CATEGORIES

புதிய வார்ப்பு 2011

2021இன் விடியலை எதிர்நோக்கியிருந்த கோடிக்கணக்கான இங்கிலாந்து வாசிகள், கடந்த இரண்டு நாட்களாக அந்த நம்பிக்கையின் கடைசி கண்ணியைத் தேடிக்கொண்டிருக் கிறார்கள்.

1 min read
Kalki
January 03, 2021

தயார் நிலையில் உள்ளதா Covid-19 தடுப்பூசிகள்?

சார்ஸ் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் பாதிப்புகள் மற்றும் தாக்கங்களானது உலக நாடுகளில் பரவலாகக் காணப்படுகிறது.

1 min read
Kalki
January 03, 2021

சந்திர பூமியில் முதல் இந்தியர்!

ஆண்டாண்டுக் காலமாக 'நிலா நிலா ஓடிவா!' என்று சிறு குழந்தைகளை அழைக்கச் சொல்லிப் பழக்கி அறிமுகப்படுத்தியிருந்த நம்முடைய அண்டை நிலமான சந்திரனில் நிஜமாகவே ஒரு மனிதன் கால்பதித்து நடந்த ஆண்டு 1969! 'அப்போலோ 11' விண்கலத்தில் சென்று நிலாத்தரையில் இறங்கிய முதல் மனிதர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்னும் 39 வயது இளைஞர். இப்போது அவர் நினைவுகளாகியே எட்டு ஆண்டுகளாகிவிட்டன!

1 min read
Kalki
January 03, 2021

கட்டுப்படுத்த முடியாத மாசு

நாட்டின் பொருளாதார வளத்தை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசால் முன்னெடுக்கப்பட்டதுதான் தொழிற் துறையில் தனியார் பங்களிப்பும், விரிவாக்கமும்.

1 min read
Kalki
January 03, 2021

உள்ளத்தின் அபிவிருத்தியும் அரசின் பங்கும்....

அருள்வாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

1 min read
Kalki
January 03, 2021

வைதேய பத்தியும் ராக பக்தியும்

அருள்வாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

1 min read
Kalki
December 27,2020

நல்ல இசை பூ மலர்வதைப் போல்...

தொண்ணூறுகளின் ஆரம்பம் தில்லியின் குளிர் காலம். அக்கரை ஸ்வாமிநாதன் அண்ணாவிற்குச் சந்தோஷத்தில் கண்களில் நீர் கோத்துக் கொண்டது. குழந்தைகள் இரண்டையும் அள்ளிக் கொஞ்சலாம் போல இருந்தது. குழந்தைகள் மேடையில் பாடியதற்கு அத்தனை பேரும் வந்து பாராட்டினார்கள். எதற்குப் பாராட்டினார்கள் என்பதுகூட புரியாத எட்டும், நான்கும் வயதுள்ள குட்டிப் பெண் குழந்தைகள். சுப்புலக்ஷ்மி.

1 min read
Kalki
December 27,2020

கனிவுடன் காது கொடுத்துக் கேளுங்கள்!

தலைநகர் தில்லி, இதுவரை பார்த்திராத போராட்டங்களைக் கடந்த சில வாரங்களாக எதிர்கொண்டு வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தில் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட சங்கங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தற்போது தில்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு முகாம் அமைத்து முழங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் குரல் தேசம் முழுவதும் எதிரொலிக்கிறது.

1 min read
Kalki
December 27,2020

இந்த விழாவில் பங்கேற்பதில் மிகவும் மகிழ்ச்சி

வானவில் பண்பாட்டு மையம், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மகாகவி பாரதியின் பிறந்த நாளை முதன்மை நிகழ்ச்சியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறது.

1 min read
Kalki
December 27,2020

இணைய வழி இசை விழா

எப்போதோ ஒரு முறைதான் டிசம்பர் மாதத்தில் சென்னையில் புயல் தாக்கி மழை வெள்ளம் வரும். ஆனால், ஆண்டுதோறும் டிசம்பர் வந்துவிட்டால், சென்னை இசை வெள்ளத்தில் மூழ்கிவிடும்.

1 min read
Kalki
December 27,2020

நியூரோபதியைத் தவிர்க்கலாம்!

நீரிழிவு உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள்/இன்சுலினுடன், நரம்புக்கான வைட்டமின்களையும் சேர்த்து எடுத்துக் கொள்வது எதற்காக? அவசியமா? -லதா, மாத்தூர்.

1 min read
Kalki
December 20,2020

சபாஷ் பாண்டியா!

கடந்த வாரம் உலகம் முழுவதுமிருக்கும் கிரிக்கெட் ரசிகர்களை 'யார் இந்தப் பையன்?' என்று வியக்க வைத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன்.

1 min read
Kalki
December 20,2020

பொய்யினால் பெறும் ஆனந்தம் விரைவில் பொய்யாகிவிடும்

அருள்வாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

1 min read
Kalki
December 20,2020

அறியாதவனுக்குக் கரடி: அறிந்தவனுக்குக் கடவுள்!

