இந்த பாலின ஹார்மோனின் தூண்டுதலினால்தான், ஆண்-பெண் உடல் அமைப்புக்கு ஏற்ப உடலில் கொழுப்பு படிகிறது.
சுமார் 15 வயதிற்கு மேல் கொழுப்பு செல்கள் புதிதாக உருவாவதில்லை. ஏற்கனவே உருவான செல்கள் அப்படியேதான் இருக்கும். அந்த செல்களில் கொழுப்பு மட்டும் தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.
பருவ வயதைத் தாண்டியபிறகு சிலருக்கு புதிதாக, மிக அரிதாக, புது கொழுப்பு செல்கள் உருவாகும். இது எப்பொழுது தெரியுமா? 25 வயது வாலிபருக்கு, உடல் எடை கட்டுக்கு அடங்காமல், அதிக பருமனானால், புது கொழுப்பு செல்கள் அவரது உடலில் உருவாகும். அதேபோல், சிலரின் உடலில் அதிகமாக சேர்ந்துள்ள கூடுதல் கொழுப்பு செல்கள் முழுவதும் சுரண்டி எடுக்கப்பட்டு விட்டாலும் (Liposuction Surgery), புது கொழுப்பு செல்கள் அவர்களது உடலில் உருவாகும்.
இடுப்பு பகுதி, தொடைப்பகுதியைக் காட்டிலும் உங்கள் வயிற்றிலும், வயிற்றைச் சுற்றியும், அதிகமான கொழுப்பை நீங்கள் நிரந்தரமாக சுமந்து கொண்டிருந்தால், அது உங்கள் உடலுக்கு நல்லதல்ல. இப்படி வயிற்றில் சேரும் கொழுப்புதான், ஆபத்தான நோய்களை உண்டாக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.
தினமும் வேளாவேளைக்கு நன்றாக சாப்பிட்டுவிட்டு, தூங்கித் தூங்கி எழுந்துகொண்டிருந்தால், வயிற்றில் கொழுப்பு படியத்தான் ஆரம்பிக்கும். ‘கை எலும்பு முறிவு, கால் எலும்பு முறிவு, ஆபரேஷன் முடிந்துவிட்டது, ஒரு மாதம் நடக்கக் கூடாது, படுக்கையிலேயே தான் இருக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லி விட்டார். நன்றாக சாப்பிட்டுவிட்டு நடக்காமல் இருந்தேன், இப்பொழுது வயிற்றில் கொழுப்பு படிந்து புதிய தொப்பை வந்துவிட்டது’ என்று நிறைய பேர் சொல்வதை நாம் கேட்டிருப்போம்.
தினமும் உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்குள் வைத்திருக்கும் நிறைய பேர், சில காரணங்களினால் உடற்பயிற்சியை சில மாதங்களுக்கு செய்ய முடியாமல் போனால் அவர்கள் வயிற்றில் கொழுப்பு படிந்து, வயிறு பெரிதாக வாய்ப்பிருக்கிறது. கட்டுப்பாடான உணவும், உடற்பயிற்சியும், உடலுழைப்பும் தினமும் இருந்தால் வயிறு பெரிதாகாது.
உடலுழைப்பு இல்லாமல் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தினமும் அதிகமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தால், வயிறு மட்டுமல்ல, உடல் முழுவதுமே பருமனாக ஆரம்பிக்கும்.
この記事は Kungumam Doctor の September 01, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kungumam Doctor の September 01, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
இறுதி மாதவிடாயை எதிர்கொள்ளும் வழிகள்
ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பருவத்தை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதல்கட்டம், பூப்பெய்தும் வரை. அடுத்தது, குழந்தைப்பேறு அடையும் பருவம்.
எளிய மருத்துவம்!
வேப்பம் பூ ரத்தத்தை சுத்தப்படுத்தும். பித்த நோய்களை குணப்படுத்தும்.
பிரசவத்துக்குப் பிறகான டிப்ரசன்
சில வாரங்களுக்கு முன், நன்றாக படித்த, பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண், தன் மகனைக் கொலை செய்து விட்டார் என்று செய்தித்தாள்களிலும், காட்சி ஊடகங்களிலும் பார்க்க முடிந்தது.
ஹார்மோன் பிரச்னைகளை சீராக்கும் உணவுகள்!
உடலில் ஹார்மோன் சுரப்பு சீராக இருந்தால்தான் உடல், மனம் இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும்.
உலர்திராட்சையின் நன்மைகள்!
ஊற வைத்த உலர் திராட்சையில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரும்புச் சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை யாவும் பெண்களுக்கு அதிக நன்மைகளை தரக்கூடியவை.
சில நோய்கள்...எளிய வைத்தியங்கள்!
வலி சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை.
இரைப்பை புற்றுநோய் அறிவோம்!
ஆனால், ஜப்பானைவிட இந்தியாவில் குறைவாகதான் காணப்படுகிறது.
குடலைக் காக்கும் மணத்தக்காளி கீரை!
நோய் வராமல் தடுக்கவும், நோய் வந்தால் வகிப்பது கீரைகள்.
சுத்திகரிப்பின் சூட்சுமம்
கோடையின் மாலை வேளையில் நீங்கள் வீடு திரும் | புகிறீர்கள், உடல் சோர்வும், களைப்பும் நிறைந்து இருக்கிறது. எனினும் வீட்டில் உங்களை சந்திக்க முக்கிய மான ஒருவர் வருவதாக சொல்லியிருக்கிறார்.
கழுத்து வலி காணாமல் போக...
மத்திய வயதுள்ளவர்களுக்கு இன்று அதிகம் தொல்லை தருவது கழுத்துவலி.'செர்விக்கல் ஸ்பாண்டி லைட்டிஸ்' (Cervical Spondylitis) என்று மருத்து வர்கள் இதை அழைக்கிறார்கள்.