CATEGORIES
Categories
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
நர்மதா நதிக்கரையில் உள்ள மாகிஷ்மதி என்ற ஊரில் கூடாரம் அமைத்துச் சில நாட்கள் தங்கியிருந்தான் ராவணன். அப்போது திடீரென்று நர்மதை ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அது ராவணனின் கூடாரத்தையே மூழ் கடித்துவிட்டது. இவ்வளவு பெரிய வெள்ளம் எப்படி வந்தது என்று திகைத்தபடி ராவணன் வெளியே வந்து பார்த்தான். அங்கே ஆயிரம் தோள் படைத்த ஒருவனும் சில பெண்களும் ராவணனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.
ஆழ்வார்கள் கண்ட கருட சேவை
வைணவ மரபிலே கருட சேவைக்கு தனி ஏற்ற முண்டு. வேதத்தின் மூலம், வேதம் காட்டும் பரம் பொருளை தரிசிப்பதே, கருட சேவையின் உட்பொருள்.
ஜெயதேவர் பூஜித்த ராதா மாதவன்!
சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம். கி.பி. 1670 ஆம் ஆண்டில், வட இந்தியாவில், ஸ்திரமாக நின்றுவிட்ட முகலாய சாம்ராஜ்ஜியத்தை, ஒளரங்கசீப் கோலோச்சிய காலம் அது.
அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருக்கடையூர் அபிராமி
அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அடங்கும். இத்திருக் கோயில் மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது.
எப்படி அழைப்பேன் உன்னை?
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்
தாயுமானவ தனிக் கருணைப் பெருநிதி
தாயுமானவர் குரு பூஜை 5-2-2021
நாய்க்கு மோட்சம்!
தாமிரபரணி ஆற்றின் வடகரை யில் ஒரு யோகி வாழ்ந்து வந்தார். அவர் தினமும் விடியலில் எழுந்து ஆற்றில் குளித்து. தென் கரையில் இருக்கும் எம்பெருமானை இக்கரையில் இருந்தே வணங்குவார்.
தனித்துவமிக்க தர்ப்பை
இந்து மதத்தைப் பொறுத்த வரையில், இறைவனை பூஜிப்பது முதல் முன்னோர்களை பூஜிப்பது வரையில் அனைத்திலும் தர்ப்பைப் புல்லிற்குத்தான் முதல் இடம். இப்படி எல்லா சுப காரியங்களுக்கும் பயன்படும் தர்ப்பைப் புல்லின் பெருமையை காண்போமா!
பழ தல விருட்சங்கள்
ஔவையாருக்கு சுட்டபழம் உதிர்த்துத் தந்தானே முருகன், அந்த நாவல் மரம், பழமுதிர்சோலையில் தலவிருட்சமாக விளங்குகிறது. இந்த நாவல் மரம் கந்தசஷ்டி நாட்களில் மட்டுமே கனிகளைத் தருகிறது என்பது வியப்பான தகவல்.
வேத சொரூபியான கருடன்
இறைவனை நமக்குக் காட்டித் தரும் கருவியாக வேதம் உள்ளது. ஆனால் நம் போன்ற சாமானியர்களுக்கு, வேதத்தைக் கற்று, அதன் பொருளை அறிந்து, அதைப் பின்பற்றி இறைவனை அறிவது என்பது மிகவும் கடினமான காரியம். எனவே நம்மேல் கருணைகொண்ட வேதமே, இறைவனை நமக்கு எளிதில் காட்டித் தரும் பொருட்டு மற்றோர் உருவம் எடுத்துக்கொண்டது.
ஞானியின் கணக்கு
திருவாரூர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஞானத்திலும் தவத்திலும் நிரம்பப் பெற்றவர்; அடக்கத்தில்... ஈடு இணை சொல்ல முடியாது.
ஞானப் பசியோடு வயிற்றுக்கும் ஈந்த வள்ளல்!
