कोशिश गोल्ड - मुक्त
யோகா - வாழ்வியல் நெறி!
Dinamani Tiruvarur
|June 21, 2025
பாரத நாட்டிலுள்ள ஆறு தத்துவ தரிசனங்களில் ஒன்றாக யோகமானது திகழ்கிறது.
-
பண்டைக் காலத்திலிருந்தே முனிவர்களும், சித்தர்களும், தவசீலர்களும், யோகிகளும், ஞானிகளும், தன்னை உணர்ந்தோரும் மனிதகுலத்தின் மீது அளப்பரும் அன்பும் இரக்கமும் பரிவும் கொண்டு மனித வாழ்க்கையின் குறிக்கோளை மிக நுட்பமாக அறிந்து உணர்ந்து, அந்த முக்தியை அடைவதற்கு உரிய பல அரிய நெறிமுறைகளை அருளினர். மனிதன் முக்தி அடைவதற்கு உடல் நலமும் மனநலமும் இன்றியமையாதவை. மனிதன் தன் உண்மையான இயல்பை உணர்ந்து, முக்தியை அடைய உடல், மன நலத்துடன் வாழ்ந்து உண்மையான உயர்ந்த இன்பத்தை அடையும் வழிகளைத் திருமூலர் திருமந்திரத்தில் மனிதகுலத்துக்கு வழங்கியுள்ளார். திருமூலரின் திருமந்திரமானது, பன்னிரு சைவத் திருமுறைகளின் பத்தாம் திருமுறையாக அமைந்துள்ளது. திருமூலர் அறுபத்து மூன்று மெய்யடியார்களில் ஒருவர் ஆவார். இவர் அட்டமாசித்திகளில் தேர்ந்த ஞானயோகி ஆவார்.
யோகம் என்னும் சொல்லுக்கு இணைதல், சேர்தல், ஒருமுனைப்பாடு எனப் பல பொருள்கள் உள்ளன. நம் உடல், மனம், மூச்சு, அறிவு என்னும் இவ்வனைத்தும் ஒருங்கிணைந்து செயலாற்றுவதுதான் உண்மையான யோகமாகும். திருமந்திரத்தில் மூன்றாம் தந்திரத்தில் அட்டாங்க யோகம் குறித்து விவரித்துள்ளார். யோகத்தின் எட்டு அங்கங்களான இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாஹாரம், தாரணம், தியானம், சமாதி என்னும் இவற்றைக்குறித்து ஆழமாக விளக்கியுள்ளார்.
यह कहानी Dinamani Tiruvarur के June 21, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tiruvarur से और कहानियाँ
Dinamani Tiruvarur
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Tiruvarur
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Tiruvarur
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Tiruvarur
1040-ஆவது சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு
பெருவுடையார்-பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம்
1 min
November 02, 2025
Dinamani Tiruvarur
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Tiruvarur
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Tiruvarur
அம்மானை!
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Tiruvarur
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Tiruvarur
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Tiruvarur
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Translate
Change font size
