Poging GOUD - Vrij
கூட்டலாம், குறைக்கக் கூடாது!
Dinamani Chennai
|March 06, 2025
வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் இருந்து பெறப்படும் வரி வருவாய் மூலம்தான், வளர்ச்சி அடையாத மாநிலங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு தேசத்தின் சமச்சீர் வளர்ச்சிக்கு வழிகோல முடியும்.
-
அதேநேரத்தில், மாநிலங்கள் தங்களது பங்களிப்புக்கு ஏற்ற அளவில், மத்திய அரசின் கவனம் பெறாமல் போனால் அது சரியான, நியாயமான ஜனநாயக முறைமை அல்ல. வரி வருவாய் பகிர்வில், அதிக அளவில் பங்களிக்கும் மாநிலங்களின் நியாயமான பங்கை மத்திய அரசு வழங்குதல் அவசியம் என்பதுதான் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை.
வருமான வரி, கார்ப்பரேட் வரி, சரக்கு-சேவை வரி உள்ளிட்ட முக்கியமான வரிகள் அனைத்தையும் வசூலிப்பது மத்திய அரசு தான். மது விற்பனை, பெட்ரோலிய பொருள்களின் விற்பனை, பத்திரப் பதிவுக் கட்டணம் உள்ளிட்டவை மட்டும்தான் மாநில அரசுகளின் வரி விதிப்பு வரம்புக்குள் வருகின்றன. மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் இருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் பகிர்வுத் தொகைதான் மாநில அரசுகளின் முக்கியமான வருவாய்.
14-ஆவது நிதி ஆணையம் மத்திய அரசின் நிதிப் பகிர்வை 32%-இல் இருந்து 42%-ஆக அதிகரித்தது. 15-ஆவது நிதி ஆணையம் 42% என்பதை 1% குறைத்து 41% என்று நிர்ணயித்தது. இப்போது 16-ஆவது நிதி ஆணையம் அதை மேலும் 1% குறைக்கக் கூடும் என்கிற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
எந்தெந்த மாநிலங்களுக்கு எந்தெந்த அளவுக்கு மத்திய வரி வருவாய் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை மத்திய நிதி ஆணையம் தீர்மானிக்கிறது. நிதிப் பகிர்வு மட்டுமல்லாமல், மத்திய-மாநிலங்களுக்கு இடையேயான எல்லா நிதி தொடர்பான விவகாரங்களையும் ஆய்வு செய்து பரிந்துரைப்பதும் நிதி ஆணையத்தின் பொறுப்பு.
Dit verhaal komt uit de March 06, 2025-editie van Dinamani Chennai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Chennai
Dinamani Chennai
இந்திய திறமைசாலிகளால் அதிக பயனடைந்தது அமெரிக்கா
எலான் மஸ்க் கருத்து
1 min
December 02, 2025
Dinamani Chennai
வக்ஃப் சொத்து தகவல்கள் பதிவேற்றம்: கால அவகாசத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல், திறன் மற்றும் மேம்பாடு (யுஎம்இஇடி) வலைதளத்தில் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை கட்டாயம் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை மறுப்பு தெரிவித்தது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை
நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Chennai
ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு
ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151-ஆக உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
தொழிலக உற்பத்தியில் 13 மாதங்கள் காணாத சரிவு
இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளர்ச்சி, கடந்த 13 மாதங்கள் காணாத அளவுக்கு 0.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
தில்லி கார் வெடிப்பு வழக்கு: அல் ஃபலா நிறுவனருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபடுத்தப்படும் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைதாகியுள்ள அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் ஜாவத் அகமது சித்திக்கியை 14 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை
நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
அமளியுடன் தொடங்கிய நாடாளுமன்றம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.
1 min
December 02, 2025
Translate
Change font size