இறை தரிசனம் எல்லோருக்கும் வாய்க்கப் பெறுவதில்லை, எனக்கு அருள்புரிவீராக என ஏங்கி உள்ளம் உருக தொழுது, தேவைப்பட்டால் அழுது அரற்றி அவனை அழைப்பவர்களுக்கு மட்டுமே அவனது அருட்காட்சி கிடைக்கப் பெறும். இவ்வழி சென்று இறைவனை தரிசித்து அந்த பரவசத்தில் அவனுடன் ஒன்றிக் கலந்தவர்கள் எண்ணற்றோர்.
வேல் தோன்றிய வரலாறு
தண்தமிழ்க் கடவுளாக விளங்கும் முருகப் பெருமானின் திருக்கரத்தில் விளங்கும் ஆயுதங்களில் முதன்மை பெற்ற ஆயுதமாக இருப்பது வேலாயுதமாகும். அது சிவபெருமானைப்போலவே உலகம் செயல்படுவதற்கு அடிப்படையாக இருக்கும். படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐம்பெரும் செயல்களையும் ஆற்றவல்லது. அத்தகைய ஒப்பற்ற சக்திமிக்க தனியாண்மை கொண்ட நெடுவேலாயுதம் தோன்றி, முருகன் கையில் வெற்றி வேலாயுதமாக நிலைபெற்ற வரலாற்றை அனேக புராணங்கள் சிறப்பாகக் குறித்துள்ளன. அவற்றின் தொகுப்பைச் சுருக்கமாக இங்கே காணலாம்.
வேல் தந்த ஆறுகள்
தைப்பூசம் 28-1-2021
வேல் குத்திக்கொள்ளுதல்
தென்னகத்து மக்கள் தங்களுடைய சமய வாழ்வில் கடுமையான நேர்த்திக் கடன்களை நேர்ந்து கொண்டு நிறைவேற்றுகின்றனர். சில சமயம் அவை அஞ்சத் தக்கவைகளாகவும் கடுமைமிக்க வைகளாகவும் உள்ளன.
பஞ்சபாண்டவ சூட்சுமம்
இது எப்படி? சந்தேகங்கள் பல. அவற்றில் ஒன்று இது. திரௌபதி, பஞ்ச பாண்டவர்கள் ஐவரை மணந்தார். அனைவருக்கும் தெரிந்ததுதான் இது.
நால்வர் கொண்டாடும் மகர சங்கராந்திப் பெருவிழா
நம் பூமிப் பந்திலிருந்து சூரியனின் பயண கதியை ஆண்டு முழுதும் நோக்குவோ மாயின் தை மாதம் முதல் நாளில் தெற்கு முனையிலிருந்து வடக்கு நோக்கித் திரும்பும் கதிரவன் ஆடிமாதம் முதல் நாளன்று வடமுனை சென்று தெற்கு நோக்கித்திரும்பிப் பயணம் செய்து மீண்டும் தை முதல் நாளில் தென் முனையைத் தொடுவான்.
வேலை வழிபடுவதே வேலை
வேல் எடுத்தல் (வேல் நடுதல்)
பெண்டிர் சிறப்பு!
சமுதாயத்தில் எல்லாத் துறையிலும் சிறப்படைகிறோம். ஆணும், பெண்ணும் சரிநிகர் சமமாக உழைக்கிறோம். ஆனால்... இன்னும் பெண் குழந்தை முதற் குழந்தை என்றால் பெண்ணா.... ஆ என அஞ்சுகின்ற நிலை தவறிய மாந்தரும் உண்டு. உண்மையில் பெண் என்பவள் ஜகத்தை நிர்வாகிக்கும் தேவதை.
சிந்தனைக்கு இனியானும் தைப்பூச நாயகனும்!
ஓவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறு நாள் சீர்காழிக்கு அருகில் உள்ள திருநாங்கூர் என்ற திருப்பதியில் உள்ள திருமணி மாடக்கோவில் என்னும் திவ்ய தேசத்தில் பெரும் விழா நடக்கும்.
என்னை நமனும் துரத்துவானோ!
உடலானது தனக்குத் தேவையான பசி, தூக்கம் போன்ற உணர்வின் வழியே உயிரைச் செலுத்தும் பண்புடையது.
