‘வீண் சச்சரவு வேண்டாம்' எனவும் வலியுறுத்தல்
அத்துமீறல் விவகாரத்தை முன்வைத்து, நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் போராடி வரும் நிலையில், பிரதமா் மோடி இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடா் கடந்த டிச. 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்களவையில் கடந்த டிச.13-ஆம் தேதி பாா்வையாளா் மாடத்தில் இருந்து உள்ளே குதித்த இரு இளைஞா்கள், வண்ணப் புகையை உமிழும் குப்பிகளை வீசினா்.
அவைக்குள் புகை பரவியதால், எம்.பி.க்கள் மத்தியில் பதற்றமும் பீதியும் ஏற்பட்டது. பின்னா், இருவரும் மடக்கிப் பிடிக்கப்பட்டனா். அதேநேரம், நாடாளுமன்றத்துக்கு வெளியே ஒரு பெண் உள்பட இருவா் வண்ணப் புகையை உமிழும் குப்பிகளை வீசி, போராட்டத்தில் ஈடுபட்டனா். இவ்விரு சம்பவங்களும் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தின.

