Poging GOUD - Vrij
கடவுள் மறுப்பாளர்களாக, ஜாதி மறுப்பாளர்களாக, பெண்ணடிமை மறுப்பாளர்களாக, மத மறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நாங்கள் வீழ்ந்துவிடவில்லை, தாழ்ந்துவிடவில்லை - மற்றவர்களைவிட வாழ்க்கையில் உயர்ந்திருக்கின்றோம்! எங்கள் அறிவின்மூலம், பகுத்தறிவின்மூலம் என்று காட்டுவதற்கு இது ஒரு பிரச்சார முறை!
Viduthalai
|July 25,2023
அதற்குத்தான் இவ்வளவு பெரிய ஆடம்பரமான மணவிழா - விருந்து’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
-
‘‘கடவுள் மறுப்பாளர்களாகிய நாங்கள், ஜாதி மறுப்பாளர்களாக இருக்கக் கூடிய நாங்கள், பெண்ணடிமை மறுப்பாளர்களாக இருக்கக் கூடிய நாங்கள், மத மறுப்பாளர்களாக இருக்கக்கூடிய நாங்கள் வீழ்ந்துவிடவில்லை, தாழ்ந்துவிடவில்லை - மற்றவர்களைவிட வாழ்க்கையில் உயர்ந்திருக்கின்றோம், எங்கள் அறிவின்மூலம், பகுத்தறிவின்மூலம் என்று காட்டுவதற்கு இது ஒரு பிரச்சார முறை.
மணமக்கள் இனநலம் -ஜோஅட்லின்
கடந்த 25.3.2023 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடை பெற்ற மணவிழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரை யாற்றினார்.
அவரது வாழ்த்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
சட்டத்தைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை;
பெரியாரின் ஆணைதான் பெரிது!
சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்றார்கள் சொன்னவுடன், அம்மணமுறை நின்று விட்டதா? என்றால், இல்லை. அதுதான் பெரியாரின் வெற்றி. எங்களுக்குப் பெரியாரின் கொள்கை முக்கியம். சட்டத்தைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. பெரியாரின் ஆணை தான் பெரிது என்று தோழர்கள் நினைத்தார்கள்.
சட்டம் பின்னால் முண்டியடித்துக் கொண்டு வந்தது.
1967 இல் பேரறிஞர் அண்ணா செய்த பெரிய மகத்தான ஓர் அமைதிப் புரட்சி என்னவென்றால், அது சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட வடிவம் கொடுத்ததுதான்.
இன்னொரு செய்தியை சொல்லுகிறேன். இங்கே இருக்கக் கூடிய மணமக்கள் இனநலம் - அட்லின் மிகவும் மகிழ்ச்சியாக இங்கே அமர்ந்திருக்கிறார்கள்.
1933 ஆம் ஆண்டு எங்களைப் போன்றவர்கள் பிறக்காத காலம் - மே மாதம் 13 ஆம் தேதி மறைந்த அன்னை நாகம்மையார் அவர்களை அடக்கம் செய்துவிட்டு, அடுத்த நாளே தந்தை பெரியார் அவர்கள் திருச்சியில் உள்ள பாலக்கரை பகுதியில் சுயமரியாதைத் திருமணம் ஒன்றை நடத்தி வைக்கிறார்.
அந்த மணக்களில் ஒருவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். கிறிஸ்தவ பாதிரியார் செய்யவேண்டிய திருமணத்தை, பெரியார் செய்வது எங்கள் மதத்திற்கு விரோதமாகும் என்று ஒரு பாதிரியார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினரும், பெரியாரை கைது செய்ய வருகிறார்கள்.
Dit verhaal komt uit de July 25,2023-editie van Viduthalai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Viduthalai
Viduthalai
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி; ஆகஸ்டு மாதம் முடித்திட உதவித் தொகை வாய்ப்பு
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பலன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பணியை ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
நூறாண்டுகளுக்கு முன்பே ஜாதியை தூக்கியெறிந்தவர் தந்தைபெரியார்
மறைந்தவர்கள் மீண்டும் பிறக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஒரு மகத்தான சிந்தனையாளரின் கருத்துகள், அவரது சீடர்கள் மூலமாகத் தொடர்ந்து வாழ்கின்றன. தத்துவஞானி சாக்ரடீஸின் சிந்தனைகள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் மூலம் உலகிற்கு கிடைத்ததுபோல், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் அறிஞர் அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின் போன்றோர் மூலம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
1 mins
JUNE 06,2025
Viduthalai
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு
அதிகபட்சம் ரூ.6,460 வரை கிடைக்கும்
1 min
JUNE 06,2025
Viduthalai
முதலாளிகள்மீது கவனம் செலுத்தாமல் சாமானியருக்கான பொருளாதாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும்: ராகுல் காந்தி கருத்து
காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
1 min
JUNE 06,2025
Viduthalai
தமிழ்நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் செயல்படுத்த நடவடிக்கை
தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்
வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
1 min
JUNE 06,2025
Viduthalai
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும்—எழுத்தும் பயிற்சி ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
ரூ.1,538 கோடியில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்
சென்னை, ஜூன் 6 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி யுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
2027இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு — தென்மாநிலங்களுக்கு எதிரான சதி:
வரும் 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென்மாநிலங்க ளுக்கு எதிரான சதி என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
1 min
JUNE 06,2025
Viduthalai
காவல்துறையின் அதிரடி செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 136 சைபர் குற்றவாளிகள் கைது
இணையதளங்கள் வழியாக கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் கொள்ளை அடித்து வருகிறார்கள்.
1 min
JUNE 06,2025
Translate
Change font size
