மலை உச்சியில் பூத்த என் பிச்சிப் பூவை எங்கே கொத்துக்கொத்தாக காய்ச்ச? என் வெள்ளரிப்பிஞ்ச எங்கு கொல்லையில காய்ச்ச? என் பட்டுச் சேலையை பார்த்தா என் பச்ச மரம் வேவும் பச்சைக்கிளி எல்லாம் நோவும்...
இப்படி தனது பாடல் வரிகளாலேயே, தான் கடந்து வந்த பாதையையும் அதன் கடினத்தையும் எழுதியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். எங்கும் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது 'வாழை' படத்தின் 'பாதவத்தி...' பாடல். படத்தின் ரிலீஸ் மும்முரத்திற்கு இடையே பேசினார்.
அதே கேள்விதான்... என்னதான் பிரச்னை? கமர்ஷியல் கதைகளுக்குள் செல்லும் நோக்கம் இல்லையா?
இந்தக் கேள்வியை ஓர் இயக்குநருக்கான கேள்வியாக எடுக்கலாம். ஆனால், இதைவிட இன்னொரு கேள்வி இருக்கு. 'எல்லாம் மாறிடுச்சு, ஏன் திரும்ப திரும்ப இதையே படமாக சித்தரிச்சுக்கிட்டே இருக்கீங்க?' இந்த கேள்விதான் நடக்கற மாற்றங்களை ஏத்துக்க முடியாமல் கேட்கற கேள்வியா நான் பார்க்கிறேன்.
முன்பெல்லாம் இந்தக் கேள்வி வேற மாதிரி இருக்கும். 'ஓஹோ! வீட்டுப் படி ஏற ஆரம்பிச்சுட்டியா, என்னுடைய நடுவீடு வரைக்கும் வருவியா, எனக்கு சரி சமமா உட்காருவியா...' இப்படி இருந்த கேள்வி இப்போ மருவி 'எல்லாம் மாறிடுச்சே...' அப்போ தின்முன் நடக்கிற மாற்றங்களை ஏத்துக்க முடியாமல் கோபமாக கேட்கிற கேள்வியா நான் பார்க்கிறேன்.
'ஏன் மாரி செல்வராஜ் இப்படிச் படம் எடுக்கிறான்?' என்கிற கேள்விக்கான பதில்தான் திரும்ப திரும்ப நான் கொடுக்கிற படங்கள். என்னை நான் யார்... நான் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்... இன்னும் இந்தப் பிரச்னை இருக்கத் தான் செய்யுது.
நாம் மெட்ரோ சிட்டில் உட்கார்ந்து, நடக்கிற பிரச்னைகளைப் பற்றி பேச மறுக்கிறோம். அதுதான் என் கதைகள்.
'வாழை'..?
என்னுடைய சின்ன வயதில் ஒரு பகுதிதான் 'வாழை'. இந்த நிமிஷம் வரைக்கும் என்னால் கடந்து வரவே இயலாத கதை. இதைத்தான் என்னுடைய முதல் படமாக நான் எடுக்கணும் அப்போ என்னுடைய நெனச்சேன்.
ஆனால், அன்றைக்கு சூழல் இல்லை இந்தக் கதைக்கான தயாரிப்பாளர் கிடைக்காது அல்லது படமாக உருவாக்குவதோ ரொம்ப கஷ்டமாக இருந்துச்சு. இப்போது ஒரு நாலஞ்சு படம் எடுத்த பிறகு எனக்கான அங்கீகாரம் கிடைத்ததுக்குப் பிறகு இந்தத் தருணத்தில் இந்தப் படம் எடுக்கிறது சுலபமாக இருக்கிறது.
This story is from the 30-08-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 30-08-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!