பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தொழில் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற வேதன நிர்ணயசபை பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், தொழில் அமைச்சில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபை இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கூடியது.
பல வாத விவாதங்கள் பல வர்த்தமானிகள் பல வழக்குகள் என நீண்டு கொண்டு சென்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பிலான இழுபறி நிலைமைக்கு முற்றுப்புள்ளி பெறப்பட்டுள்ளது.
அரசாங்கமும் தொழில் அமைச்சும் சம்பள நிர்ணய சபையும் ஒன்றிணைந்து அடிப்படை சம்பளத்தை உறுதி செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு உள்ளது.
அடிப்படை சம்பளம் 1,350 ரூபாய் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி சேவைக்கால கொடுப்பனவு என்பன 1,350 ரூபாய் அடிப்படை சம்பளத்திற்கே வழங்கப்படும். epf/etf 15 சதவீதம் தொழில் தருநர்களினால் வழங்கப்படும் அதனையும் ஒன்று சேர்த்தால் ஒரு நாள் தொழிலுக்குச் செல்லும் பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவருக்கு 1,552 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் . இன்றிலிருந்து இதனை நடைமுறைப்படுத்த விசேட வர்த்தமானி வெளியிடப்படும் என்றார்.
This story is from the September 11, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 11, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கொம்புடன் கூடிய மண்டை ஓடு ஏலம்
நாகா இனத்தைச் சேர்ந்த 19ஆம் நூற்றாண்டு மனிதர் ஒருவரின் கொம்புடன் கூடிய மண்டை ஓடு பிரிட்டனில் புதன்கிழமை (09) ஏலம் விடப்பட்டது.
இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டை தவறவிடும் வில்லியம்சன்
இலங்கைக்கெதிரான தொடரில் ஏற்பட்ட அடிவயிற்றுப் பகுதி உபாதை காரணமாக நியூசிலாந்திலிருந்து கேன் வில்லியம்சன் புறப்படுவது தாமதமாவதன் காரணமாக இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டை அவர் தவறவிடவுள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து காணப்படுகின்றது.
சகலதுறைவீரர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய பாண்டியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இந்தியாவின் ஹர்திக் பாண்டியா முன்னேறியுள்ளார்.
பிரேசிலில் எக்ஸ் மீதான தடை நீக்கம்
பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க்.
பாடசாலையிடம் விளக்கம் கோர தீர்மானம்
தாமரை கோபுரத்திலிருந்து குதித்து மாணவி உயிர்மாய்த்த சம்பவம் குறித்து குறிப்பிட்ட பாடசாலையிடம் விளக்கம் கோர கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
அமெரிக்க அட்மிரல் இலங்கைக்கு விஜயம்
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பினைப் பலப்படுத்துவதற்காக
பிணை நிபந்தனை உறுதிக்குப்பின் வைத்தியர் அருச்சுனாவுக்கு பிணை
எம்.ஹொசாந்த் பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என வைத்தியர் அருச்சுனா உறுதி அளித்ததை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால், புதன்கிழமை (09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
"சலுகைகளை குறைக்கும் எண்ணமே இல்லை”
\"அரசாங்கத்தினால் முப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்படுவது தொடர்பில் ஊடகங்களில் தவறான வதந்திகள் பரப்பப்படுவதாக நான் அறிந்தேன்.
மீண்டும் வெளியேறினார் சாள்ஸ்
எஸ்.ஆர்.லெம்பேட் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.