கமழ்ந்தன பூக்கள்
Kungumam|13-10-2023
‘‘சீதா ஓடிவா... அங்க என்ன பண்ற?’’ என்று கேட்டுக்கொண்டே மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்திப்பூக்களை எல்லாம் ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு கிளம்பினாள் வேதவல்லி.
செந்தில்குமார் அமிர்தலிங்கம்
கமழ்ந்தன பூக்கள்

‘‘இதோ வரேன்மா...’’ என்றபடி தோட்டத்தில் பறித்த மல்லிகைப் பூக்களை வாழைநாரில் சரமாய்த் தொடுத்து எடுத்துக்கொண்டு ஓடி இரண்டு முழம் அளவுக்கு அழகாய்த் தொடுத்திருந்த பூச்சரத்தை அம்மாவிடம் காட்டிச்சிரித்தாள்.

‘‘அடடே! அழகா கட்டியிருக்கியேடா...’’ என்ற வேதவல்லியிடம், ‘‘கொஞ்சம் இருமா...’’ என்று சொல்லிக்கொண்டே ஒரு சிறிய நாற்காலியை இழுத்துப் போட்டு சுவரில் மாட்டியிருந்த பாட்டி லட்சுமியின் புகைப்படத்திற்கு அந்த பூச்சரத்தை மாலையாகத் தொங்கவிட்டாள்.

வேதவல்லியும் தனது அம்மா லட்சுமியின் புகைப்படத்தின் முன் நின்று கண்கள் கலங்க கும்பிட்டுவிட்டு ‘‘வா கண்ணு போலாம்...’’ என்று சீதாவை அழைத்துக் கொண்டு பூக்கூடையைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.

சீதாவும் வீட்டைப் பூட்டிக்கொண்டு உதிரிப்பூக்கள் நிறைந்த இரண்டு சிறிய பைகளை எடுத்துக் கொண்டு கொலுசு அணிந்த தேவதையாக வேதவல்லியின் பின்னால் நடந்தாள். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சிவன்கோயில் வாசலில் பூக்கடை போட்டிருந்தாள் வேதவல்லி.சீதாவும் பள்ளி விட்டு வந்ததும் வேதவல்லிக்குத் துணையாக பூக்கடையில் இருப்பாள்.அம்மா பூ கட்டும் அழகை ரசித்துப் பார்ப்பாள்.

பிறகு அவளே பூ கட்டவும் ஆரம்பித்து விட்டாள். இப்பொழுது அம்மாவை விட அழகாகவே பூக்களை கட்டவும் தேறிவிட்டாள்.சீதா பிறந்த ஆறு மாதத்திலேயே அவளது அப்பா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். வேதவல்லியின் அம்மா லட்சுமிதான் தூணாக இருந்து குடும்பத்தை காத்தாள். வேதவல்லி பூக்கடைக்குச் சென்ற பிறகு சீதாவை லட்சுமி பாட்டிதான் கண் போல பார்த்துக் கொண்டாள்.

அதனால் சீதாவுக்கு பாட்டிதான் எல்லாம். தினமும் காலையில் நாலு  மணிக்கு எல்லாம் எழுந்து பூக்களைப் பறித்துத் தயார் செய்து ஐந்து மணிக்கு எல்லாம் கிளம்பி விடுவாள் வேதவல்லி.
அதன் பிறகு காலை உணவு தயார் செய்து சீதாவை பள்ளிக்கு அனுப்பும் வேலை லட்சுமி பாட்டியுடையது. பத்து மணிக்கு வேதவல்லி வீட்டிற்கு வருவாள். மீண்டும் மாலை நாலு மணிக்கு பூக்களுடன் கோயிலுக்குக் கிளம்பிவிடுவாள்.

This story is from the 13-10-2023 edition of Kungumam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the 13-10-2023 edition of Kungumam.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM KUNGUMAMView All
2024 உலகக் காப்பை
Kungumam

2024 உலகக் காப்பை

ஜூன் 1ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடக்கவுள்ள ஐசிசியின் ஆண்களுக்கான ஒன்பதாவது உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளை அமெரிக்காவும், மேற்கிந்தியத் தீவுகளும் இணைந்து நடத்துகின்றன.

time-read
1 min  |
07-06-2024
+2 வுக்குப் பிறகு...ஒரு கைடன்ஸ்!
Kungumam

+2 வுக்குப் பிறகு...ஒரு கைடன்ஸ்!

இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், முதலில் எந்தத் துறையில் சேர்ந்து படிக்க வேண்டும், தொழில் படிப்பா அல்லது தொழில்சாரா படிப்பா, சேர விரும்பும் படிப்பின் எதிர்காலம் என்ன, என்னென்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என்பனவற்றை எல்லாம் யோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

time-read
2 mins  |
07-06-2024
இருக்கையை அமைக்காமாவு பாநப்பதுச கரும்...படமும் இந்தப் அப்படித்தன்!
Kungumam

இருக்கையை அமைக்காமாவு பாநப்பதுச கரும்...படமும் இந்தப் அப்படித்தன்!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி யனாக பேர் வாங்கிய சூரி, ‘விடுதலை’யில் ஹீரோவாக அடுத்த வெர்ஷனுக்கு மாறி வெற்றிக்கொடி பறக்கவிட்டார்.

time-read
3 mins  |
07-06-2024
நாசியின் விளையாட்டுத் திடல்!
Kungumam

நாசியின் விளையாட்டுத் திடல்!

பொதுவாக வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் வாசனைத் திரவியங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அதே அளவுக்கு அந்த வாசனைத் திரவியங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் குடுவைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.

time-read
3 mins  |
07-06-2024
டூயட்...லவ்...இல்லாத ஸ்டைலிஷ் ஹீரோயின்!
Kungumam

டூயட்...லவ்...இல்லாத ஸ்டைலிஷ் ஹீரோயின்!

சினிமா விமர்சகர், அரசியல் பத்திரிகையாளர், காவல் அதிகாரி, இன்வெஸ்டிகேஷன் ஆபீசர், விளம்பரப் பட இயக்குநர்...

time-read
2 mins  |
07-06-2024
ஈரான அதிபர் மரணம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
Kungumam

ஈரான அதிபர் மரணம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

1979ம் ஆண்டில் ஈரானிய மக்கள் அங்கே ஒரு சம்பவம் செய்தார்கள்.

time-read
1 min  |
07-06-2024
ஒரு அண்ணன்...ஒரு தங்கை...ஒரு ஆட்டுக்குட்டி!
Kungumam

ஒரு அண்ணன்...ஒரு தங்கை...ஒரு ஆட்டுக்குட்டி!

இருப்பதிலேயே மிகப்பெரும் சவாலான ஒன்று குழந்தைகளுக்காக, குழந்தைகளைக் கொண்டு ஒரு கதை சொல்லி படமெடுப்பதுதான்.

time-read
2 mins  |
07-06-2024
ஆதிக்க பசி
Kungumam

ஆதிக்க பசி

இன்னும் கொஞ்சம் அகலமாக சிரித்திருக்க வேண்டும்.

time-read
3 mins  |
07-06-2024
தெலங்கானாவின் முதல் அவகேடோ விவசாயி!
Kungumam

தெலங்கானாவின் முதல் அவகேடோ விவசாயி!

உலகம் முழுவதும் அதிகமாக விற்பனையாகும் வெப்ப மண்டல பழங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பழம், அவகேடோ.

time-read
2 mins  |
07-06-2024
மிருதங்கத்தில் கலக்கும் ஹைபர் ஆக்டிவ் மாற்றுத்திறனாளி இளைஞர்!
Kungumam

மிருதங்கத்தில் கலக்கும் ஹைபர் ஆக்டிவ் மாற்றுத்திறனாளி இளைஞர்!

சிறப்புக் குழந்தைகள் என்றாலே துறுதுறுவென ஆர்ப்பாட்டம் செய்துகொண்டும், கூச்சலிட்டபடியும் இருப்பார்கள் என்ற நினைப்பே நம்மில் பலருக்கும் இருக்கும்.

time-read
2 mins  |
07-06-2024