![கலப்பட மசாலா...கவனம்?](https://cdn.magzter.com/1334577211/1715831176/articles/H6BpApw_71716294340703/1716294589036.jpg)
பிரபல நிறுவனங்களில் பெயரில் போலி உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் டெல்லியுன் வடகிழக்கு பகுதியில் தொழிற்சாலை அமைத்து கலப்படம் செய்யப்பட்ட மசாலா பொருட்களை தயாரித்து விற்பனை செய்தவர்களை அண்மையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்தப் போலி தயாரிப்பாளர்கள், மரத்தூள், ஆசிட் உள்ளிட்ட சில தேவையற்ற பொருட்களை கலந்து மசாலாவாக்கி பல்வேறு முன்னணி நிறுவனங்களின பெயர்களில் போலி மசாலா பொருட்களை தயாரித்து டெல்லி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகள் மூலம் விற்பனை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தொழிற்சாலையின் உரிமையாளர்களான திலிப் சிங் (46), சர்ஃப்ராஜ் (32) ஆகியோரையும் போலி மசாலாப் பொருட்களை அருகிலுள்ள கடைகளுக்கு விற்று வந்த குர்ஷித் மாலிக் (42) என்பவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 1,2 அல்ல, 15 டன் எடையுள்ள போலி மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, மசாலா பொருட்களில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 7,215 கிலோ எடையிலான கெட்டுப்போன அரிசி, சிறு தானியங்கள், தேங்காய்கள், மல்லி விதைகள், குறைந்த தரத்திலான மஞ்சள், யூகலிப்டஸ் இலைகள், மரத்தூள், சிட்ரிக் ஆசிட் மற்றும் தடை செய்யப்பட்ட செயற்கை நிறமிகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இங்கு பிரபல நிறுவனங்களின் மசாலாக்களை எல்லாம் போலியாக தயரித்துக் கொண்டிருக்கும் வேளையில், வெளிநாட்டில் நம் பிரபல நிறுவனங்களின் மசாலாக்களையே போலி என சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவின் முன்னணி மசாலா பிராண்டுகளான எம்டிஎச், எவரெஸ்ட் ஆகியவற்றில் சில மசாலா பொருட்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, அதில் சில வகைகளில் எத்திலியின் ஆக்சைடு அதிகளவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதை நீண்ட நாட்களுக்கு உட்கொண்டால் புற்றுநோய் அபாயங்கள் அதிகரிக்கும் என்பதால் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் இந்த பிராண்டுகளின் சில மசாலாக்கள் தடை செய்யப்பட்டன.
This story is from the May 22, 2024 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 22, 2024 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![வழிகாட்டிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1712975/dUmAzM2Y21716902680362/1716903082209.jpg)
வழிகாட்டிகள்!
அரசுப் பணியில் நாள்தோறும் காவல்துறை வழக்கு சார்ந்த மருத்துவப் பணிகளை பலவிதமாக பார்த்திருப்பதால் அவற்றை குறித்து சாட்சியம் சொல்வதற்காக நான் அடிக்கடி பல்வேறு நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
![தொடரும் இயற்கை சீற்றங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1712975/aGoS7kDyO1716902398896/1716903077941.jpg)
தொடரும் இயற்கை சீற்றங்கள்!
நாம் அறிந்த இயற்கை சீற்றங்கள்தாம் என்றாலும், எதிர்பாராதவிதமாக திடீரென ஏற்பட்டு நம்மை அதிர்ச்சி க்குள்ளாக்கும் சம்பவங்கள்... காலநிலை மாறுபாடு ஏற்பட்டுவிட்டதை எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்று புழுதிப்புயல்.
![காலியிடத்தை நிரப்ப வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1712975/P6oqXlvpw1716902266162/1716903072364.jpg)
காலியிடத்தை நிரப்ப வேண்டும்!
வள்ளிமயில் படத்தில் விஜய் ஆன்டனி ஜோடியாக நடித்து வரும் பரியா அப்துல்லா தன் திரையுலக அறிமுகம் குறித்து மனம் திறந்தவை வாசர்களுக்காக.
![காபி குடிக்கலாமா?](https://reseuro.magzter.com/100x125/articles/711/1712975/WlsPCqfaV1716902002775/1716903066391.jpg)
காபி குடிக்கலாமா?
காலையில் எழுந்தவுடன் சூடான காபி அல்லது தேநீர் இல்லாமல் பலருக்கும் பொழுதே விடியாது.
![ரீல்ஸ் அழக்கள்...](https://reseuro.magzter.com/100x125/articles/711/1712975/wglKiEnGm1716901519494/1716903061952.jpg)
ரீல்ஸ் அழக்கள்...
சோஷியல் மீடியா பயன்பாடு நாளுக்கு அதிகரித்து வரும் சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனும் கையுமாகத் தான் தங்கள் பொன்னான நாளை தொடங்குகிறார்கள்.
![ராஜா வேடம்...விரட்டிய நாய்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1712975/r-9RE7efT1716901008494/1716903047183.jpg)
ராஜா வேடம்...விரட்டிய நாய்!
சிவாஜி உசரத்துக்கு அந்த மைக் சரியாக இருந்தாலும் கூட, நம்ம தம்பி பாஸ்கருக்கு மைக்க அட்ஜஸ் பண்ணியே தீரணுங்கிற ஒரு பெரிய ஆர்வம் ஏற்பட்டுடுச்சு.
![கண்டேன் காதலை!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1712975/ekCOgGUKM1716900668834/1716903032696.jpg)
கண்டேன் காதலை!
வாசலில் கட்டியிருந்த 'மா இலை தோரணம் காற்றில் அசைந்தாடி 'சரக்சரக்'கென்ற சத்தத்தை எழுப்பிக் கொண்டிருக்க, அந்த வீட்டின் உள்ளும் மனிதர்களின் நடையின் உரசலில் 'சரக்சரக்' சத்தம் உருவாகி காற்றில் கலந்திருந்தது.
![நீர்நிலை மாசு....குறையும் வலசை வரும் பறவைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1712975/hXkHdseNr1716900246504/1716903005596.jpg)
நீர்நிலை மாசு....குறையும் வலசை வரும் பறவைகள்!
ஒவ்வொரு ஆண்டும் பறவைகள், கண்டங்கள் மற்றும் பெருங்கடல்களில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் பறந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது வழக்கம்.
![எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கு!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1712975/-jQEshhE51716899966908/1716902675181.jpg)
எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கு!
நெடுஞ்சாலை படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை ஷிவதா. ஜீரோ, அதே கண்கள், மாறா, நித்தம் ஒரு வானம்,தீரா காதல் உள்பட பல படங்களில் நடித்துள்ள இவர் திரைத்துறையில் 10வருடங்களைக் கடந்துள்ளார்.
![வெட்டிச்செலவு செய்யும் இந்தியர்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/711/1712975/Xa5XSmk-M1716899515889/1716902397701.jpg)
வெட்டிச்செலவு செய்யும் இந்தியர்கள்!
ஒரு காலத்தில் ஒவ்வொரு காசையும் எண்ணியும், யோசித்தும் செலவழித்த நம்மவர்கள், இப்போது 'பட், பட்' டென்று செலவழித்து தள்ளுகிறார்கள். காரணம் யுபிஐ என்னும் டிஜிட்டல் பேமெண்ட்.