நன்கு தெரிந்த நண்பர்களே சில சமயங்களில் ஆச்சர்யப்படுத்துவதுண்டு. ஜி.பி.பிரபாத். தமிழ்நாடு வர்த்தக உலகில் பிரபல மானவர். "வேலைத் தொடரை இயந்திரமாக்குதல் (Workflow Automation)' என்னும் இயலின் முன்னோடியாக இருந்தவர் பிரபாத். பிரபல எழுத்தாளர் ஜி.எஸ். பாலகிருஷ்ணனின் மகன்.

1 min read
Kalki
December 20,2020

ஒரு மில்லியன் டாலர்கள் பரிசு பெறும் ஆசிரியர்

ஒரு மாட்டுத் தொழுவம், பக்கத்திலேயே சாமான்கள் போட்டு வைக்கும் குடோன். இரண்டுக்கும் இடையில் செருகினாற்போல ஒரு ஷெட் போன்ற கட்டடம். 'ஜில்லா பரிஷத் தொடக்கப்பள்ளி ' என உதிர்ந்து கொண்டிருக்கும் பெயர் பலகை. டீச்சரில்லாமல் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள். அந்தச் சிறிய கிராமத்தில் பெரும்பாலும் வறுமைக்கோட்டுக்குக் கீழுள்ள விவசாயக் குடும்பங்கள்.

1 min read
Kalki
December 20,2020

ரஜினி வந்துவிட்டார்...அடுத்தது என்ன?

தன் மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை அழைத்துப் பேசி இரண்டு நாட்களில் இறுதி முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்த பின் ரஜினிகாந்த், மூன்று நாள் அமைதியாக இருந்தார். இனி அவர் அரசியல் களத்திற்கு வரப்போவதில்லை என்று பரவலாகப் பேசப்பட்ட போது யாரும் எதிர்பாராத வகையில், கட்சி அறிவிப்பை டிவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

1 min read
Kalki
December 20,2020

அந்த வெண்ணெய் VS தோசை பென்னே தோசை

திருச்சி ஆண்டார் தெருவில் 'ராமா கபே' பலருக்குத் தெரிந்திருக்கும். வெண்ணெய் மாவு' (தோசை) என்று ஆர்டர் செய்து விட்டு பெண் பார்க்கும் வீட்டில் பெண் வரும் வரை அங்கே இருக்கும் பாட்டிகளைப் பார்ப்பது போல இலையில் இருக்கும் இட்லி சாப்பிட்டுக் கொண்டு பெண் மன்னிக்கவும், தோசை வருகிறதா என்று பார்த்துக் கொண்டு இருக்கும்போது...'அடுத்தது ஒரு வெண்ணெய் மாவு' என்ற அந்தச் சத்தம் செவிக்குச் சென்று செவிக்கு உணவாகி, சிறிது நேரத்தில் வயிற்றுக்கும் ஈயப்படும் என்று அறிவிப்பாக இருக்கும்.

1 min read
Kalki
December 20,2020

கிசுகிசு புயல் என்னைத் தாக்காது!

கொரோனா ஊரடங்கு சற்று விலக்கிக் கொள்ளப்பட்டு திரைப்படப் படப்பிடிப்புகள் ஆரம்பித்திருக்கின்றன. புதிய படங்களுக்கும் பூஜை போடப்படுகின்றன. இந்த நிலையில், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் முக்கிய சாய்ஸ் ஆக விளங்குபவர் கல்யாணி பிரியதர்ஷன்.

1 min read
Kalki
December 13, 2020

கல்விக் கடன் பெறுவது எப்படி?

மருத்துவப் படிப்பு கனவாக இருந்தது, சில மாணவர்களுக்கு நனவாகியது மகிழ்ச்சியே! கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரம்யா என்ற மாணவி மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்து வெற்றி பெற்றவர். இவருக்கு பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியில் (S.T.Category) இடம் கிடைத்துள்ளது. அதேபோல பிஸ்திஷ் பிரிஷ்காவுக்குப் பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் (S.C.Category) இடம் கிடைத்துள்ளது.

1 min read
Kalki
December 13, 2020

மூன்றாவது முறை முதல்வர்?

நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில், நித்திஷ்குமாரை வாமனர் ஆக்கி, விஸ்வரூபம் எடுத்திருக்கும் பா.ஜ.க. அடுத்து நெஞ்சு நிமிர்த்தி, மே. வங்காளத்தை நோக்கி பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. அந்த நம்பிக்கையில்தான், பீகார் வெற்றியைத் தொடர்ந்து தில்லியில் கட்சித் தலைமையகத்தில் வெற்றி உரையாற்றிய பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் வெறும் இரண்டு இடங்களோடு கணக்கை ஆரம்பித்த பா.ஜ.க. இன்று நாட்டின் மூலை முடுக்கு களில் எல்லாம் விரிவடைந்துள்ளது!