ஜெபமாலை தந்த சத்குருநாதா
அருணகிரிநாதரின் க்ஷேத்திர கோவைப் பாடலில் பதினெட்டாவதாகக் குறிப் பிடப்பட்டுள்ள திருப்புகழ்த் திருத்தலம் ஆவினன்குடி. நக்கீரர் குறிப்பிட்டுள்ள ஆற்றுப்படைத் தலங்களுள் இது மூன்றாவதாகும்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
313. நஹுஷாய நமஹ (Nahushaaya namaha) (திருநாமங்கள் 301 முதல் 314 வரை ஆலிலைக் கண்ணன் பெருமைகள்)
நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!
தமிழரின் பண்பாட்டு அடையாளமாய் அமைந்த நாட்களுள் குறிப்பிடத்தக்க நாள் தைத் திருநாள் ஆகும்.
கொடை கொடுத்த கோமான்
கோரைக்கால் என்ற ஊரில் ஆழ்வான் என்ற பெருஞ் செல்வந்தன் இருந்தான். அவன் பலரும் தன்னைப் புகழ்ந்து பாடிப் போற்ற வேண்டுமென விரும்பினான். ஆனால், அடுத்தவனுக்கு ஒரு பருக்கையும் கொடுக்க மனம் இல்லாதகருமி. ஆகையால் யாருக்கும் தம்படி காசு வழங்க மாட்டான். இத்தகைய பண்புடையவனை ஒளவையாரும் சென்று பாடினார். அவன் பரிசு தருவதாக வாக்களித்தான். இறுதியிலே அவள் தந்த பரிசையும் மிக ஏளனமாகக் கூறுகிறார்.
குருமலை விளங்கும் ஞான சத்குரு
சேஷத்ரக் கோவைப் பாடலில் அடுத்ததாக அருணகிரியார் 'தென்றன் மாகிரி நாடாள வந்தவ' என்ற குறிப்பை வைத்திருக்கிறார்.
சூரிய மண்டல பூஜா சக்கரம்
சிவதீட்சை பெற்ற சிவபூஜா துரந்தரர்கள் செய்யும் சிவபூஜையின் முதல் அங்கமாகச் சிவசூர்ய பூஜை திகழ்கிறது. அவர்கள் சூரியனைக் கண்கண்ட கடவுளாக விளங்கும் சிவபெருமானாகவே கருதி உரிய பரிவாரங்களுடன் பூசிக்கின்றனர்.
வேதம் வணங்கும் சூரிய பகவான்
வேதகாலத்திலிருந்து இன்றுவரை நம் கண் முன்னால் காணும் (பிரத்யக்ஷ) தெய்வமாக சூரியன் விளங்குகிறான். "இருப்பவைகளையும், இருந்தவைகளையும், இனி இருக்கப்போகிறவைகளையும், அசைப்பவைகளையும் அசையாதவைகளையும், உண்டாக்குபவனும் அழிப்பவனும் சூரியன் ஒருவனே என்று சிலர் கருதுகிறார்கள்.” (பிருஹத் தேவதா 1.61)
வந்த வழி?
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் என்றதும் ஸ்ரீ மூல ராமர் நினைவிற்கு வருவார். ஸ்ரீ மூல ராமர் என்றதும் ராகவேந்திர சுவாமிகள் நினைவிற்கு வருவார். இத்தொடர்பை விளக்கும் நிகழ்வு இது. ஸ்ரீ மத்வாச்சாரியார் தலைசிறந்த ஞானி. அவருடைய சீடர் நரஹரி. குருநாதரிடம் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டவர், நரஹரி. இந்த நரஹரி மூலமாகத் தான ஸ்ரீமூலராமர் விக்ரகம் கிடைக்கப் பெற்றது.
பாகவதம் கூறும் சூரிய வழிபாடு
திருமாலின் திருப்பெருமைகளை கூறும் பெருமை மிக்க புராணங்கள் பலப்பல. அவற்றுள் பக்தியின் மேன்மையையம்.