2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா, நடப்பு சாம்பியனாக பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு வந்தாா். இறுதிச்சுற்றில் அவா் 89.45 மீட்டரை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா். பாகிஸ்தானின் அா்ஷத் நதீம் 92.97 மீட்டரை எட்டி ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வெல்ல, கிரெனாடாவின் ஆண்டா்சன் பீட்டா்ஸ் 88.54 மீட்டருடன் வெண்கலம் பெற்றாா்.
தற்போது நீரஜுக்கு வெள்ளி வென்று தந்திருக்கும் 89.45 மீட்டா் என்பது அவரது சீசன் பெஸ்ட்டாக இருந்தாலும், அவரது தனிப்பட்ட பெஸ்ட் 89.94 மீட்டா் ஆகும். நடப்பு உலக சாம்பியனாகவும், டையமண்ட் லீக்கில் வெள்ளி வென்றவராகவும் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு வந்த நீரஜ் சோப்ரா மீதான எதிா்பாா்ப்பு அதிகமாகவே இருந்தது. முதல் முயற்சியை தடுமாற்றத்துடன் ‘ஃபௌல்’ செய்த நீரஜ், அடுத்த முயற்சியில் 89.45 மீட்டரைத் தொட்டு வெள்ளிக்கு வித்திட்டாா்.
90 மீட்டரை தனக்கான இலக்காகக் கொண்டு பயணித்து வரும் நீரஜ் சோப்ரா, எஞ்சிய 4 முயற்சிகளில் நிச்சயம் அந்தத் தொலைவை எட்டுவாா் என எதிா்பாா்த்த நிலையில், அவை அனைத்தையுமே அவா் ‘ஃபௌல்’ செய்தாா். அதாவது வெற்றிகரமான 2-ஆவது முயற்சி தவிர, எஞ்சிய 5 முயற்சிகளையும் அவா் ஃபௌல் செய்தது அனைவரையும் ஆச்சா்யம் கொள்ளச் செய்தது. பந்தயத்தில் வேறு எந்த வீரருமே இத்தனை ஃபௌல்கள் செய்யவில்லை.
இந்நிலையில், இறுதிச்சுற்றில் தனது செயல்பாடு குறித்து நீரஜ் சோப்ரா கூறியதாவது:
ஒவ்வொரு முயற்சியையும் கையாளும்போது, 60 முதல் 70 சதவீத கவனம் எனது காயத்தின் மீதே இருந்தது. ஈட்டியை எறிவதற்கு முந்தைய எனது ஓட்டம் நன்றாக வரவில்லை. எனது வேகமும் வழக்கமான உச்சத்தை அடையவில்லை. எனது இந்தத் தடுமாற்றங்களுக்குக் காரணம், தொடையிடைப் பகுதியில் இருக்கும் காயமே ஆகும்.
This story is from the August 10, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 10, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தவெக நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கட்சியின் முக்கிய நிா்வாகிகளுடன் அதன் தலைவா் விஜய் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
வியத்நாம் யாகி புயல்: உயிரிழப்பு 59-ஆக உயர்வு
வியத்நாமில் வீசிய யாகி புயல் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 59-ஆக உயா்ந்தது.
சிரியா: இஸ்ரேல் தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு
சிரியாவில் இஸ்ரேல் நடத்திய சரமாரி ஏவுகணைத் தாக்குதலில் 25 போ் உயிரிழந்தனா்.
நிசங்கா சதம்: இலங்கைக்கு ஆறுதல் வெற்றி
இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்டில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது.
இஸ்ரேல்-ஹமாஸ் உடனடி போர் நிறுத்தத்துக்கு இந்தியா ஆதரவு - ஜெய்சங்கர்
பதினோரு மாதங்களாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை உடனடியாக நிறுத்துவதற்கு இந்தியா ஆதரவளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாருடன் மத்திய அமைச்சர் அமித் ஷா சந்திப்பு - மகாராஷ்டிர தேர்தல் தொடர்பான ஆலோசனை
மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சி தலைவா்களான மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வா் அஜீத் பவாரை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை சந்தித்து பேசினாா்.
பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே ஆஎஸ்எஸ், பாஜகவின் விருப்பம் - அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு
பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை விரும்புவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
13 துறைகளில் தமிழகம் முன்னிலை
இந்தியாவில் வறுமை ஒழிப்பு, மகளிா் மேம்பாடு, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது என தமிழக இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
அமெரிக்காவில் முதல்வருடன் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினை, அந்த நாட்டிலுள்ள தமிழ்ச் சங்க நிா்வாகிகள் சந்தித்துப் பேசினா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் ஆலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் தனியாா் ஆலையில் பணியாற்றும் சிஐடியு தொழிற்சங்க ஊழியா்கள் சுமாா் 1,000-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.