தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா கோலாகலம்: இறுதி மூச்சுவரை மக்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி
Indhu Tamizh Thisai|August 03, 2021
பேரவை அரங்கில் படத்தை திறந்து வைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம்

சென்னை

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழா கோலாகலமாக நடந்தது. பேரவை அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். அப்போது, தனது இறுதி மூச்சுவரை தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும், ஏழைகளுக்காகவும் பாடுபட்டவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார்.

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா மற்றும் பேரவை அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு விழா நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து நேற்று பிற்பகல் சென்னை வந்த குடியரசுத் தலைவரை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் வரவேற்றனர். அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்கு சென்ற குடியரசுத் தலைவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 4.55-க்கு தலைமைச் செயலகம் வந்தார். அங்கு அவரை ஆளுநர், முதல்வர், பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

நினைவுப் பரிசு

5.05 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேரவை அரங்கத்துக்கு வந்தார். அதன் பின் விழா தொடங்கியது. பேரவைத் தலைவர் மு. அப்பாவு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அப்போது, சட்டப்பேரவையின் நூற்றாண்டு குறித்தும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகள் குறித்தும் விளக்கினார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கு பொன்னாடை, புத்தகம், நினைவுப் பரிசு ஆகியவற்றை முதல்வர் வழங்கினார். முதல்வருக்கு பேரவைத் தலைவர் நினைவுப் பரிசு மாலை 4.35 வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பேரவை அரங்கில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

விழாவில் குடியரசுத் தலைவர் பேசியதாவது:

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்வில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை திறந்து வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மெட்ராஸ் சட்டமன்ற கவுன்சில் என பெயரிடப்பட்டிருந்த தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறோம். ஆகஸ்ட் மாதம் நமக்கெல்லாம் முக்கியமான மாதம் ஆகும். இந்த மாதத்தில்தான் சுதந்திர தினவிழாவை கொண்டாடுகிறோம். இன்றைக்கு நமது நாடு பல்வேறு துறைகளில் மிகப்பெரிய அளவில் முன்னேறியுள்ளது. நாட்டு மக்கள் மற்றும் தலைவர்களின் கூட்டு உழைப்பே இந்த உயர்வுக்குக் காரணம்.

Continue reading your story on the app

Continue reading your story in the newspaper

MORE STORIES FROM INDHU TAMIZH THISAIView All

செவ்வாய் கிரகத்திலிருந்து புகைப்படங்களை அனுப்பியது மார்ஸ் ரோவர்

செவ்வாய் கிரகத்திலிருந்து மார்ஸ் ரோவர் கருவி, பூமிக்கு அழகிய புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

1 min read
Indhu Tamizh Thisai
August 05, 2021

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ரூ.1.50 கோடி கரோனா நிதி

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் ரூ.1,86,30,127 நிதி திரட்டி 3 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

1 min read
Indhu Tamizh Thisai
August 05, 2021

கேவிபி-க்கு ரூ.109 கோடி லாபம்

கரூர் வைஸ்யா வங்கி (கேவிபி) ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.109 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது.

1 min read
Indhu Tamizh Thisai
August 05, 2021

பிரபல நரம்பியல் நிபுணர் டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் 5 பேருக்கு இரட்டை தூக்கு; இருவருக்கு 3 தூக்கு

ஆசிரியை உள்ளிட்ட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை. சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

1 min read
Indhu Tamizh Thisai
August 05, 2021

ஒலிம்பிக்கில் ஆடவர் மல்யுத்தம் இறுதிச்சுற்றில் ரவி குமார் குத்துச்சண்டையில் லோவ்லினாவுக்கு வெண்கலம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றார். ஆடவர் மல்யுத்தத்தில் இறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் பதக்கத்தை உறுதி செய்தார் ரவி குமார் தஹியா.

1 min read
Indhu Tamizh Thisai
August 05, 2021

எஸ்பிஐ வங்கியின் புதுப்பிக்கப்பட்ட செயலி அறிமுகம்

சென்னை பாரத ஸ்டேட் வங்கி தனது யோனோ மற்றும் யோனோ லைட் செயலிகளில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி, அறிமுகப்படுத்தி உள்ளது.

1 min read
Indhu Tamizh Thisai
August 04, 2021

பண இழப்பு, தற்கொலையை தடுக்க தமிழக அரசு எடுத்த முயற்சி ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் சட்டம் ரத்து

அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

1 min read
Indhu Tamizh Thisai
August 04, 2021

அகமதிப்பீடு முறையில் கணக்கிடப்பட்ட மதிப்பெண்ணுடன் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு

99.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு

1 min read
Indhu Tamizh Thisai
August 04, 2021

தினசரி கரோனா தொற்று 30,549 ஆக குறைந்தது

புதுடெல்லி நாடு முழுவதும் 24 மணிநேரத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 30,549 ஆக குறைந்துள்ளது

1 min read
Indhu Tamizh Thisai
August 04, 2021

பல்வேறு தேர்வுகளுக்கான அறிவிப்புகளுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வுகால அட்டவணை விரைவில் வெளியீடு

செயலாளர் உமா மகேஸ்வரி தகவல்

1 min read
Indhu Tamizh Thisai
August 04, 2021