1 min read
Kalki
December 13, 2020

மக்கள் இதை ஏற்கமாட்டார்கள்!

பா.ஜ.க.வின் நீண்டகாலக் கனவு திட்டமான 'ஒரே தேசம், ஒரே தேர்தல் குறித்த பேச்சுகள் மீண்டும் வலுப்பெற ஆரம்பித்திருக்கின்றன. "ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது விவாதிக்க வேண்டிய விவகாரம் அல்ல. அது நாட்டுக்கு அவசியம் தேவை'' என்று முழங்கியிருக்கிறார் பிரதமர் மோடி.

1 min read
Kalki
December 13, 2020

பிரிட்டன் ஒரு தனி உலகமாக இயங்குகிறது!

கடந்த பத்து தினங்களாக நடைபெற்று வந்த காமன்வெல்த் மொழிபெயர்ப்பு மாநாடு நேற்றோடு முடிவடைந்தது. வெவ்வேறு மொழிகளைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர் கள், படைப்பாளர்கள் ஆகியோரோடு மேற் கொண்ட நீண்ட உரையாடலின் மூலம் பிரிட்டனிலும் தெற்காசிய நாடுகளிலும் பதிப்புத் துறை எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து ஒரு சித்திரத்தைப் பெறமுடிந்தது.

1 min read
Kalki
December 13, 2020

வாழ நினைத்தால் வாழலாம்

மாதவி மெல்ல தன்னுடைய அறைக்கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

1 min read
Kalki
December 13, 2020

கானாவுக்கு உலக அங்கீகாரம்

ஒவ்வொரு ஆண்டும் சமூகத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கும் பெண்களைத் தேர்வு செய்து, பட்டியலிட்டு கௌரவிக்கிறது லண்டனில் உள்ள பி.பி.சி.

1 min read
Kalki
December 13, 2020

ராஜாவும் ஊர்த் தலைமையும்

அருள்வாக்கு ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள்

1 min read
Kalki
December 13, 2020

தடுப்பூசி என்ற நண்பன்

சிறுவனாக இருந்த சமயம், அண்டை வீட்டில் சில மாடுகள் இருந்தன. தினமும் கோனார் ஒருவர் மாடுகளுக்கு வைக் கோல் கொடுத்து விட்டு, கையில் எண்ணெய் தடவிக் கொண்டு பால் கறப்பார். அவர் பால் கறப்பதை ஆர்வமாகப் பார்க்கும் போது அவர் கையில் புண் ஒன்றைப் பார்த்தேன். அதைப் பற்றிக் கேட்டபோது சிக்கனமாக "மாட்டுப் புண்' என்றார்.

1 min read
Kalki
December 13, 2020

அது கடவுளின் கை

கால்பந்து சூப்பர் ஸ்டார் மாரடோனா அண்மையில் காலமானார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1 min read
Kalki
December 13, 2020

அமித்ஷாவின் அஜெண்டா; தி.மு.க.வுக்கு செக்!

தமிழக அரசு சார்பில் நடந்த விழாவில் முதலமைச்சர் ஈ.பி.எஸ்., துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். இருவரும் வரும் சட்டமன்றத் தேர் தலில் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்று அறிவித்ததும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்தியில் காங்கிரஸ் தி.மு.க. ஆட்சி நடந்தபோது, தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்கள்?

1 min read
Kalki
December 06, 2020

இறப்பிலும் ஒரு பாடம்!

மாலை நேரங்களில் இவருடைய குரல் ஒலிக்காத வீடுகளே அமெரிக்காவில் இல்லை எனச் சொல்லலாம். 37 வருடங்களாக (Jeopardy) விளையாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அலெக்சு டிரெபெக் கணையப் புற்றுநோயின் இறுதி நிலையை (Stage4 Pancreatic Cancer) அடைந்த பிறகும், இருபது மாதங்கள் முழு வாழ்வு வாழ்ந்து மறைந்தார்.

1 min read
Kalki
December 06, 2020

லட்டுக்கு ராயல்டி

ராயல்டியும் பிரச்னையும் எப்போதும் சேர்ந்தே வரும். நீங்கள் உபயோகிக்கும் செல் போன் செயல்படுவதற்கு முக்கியமான விஷயம் அதன் ப்ராசசர் (தமிழில் செயலி). அதன் ஆற்றல் கூடக்கூட 'ஸ்மார்ட் போன்' வெண்ணெய் மா மாதிரி வேலை செய்யும். விலையும் அதிகமாகும். அமெரிக்காவைச் சேர்ந்த 'குவால்காம்'' நிறுவனம் இந்தச் செயலியை உற்பத்தி செய் கிறது. விற்பனை செய்யும் ஒவ்வொரு செல் போனுக்கும் எங்களுக்கு ராயல்டி வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து பல நூறு கோடி ரூபாய் சம்பாதித்து, பிரச்னை வந்து, கோர்ட்டில் பஞ்சாயத்து நடந்தது.

1 min read
Kalki
December 06, 2020