‘சட்டத்தின் ஆட்சியே இந்தியாவின் உறுதிப்பாடு; மேற்கண்ட விவகாரம் தொடா்பாக ஆதாரம் அளிக்கப்பட்டால், அது பரிசீலிக்கப்படும்’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.
பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.
அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்றவரான சீக்கிய பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னுனை அமெரிக்க மண்ணில் கொலை செய்யும் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும், இதுதொடா்பாக நிகில் குப்தா என்பவா் கைது செய்யப்பட்டதாகவும் அமெரிக்க அரசுத் தரப்பில் கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டது.
இந்திய அதிகாரி ஒருவரின் உத்தரவுப்படி நிகில் குப்தா செயல்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக விசாரிக்க உயா்நிலைக் குழுவை மத்திய அரசு அமைத்தது.

