
தூத்துக்குடியின் முகவரியும், அடையாளமுமான வ.உ.சி. துறைமுகம் தற்போதைய பா.ஜ.க. அமைச்சர் நிதின் கட்கரியின் பொறுப்பில் வருகிறது. 1996-ன்போது ஆரம்பிக்கப்பட்ட வ.உ.சி. போர்ட் டிரஸ்டில், பெர்த்களில் சரக்குப் பெட்டகங்கள் என்கிற கன்டெய்னர்களை கப்பலில் லோடிங், அன்லோடிங் கையாள்கிற யூனிட்டில் நடந்த, பெட்டகங்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட ராயல்டி தொகையை துறைமுகத்திற்குச் செலுத்தாமல் நிலுவையாக வைத்ததுதான் விவகாரமே!
1996-ன்போது 7 பெர்த்களுடன் அமைக்கப் பட்ட துறைமுகம், 2024-ல் 1600 சரக்குக் கப்பல்கள் வந்து செல்கிற அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. மத்திய அரசுக்கான தொழில்முறை வருமான அடிப்படையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக சபை முக்கிய காரணியாகவும் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.
ஆரம்ப காலங்களில் 4 லட்சம் கன்டெய்னர்கள் கையாளப்பட்டு சரக்குக் கப்பல்களில் வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், வளர்ச்சி காரணமாக மாதம் ஐந்தரை லட்சம் சரக்குப் பெட்டகங்கள்வரை கையாளப்பட்டுவருகிறது. இப்படியான சரக்குப் பெட்டகங்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சிங்கப்பூர், சிலோன், மலேசியா, துபாய், தெற்காசிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்துள்ளன.
‘இதுபோன்ற சரக்குப் பெட்டகம் கையாளுதல், பிற வர்த்தக அலகுகள் துறைமுக சபையால் நேரடியாக நடத்தவியலாத சூழலால், அதுபோன்ற வர்த்தக அலகுகளை தனியாருக்கு வாடகை, ராயல்டி அடிப்படையில் துறைமுக சபை அக்ரிமெண்டுடன் விட்டுள்ளது’ என்கிறார்கள்துறைமுக சபை சார்ந்த அதிகாரிகள்.
அந்தக் கணக்கில்தான் சிங்கப்பூரை சென்டராகக் கொண்ட P.S.A. SICAL எனப்படும் போர்ட் ஆஃப் சிங்கப்பூர் அதாரிட்டி, சிகால் என்கிற தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனத்திற்கென்று சரக்குப் பெட்டகம் கையாள்கிற வகையில் பெர்த்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
டெர்மினலில் ஒரு சரக்குப் பெட்டகம் (கன்டெய்னர்) கையாள்வதற்கு சரக்கு அனுப்புகிற பார்ட்டியிடமிருந்து இவ்வளவு தொகைதான் வசூல் செய்யவேண்டும். அப்படி கையாள்கிற சரக்குப் பெட்டகங்களுக்கு இவ்வளவு தொகை என ராயல்டியாக மாதந்தோறும் அனுப்பப்படுகிற மொத்த சரக்குப் பெட்டகங்களுக்கான ராயல்டி தொகையை நிறுவனம் துறைமுக சபைக்குச் செலுத்தியாக வேண்டும், வர்த்தக ரீதியாக இந்தந்த வருடங்களில் ராயல்டி தொகை உயர்த்தப்படும் என்பது அக்ரிமெண்ட்டின் ஷரத்துகளில் ஒன்று.
This story is from the December 28-31, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 28-31, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

பிரசாந்த் கிஷோரிடம் எடப்பாடடி டீல்!
'ஹலோ தலைவரே, தமிழகத்தில் இப்போது எல்லாப் பக்கமும் அதிரடி மாற்றங்கள் அரங்கேறியிருக்கிறது.\"

விசாரணை ஏன்ற பெயரில் ரேட்டாதே!,
சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி மாலை பத்திரிகையாளர்கள் போராட்டம் நடைபெற்றது.

வரலாற்றில் இடம்பிடித்த சாரண, சாரணியர் வைர விழா!
தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பெருந்திரளணி விழா கடந்த ஜன.28-ஆம் தேதி மணப்பாறையில் சிப்காட் வளாகத்தில் மிக பிரமாண்டமாகத் தொடங்கி பிப்3ம் தேதி நிறைவடைந்தது.

மா.செ. நீக்கம்!
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஜி. வெங்கடாசலம் திடீரென்று நீக்கப்பட்ட விவகாரம் மாங்கனி மாவட்ட அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Budget 2025 ஆச்சரியமும் ஏமாற்றமும்!
மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற மோடியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி 11 மணியளவில் தாக்கல் செய்தார். தொடர்ச்சியாக 8-வது முறையாகத் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்யும் பட்ஜெட் இது.

பா.ஜ.க.வின் B டீம் விஜய்!
உங்கள் உரையின் சொற்களை சரியான இடைவெளியுடன் திருத்தியிருக்கிறேன்: த.வெ.க. வியூக அமைப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர்களிடையேயான முட்டல், மோதல்களையும், அவர்களை விஜய் கண்டித்ததையும் நக்கீரனிடம் ஏற்கனவே தெரிவித்திருந்த திருச்சி சூர்யாவிடம், த.வெ.க.வில் என்ன நடக்கிறது எனப் பேசியோம்...

விஜய்யுடன் சேர்ந்த : ஆதவ்வைத்த தி! தி.மு.க. கூட்டணியில் திகு.. திகு..!
த.வெ.க.வில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவை தேர்தல் மேலாண்மைப் பிரிவின் பொதுச் செயலாளராக்கியிருக்கிறார் விஜய். பதவியைக் கைப்பற்றிய கையோடு திருமாவளவனை சந்தித்து ஆதவ் அர்ஜுனா ஆசி பெற்றதும், திருமாவும் ஆதவ்வும் மகிழ்ச்சி யாகப் பேட்டியளித்ததும் தி.மு.க. தலைமையை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

சாட்டையை சுழற்றிய கோவி.செழியன்!
உயர்கல்வித்துறையில் அதிரடி!

பா.ஜ.க.வசூல் வேட்டை! காரிலேயே விசாரணை நடத்திய அமித்ஷா!
அதனைச் சுட்டிக்காட்டி, இந்த பல்கலையில் படிக்கும் மாணவிக்குத்தான் பாலியல் சீண்டல்கள் நடந்தன என்று அமித்ஷாவிடம் அந்த பா.ஜ.க. நிர்வாகி கூற, அது குறித்தும் அவர் விசாரித்திருக்கிறார்.

ஊடக சுதந்திரத்தைப் பறிக்க போலீசுக்கு அதிகாரமில்லை!
அண்ணா பல்கலைக்கழக மாணவி, ஞானசேகரனால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்குல எஃப்.ஐ.ஆர். தரவிறக்கம் செய்யப்பட்ட விவகாரம் ஒரு பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. தெரிந்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தீங்கன்னா, எந்தப் பத்திரிகையாளரும் இதுல தவறு செய்யலன்னு தெரியுது. அதற்கு ஆதாரம் கிடையாது.