
ராமாநாயுடு அவர்கள் என் கதை, வசனம், இயக்கத்தில் ஒரு பெரிய படம்பண்ண விரும்பினார். அதற்கான கதையை ரெடிபண்ணச் சொன்னார். பத்து நாட்களுக்குள் கதையைச் சொன்னேன்... ஓ.கே. ஆனது. ஷோபன்பாபு, ஸ்ரீதேவி, முரளிமோகன், ஜெயசித்ரா,
மோகன்பாபு, ஜமுனா, ஏ.சகுந்தலா, சத்யநாராயணா, அல்லூர் ராமலிங்கய்யா என ஏகப்பட்ட புகழ்பெற்ற நடிகர், நடிகையர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஊட்டி, சிக்மகளூர் என பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தினோம்.
நல்ல கதை, சுவையான கதாபாத்திரங்கள், பெரிய கம்பெனி என்பதால் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தது.
ஒரு பாடல் காட்சி... காதல் பாட்டு. அதனை சாத்தனூர் அணைக்கட்டுப் பூங்காவில் எடுக்கத் திட்டமிட்டு தேதி பெறப்பட்டது.
'நெஞ்சில் ஓர் ஆலயம்' இந்தி பதிப்பான 'தில் ஏக் மந்திர்' படப்பிடிப்பில் குமார் -மீனாகுமாரியை ஸ்ரீதர் இயக்கும் காட்சியை படம் பிடிக்கும் வின்சென்ட்வாள்மீகி தெருவிலிருந்த சுரேஷ் புரொடக்ஷன்ஸ் ஆபீஸிலிருந்து கிளம்ப ஏற்பாடானது. நான் என் காரில் அலுவலகம் போனேன். அங்கே ஒரு Luxury பஸ் நின்றிருந்தது. நான் என் உதவியாளர்களுடன் என் காரில் செல்ல திட்டமிட்டிருந்தேன்.
அதைப்பார்த்த நாயுடு ஸார், என்னைக் கூப்பிட்டு “எல்லாரும் ஒரே பஸ்ல போகலாமே? நீ வண்டி ஓட்டி சிரமப்பட வேண்டாமே” என்றார். அது சரியாகப்படவே நாங்களும் பஸ்ஸில் ஏறினோம். சில நிமிடங்கள் கழித்து கம்பெனி கார் வந்தது. அதில் ஷோபன்பாபு, ஸ்ரீதேவி வந்தனர். அதில் ராமாநாயுடு ஸாரும் ஏறிக்கொள்ள... வண்டிகள் புறப்பட்டன. எல்லோரும் ஒரே பஸ்ஸில் போகலாம் என்றவர்... நடிக, நடிகையருடன் கிளம்பியது எனக்கு கவலையைத் தந்தது.
காலை டிபனுக்காக மதுராந்தகத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. காரில் வந்தவர்கள் மூவரும் தனியாக சாப்பிட்டனர். மதியம் ஒரு மணிக்கு மேல் சாத்தனூர் அணைக்கட்டு சென்றுவிட்டோம். அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு அனுப்பப்பட்டனர். சாமான் களை வைத்துவிட்டு கை, கால் அலம்பிவிட்டு ஒரு ஓட்டலில் மதிய உணவு சாப்பிடவேண்டும். மறுநாள் காலைதான் படப்பிடிப்பு.
சாப்பாடு முடிந்ததும் என் பழக்கப்படி, என் தொழில் நுட்பக் கலைஞர்கள் தங்கும் இடத்தைப் போய் பார்த்து வசதிகள் எப்படி, வேறு தேவைகள் இருக்கா எனக் கேட்பேன்.
This story is from the December 28-31, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 28-31, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

கெஜ்ரிவால் வீழ்ந்த கதை! இந்தியா கூட்டணிக்கு பாடம்!
டெல்லி வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சியையும், அரவிந்த் கெஜ்ரிவாலையும் 'கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்க' என்று சொல்லி விட்டு பா.ஜ.க. வை ஆட்சி யமைக்கத் தேர்ந்தெடுக்குகிறார்கள்.

ஆன்மிகப் பாதை!
ரஜினிக்காக பல நாட்கள் சிந்தித்து ஒரு வசனத்தை உருவாக்கினேன். அதை அடித்தளமாக, அஸ்திவாரமாக வைத்துத்தான் 'தனிக்காட்டு ராஜா'வின் கதையை எழுதினேன்.

கைது பயத்தில் சீமான்!
'ஹலோ தலைவரே, மீண்டும் அதிரடியாக 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்றி யிருக்கிறது தமிழக அரசு.\"

கைதி எண் 9658
(21) உணவுப் பஞ்சமும் உளுத்த சோளமும்!

தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ்! விஜய்யுடன் கைகோர்க்கும் ரெங்கசாமி!
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முகமாக தமிழகத்திலும் என்.ஆர். காங்கிரஸை துவக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரெங்கசாமியை வலியுறுத்தி வருகின்றனர்.

வாக்கரிசி போட்டாச்சு! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி!
\"எங்கள் அரசியல் கோட்பாடுகள் சரியென்று பட்டால் வாக்கு தாருங்கள்... அல்லது அவர்களுக்கே தாருங்கள்! எங்களை ரோட்டில் போட்டீர்கள்...

முதல்வர் எச்சரிக்கை! நெல்லை உ.பி.க்கள் பதட்டம் !
சுமார் 9,368 கோடி மதிப்பிலான திட்டங்களையும், பணிகளையும் நெல்லை மாவட்டத்திற்கு அர்ப்பணிக்கிற வகையிலும், கள ஆய்விற்காகவும் இரண்டு நாள் பயணமாக நெல்லை வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

அரசுக்கு 40,000 கோடி வருவாய்! கவனிப்பாரா முதல்வர்?
அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் எத்தகைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தலாம் என்பது பற்றி பரிந்துரை செய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் மூவர் கொண்ட கமிட்டியை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

5 கட்சி கூட்டணி! விஜய்க்கு 30 சீட்! எடப்பாடி வியூகம்!
அ.தி.மு.க. தனது கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை வேகமாக நடத்திவருகிறது. கடந்த 9ஆம் தேதி ஒரு தொலைக்காட்சியில் அறிவிப்பு ஒன்று திடீரென வெளியானது.

மாவலி பதில்கள்
நீ முடியும்னு நினைச்சா முடியும்... நீ முடியாதுனு நினைச்சா முடியாது... அவ்வளவுதான் வாழ்க்கை எல்லாம் நீயே தான்...