試す 金 - 無料
வீணாகும் விளைச்சல்!
Dinamani Tiruvallur
|October 27, 2025
இந்தியா ஒரு விவசாய நாடு; கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது என்று மகாத்மா காந்தி கூறினார். அவர்கள் தங்களுக்காக வாழவில்லை; அனைத்து மக்களுக்காகவும் உழைக்கிறார்கள். ஆனால், அந்த விவசாயமும் விவசாயிகளும் படும்பாடு என்னென்பது?
மிகப்பெரிய அரசு நிர்வாகம் இருந்தும், அதற்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் இருந்தும் ஆண்டுக்கு ஆண்டு பல லட்சம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து பாழாவதைத் தடுக்க முடியவில்லை.
ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் 10,000 முதல் 20,000 மூட்டைகள் பாதுகாப்பின்றி அழிகின்றன. நெல்லை அறுவடை செய்து எடுத்தபிறகு நெல் கொள்முதலுக்காக நீண்ட காத்திருப்பில் சாலைகளில் கொட்டி வைக்கப்பட்ட நெல்மணிகள் அழிந்து போவதற்கு யார் பொறுப்பு? அல்லது யார் காரணம்?
ஓர் ஏக்கர் பயிர் உற்பத்திக்கு 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை கடன்கள் வாங்கிச் செலவழித்துப் பயிர் செய்து கண்ட பயன் என்ன? 'உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக்கூட மிஞ்சாது' என்பது அன்று முதல் இன்று வரை கொஞ்சமும் மாறவில்லை.
தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்குகின்றன. விவசாயிகள், தங்கள் நெல்லை விற்க, இந்த நிலையங்களை அணுக வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இணையதளம் மூலம் விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்து, தங்கள் நெல்லை விற்கப் பதிவு செய்யலாம்.
விவசாயிகளின் நலனுக்காக நாடு முழுவதும் பல இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களை அரசு அமைத்துள்ளது. கொள்முதல் நிலையங்கள் தொடர்பான புகார்களை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநரின் வாட்ஸ்-ஆப் எண்ணுக்குத் தெரிவிக்கலாம்.
மழை மற்றும் காத்திருப்பு போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க சில நேரங்களில், விளைநிலங்களுக்கே சென்று நெல்லை வாங்கும் நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.
2025-ஆம் ஆண்டுக்கான நேரடி நெல் கொள்முதல் விலை குறித்த தற்போதைய நிலவரம் தமிழக அரசு சன்ன ரக நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500-ஆக உயர்த்தியுள்ளது. மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.2,369 ஆகும். தமிழ்நாட்டில் அரசு வழங்கும் ஊக்கத்தொகையுடன் சேர்த்து இந்த விலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
このストーリーは、Dinamani Tiruvallur の October 27, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Tiruvallur からのその他のストーリー
Dinamani Tiruvallur
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Tiruvallur
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Tiruvallur
கல்லறைத் தோட்டங்கள்-கபர்ஸ்தான் அமைக்க உத்தரவு கடிதங்கள்
முதல்வர் வழங்கினார்
1 min
November 02, 2025
Dinamani Tiruvallur
1040-ஆவது சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு
பெருவுடையார்-பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம்
1 min
November 02, 2025
Dinamani Tiruvallur
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Tiruvallur
தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.
1 min
November 02, 2025
Dinamani Tiruvallur
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Tiruvallur
திருவண்ணாமலை கிரிவலத்துக்கு சிறப்பு ரயில்
திருவண்ணாமலையில் நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, நவ.4ஆம் தேதி விழுப்புரத்தில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
1 min
November 02, 2025
Dinamani Tiruvallur
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Tiruvallur
பணி அங்கீகாரம், கூடுதல் பாதுகாப்புக் கோரி வாக்குச்சாவடி அலுவலர்கள் போராட்டம்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடைமுறையில் ஈடுபடும் வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்கள், தங்களுக்கு உரிய பணி அங்கீகாரம், கூடுதல் பாதுகாப்புக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
November 02, 2025
Listen
Translate
Change font size
