Magzter GOLDで無制限に

Magzter GOLDで無制限に

10,000以上の雑誌、新聞、プレミアム記事に無制限にアクセスできます。

$149.99
 
$74.99/年

試す - 無料

உழைப்பு...ஓய்வு...உறக்கம்!

Dinamani Chennai

|

May 01, 2025

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்பட வேண்டும்; நிலைநாட்டப்பட வேண்டும். சாதாரண தொழிற்சாலைகளில் மட்டுமல்ல, பெரு நிறுவனங்கள் (கார்ப்பரேட் நிறுவனங்கள்) பலவற்றிலும் மனிதாபிமான அணுகுமுறை அற்றுப்போய் கிடக்கிறது.

- த.ஸ்டாலின் குணசேகரன்

உழைப்பு...ஓய்வு...உறக்கம்!

ஈரோட்டில் ஒரு மாதத்துக்கு முன்பு ஒரு தொழிலாளி தான் பணியாற்றும் தொழிற்சாலையில் ஒன்பதரை மணிக்கு வேலையைத் தொடங்கினார். பின்னிரவு சுமார் இரண்டரை மணிக்கு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார். இரவுப் பணியில் வேலை செய்த அனைத்துத் தொழிலாளர்களும் செய்வதறியாது பதறினர்.

அகால நேரத்திலும் நிர்வாகத்துக்குத் தகவல் கிடைக்கப் பெற்று தொழிற்சாலையின் நிர்வாகி ஒருவர் அங்கு வந்து சேர்ந்தார். அதற்குள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இறப்பை உறுதிசெய்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அந்தத் தொழிலாளி இறந்த பிறகு மருத்துவமனைக்கோ, அவரது வீட்டுக்கோ நாங்கள் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் அதற்கென்று உள்ள வாகனத்தில் ஏற்றிச் செல்லுமாறும் கூறிவிட்டுச் சென்றுவிட்டனர்.

அதற்குள் குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தகவல் கிடைத்து, அலறியடித்துக் கொண்டு தொழிற்சாலைக்கு வந்தனர். தொழிற்சாலை நிர்வாகி வாகனத்தை வரவழைத்து தனது பொறுப்பில் சடலத்தை அந்தத் தொழிலாளியின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இரண்டு மூன்று நாள்கள் கழித்து, அந்தத் தொழிலாளியின் மரணத்தையொட்டிச் செய்ய வேண்டிய சடங்குகளுக்கு ஏதேனும் உதவி செய்ய நிர்வாகத்திடம் குடும்பத்தினர் முறையிட்டனர். தொழில் இருக்கும் மோசமான சூழலை நிர்வாகி காரணம் காட்டி, இறந்தவுடன் செலவு செய்து சடலத்தை வீட்டுக்கு அனுப்பியதை உதவியாக எடுத்துரைத்து எதுவும் அளிக்காமல் அவர்களை அனுப்பினார்.

பின்னர் தொழிற்சங்கம் இதில் தலையிட்டு தொழிலாளரின் குடும்பச் சூழல், வறுமை என்று இருக்கிற எல்லாக் காரணங்களையும் நிர்வாகத்திடம் எடுத்துரைத்து, நிர்க்கதியாக நிற்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு ஒரு தொகையை நஷ்டஈடாக வழங்குமாறு கோரிக்கை வைத்தது.

அந்தத் தொழிலாளிக்கு வயது 54; மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர். சட்டம், மனிதாபிமானம், நடைமுறைப் பழக்கம், குடும்பத்தின் நிலை, நிர்வாகத்தின் கடமை, நீதிமன்றத் தீர்ப்பு என்று அனைத்து விளக்கங்களும் அழுத்தமாகவும் முறையாகவும் சங்கத்தின் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.

Dinamani Chennai からのその他のストーリー

Dinamani Chennai

Dinamani Chennai

இந்திய திறமைசாலிகளால் அதிக பயனடைந்தது அமெரிக்கா

எலான் மஸ்க் கருத்து

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

அமளியுடன் தொடங்கிய நாடாளுமன்றம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

பேரவைத் தேர்தல்: அமமுகவினர் டிச. 10 முதல் விருப்ப மனு பெறலாம்

தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் டிச.10 முதல் விருப்ப மனு பெறலாம் என அக்கட்சியின் பொதுச் செயலர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

அதானி நிறுவனத்தில் எல்ஐசி முதலீடு: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்

அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) நிதியமைச்சகம் எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் விளக்கமளித்தார்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

காங்கிரஸ் குழு முதல்வரை நாளை சந்திக்க திட்டம்

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ள காங்கிரஸ் குழுவினர், அக்கூட்டணி தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினை புதன்கிழமை (டிச.3) சந் தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

சாலைகளில் ரத்தக் கறை!

தமிழகத்தில் கடந்த ஏழு நாள்களில் நடைபெற்ற இரு சாலை விபத்துகளில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

time to read

2 mins

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

காசி - தமிழ் சங்கமம் - தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை: எல்.முருகன்

காசி - தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

பொதுப்பயன்பாட்டு நிலத்தை விற்பனை செய்த வழக்கு: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவையில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்

தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Translate

Share

-
+

Change font size