Denemek ALTIN - Özgür
பாகிஸ்தானின் கபட நாடகம்!
Dinamani Tirunelveli
|November 25, 2025
புதுதில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டை பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 10.11.2025 அன்று காரை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்; முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
புதுதில்லியில் நெரிசல் மிக்க செங் கோட்டை பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 10.11.2025 அன்று காரை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக் குதலில் 13 பேர் உயிரிழந்தனர்; முப்பதுக் கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த பயங்கரவாத சம்பவத்தில் சந்தே கிக்கப்படும் பலர் ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதிலுள்ள அல்-ஃபலா பல் கலைக்கழகத்தில் படித்தவர்களாகவோ, பணியாற்றியவர்களாகவோ உள்ளனர். மேலும், நன்கு படித்த வருமானம் ஈட்டும் பலர் ஜெய்ஷா-ஏ-முகமது, அன்சார்- கஸ்வத்-அல்-ஹிந்த் ஆகிய பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள் ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், நாட்டையே உலுக்கிய இந்த தேசவிரோத பயங்கரவா தச் செயலில் ஈடுபட்டு உயிரிழந்த மருத் துவர் உமர் நபியுடன் இணைந்து சதித் திட்டம் வகுத்ததாக காஷ்மீரைச் சேர்ந்த அமீர் ரஷீத் அலி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூர கார் வெடிப்புச் சம்ப வத்தை நிகழ்த்தி உயிரிழந்த மருத்துவர் உமர் நபி மற்றும் கைதான மருத்துவர்கள் முஸாமில் கனி, ஷாஹீன் உள்ளிட்டோ ருக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்- ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு ஹாவாலா பரிமாற்றம் மூலம் ரூ.20 லட்சம் அனுப்பியது தெரியவந்துள்ளது.
இந்தத் தேச விரோத பயங்கரவா தச் செயலை திசைதிருப்பும் வகையில், அதற்கு அடுத்த நாள், அதாவது 11.11.2025 அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் மாவட்ட நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த தற்கொலை குண்டு வெடிப்பில் 12 பேர் உயி ரிழந்தனர். இதற்குக் காரணம் இந்தியாதான் என்றும், பாகிஸ்தானின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் இந்தியா இது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருவதாக, இத்துயரச் சம்பவம் குறித்து தீர விசாரிக்காமல் பாகிஸ்தான் பிரத மர் ஷாபாஸ் ஷெரீஃப் குற்றஞ்சாட்டினார்.
இதை மறுத்த இந்திய வெளியுறவுத் துறை, 'பாகிஸ்தான் பிரதமரின் இந்தக் குற்றச்சாட்டு முகாந்திரமற்றது. அந்த நாட்டின் ராணுவம், அரசமைப்புச் சாச னத்தைச் சீர்குலைத்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதால் எழுந்துள்ள குழப் பத்தை திசைதிருப்ப இந்தியா மீது பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. இது அந்த நாட்டின் வழக்கமான ஓர் உத்திதான்' எனத் தெரிவித்தது.
Bu hikaye Dinamani Tirunelveli dergisinin November 25, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tirunelveli'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tirunelveli
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Tirunelveli
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Dinamani Tirunelveli
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
December 02, 2025
Dinamani Tirunelveli
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Tirunelveli
உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை
நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
December 02, 2025
Dinamani Tirunelveli
கேரள முதல்வருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்
கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்துக்கு (கேஐஐஎஃப்பி) மாநில அரசு கடன் பத்திரங்கள் மூலம் பெற்ற வெளிநாட்டு முதலீடுகளில் பண முறைகேடு நடந்ததாக கூறி, முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலர் கே.எம். ஆப்ரகாம் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
1 min
December 02, 2025
Dinamani Tirunelveli
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Tirunelveli
இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்
மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்
1 min
December 02, 2025
Dinamani Tirunelveli
எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்
நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 mins
December 01, 2025
Dinamani Tirunelveli
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Listen
Translate
Change font size

