலங்க அமர்ந்திருந்தார் ராஜலட்சுமி அம்மாள். நானும் திண்ணைக்குச் சென்று அவரை வணங்கி விட்டு, அருகில் அமர்ந்தேன். புன்னகையுடன் என்னை நோக்கிய ராஜலட்சுமி அம்மாள், "நேத்திக்கு விட்ட இடத்துலேர்ந்து மீதியைச் சொல்றேன்... கேளு!" என்று கூற ஆரம்பித்தார்:
"மகளுக்குக் ஒருவழியா கல்யாணம் முடிஞ்சுதுன்னு சொன்னேன் இல்லையா... அடுத்து, மூத்தவன் சங்கர நாராயணனுக்கும் நல்ல வரனா தேட ஆரம்பிச்சோம். கோயம்புத்தூர்ல இருந்து ஒரு ஜாதகம் வந்தது. நல்லா பொருந்தி இருந்தது. பேரு ஜானகி. ஆனா, பொண்ணோட படிப்பு என்னவோ எட்டாம் வகுப்புதான். அதனால், நானும் என் கணவரும் கொஞ்சம் யோசிச்சோம். ஆனால், எங்க புள்ளையோ துளிகூட யோசிக்கலே! அந்தப் பெண் பார்க்க லட்சணமா இருந்ததால், 'இவளைத்தான் கல்யாணம் பண்ணிப் பேனுட்டான். அப்புறமென்ன... ஒரு நல்ல நாள்ல பாக்கு, வெத்தலை மாத்தியாச்சு! முகூர்த்த தேதியையும் நிச்சயப்படுத்திட்டோம். ஒரு தைமாசம் திருமணம் விமரிசையா நடந்து முடிஞ்சுது.
Bu hikaye Aanmigam Palan dergisinin July 01, 2024 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Aanmigam Palan'den DAHA FAZLA HİKAYE
Aanmigam Palan
-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!
நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.
3 mins
March 16-31, 2026
Aanmigam Palan
புராணங்கள் சுட்டும் இலக்கு
பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா
அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.
5 mins
March 16-31, 2026
Aanmigam Palan
வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?
வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
திருப்பதி
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:
1 min
March 16-31, 2026
Aanmigam Palan
அகோர மூர்த்தி
திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.
1 mins
March 16-31, 2026
Aanmigam Palan
தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி
தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.
2 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பக்த மீராபாய்
உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.
6 mins
March 16-31, 2026
Aanmigam Palan
பெரியாழ்வாரும் நாச்சியாரும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.
5 mins
March 16-31, 2026
Translate
Change font size

