Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள்

Dinamani Chennai

|

February 17, 2025

கணிதம், உடற்கூறியல், தாவரவியல், இயற்பியல், வணிகவியல், வரலாறு அரசியல், பொருளாதாரம், ஆட்சியியல் முதலான பல்வேறு துறைச் சொற்களைத் திருத்திச் சீரமைக்கும் பணியில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை முனைந்து செயல்பட்டதை அவருடைய நாட்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

- முன்னாள் தமிழியல் துறைத் தலைவர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்

பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளையின் நாட்குறிப்புகள்

ஆராய்ச்சி மன்னர், நடுநின்றாய்ந்த ஆபீடுடையாளர் என்றெல்லாம் அறியப்பட்டவர் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை (1891-1956). பிப்ரவரி 17-ஆம் தேதி அவரது நினைவு நாள். 1936-ஆம் ஆண்டு தொடங்கி 1956 பிப்ரவரி 9-ஆம் தேதி வரையிலும் 20 ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதுகிறார். பேராசிரியரின் நாட்குறிப்புகள், அவரது பன்முக வாழ்க்கைப் பயணத்தின் கண்ணாடி. வரன்முறைக்குட்பட்ட வாழ்க்கை நெறி, துறைப் பணி, ஆய்வு, நண்பர்கள் வட்டம், தன் முனைப்பு, செய்வன திருந்தச் செய்யும் இயல்பு எனப் பல நிலைகளில் அவருடைய இயல்புகள் அவரது நாட்குறிப்புகள் மூலம் வெளிப்படுகின்றன.

நூல் பரிசோதனையிலும், ஏடு பரிசோதனையிலும் மிகுந்த ஈடுபாட்டோடு செயலாற்றியவர் பேராசிரியர். பல ஊர்களிலுள்ள ஆவணப் பாதுகாப்பு மையங்களுக்குச் சென்று அவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்.

எந்தவொரு பணியை எடுத்துக்கொண்டாலும் அதன் திட்டத்தை முன்னரேயே வகுத்துக் கொள்ளும் இயல்புடையவர். இப்பண்பு அவருக்குத் தம் பணியைக் குறித்த நேரத்தில் முடிக்கத் துணை நின்றது எனலாம். ஒவ்வொரு திராவிட மொழியின் வரலாற்று இலக்கணம் மற்றும் ஒப்பீட்டு இலக்கணத்திற்கான பொதுத் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது என்ற குறிப்பிலிருந்து திராவிட மொழியின் வரலாற்று இலக்கணம் தயாரிக்க வேண்டும் என்ற அவரது முனைப்பு வெளிப்படுகிறது.

அவர் திருவிதாங்கூர் பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவராகப் பணியாற்றிய காலத்தில் தம் ஆய்வு மாணவரான டாக்டர் வ.அய்.சுப்பிரமணியத்திடம் (தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர்) மொழியாய்வாளர்களுக்குப் பிறமொழியறிவு தேவை என்பதைக் குறித்து விளக்கியிருக்கிறார் என்ற குறிப்பும் கிடைக்கிறது.

அவருடைய ஆய்வுலக நண்பர்கள் பலர். தமிழ்நாடு என்று மட்டுமன்றி இலங்கையிலும் அவருக்கு ஆய்வு மாணவர்களும் நண்பர்களும் இருந்தனர். அவர்களுள் இலக்கிய அறிஞர்கள் மட்டுமன்றி க.அ. நீலகண்ட சாஸ்திரி என்கிற புகழ் பெற்ற வரலாற்றறிஞர் உட்பட பிற துறை அறிஞர்களும் அடங்குவர். டி.கே.சி, கவிமணி, பெ.நா.அப்புசாமி முதலான பல நண்பர்களோடு அவர் பல வகையான இலக்கிய ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கிறார்.

FLERE HISTORIER FRA Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

இந்திய திறமைசாலிகளால் அதிக பயனடைந்தது அமெரிக்கா

எலான் மஸ்க் கருத்து

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

வக்ஃப் சொத்து தகவல்கள் பதிவேற்றம்: கால அவகாசத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல், திறன் மற்றும் மேம்பாடு (யுஎம்இஇடி) வலைதளத்தில் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை கட்டாயம் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை மறுப்பு தெரிவித்தது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை

நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு

ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151-ஆக உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

தொழிலக உற்பத்தியில் 13 மாதங்கள் காணாத சரிவு

இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளர்ச்சி, கடந்த 13 மாதங்கள் காணாத அளவுக்கு 0.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

தில்லி கார் வெடிப்பு வழக்கு: அல் ஃபலா நிறுவனருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபடுத்தப்படும் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைதாகியுள்ள அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் ஜாவத் அகமது சித்திக்கியை 14 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை

நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

அமளியுடன் தொடங்கிய நாடாளுமன்றம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.

time to read

1 min

December 02, 2025

Translate

Share

-
+

Change font size