मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

வ.உ.சி. 154-ஆவது பிறந்த நாள்: சிலைக்கு மரியாதை

Dinamani Kanyakumari

|

September 06, 2025

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி கோவில்பட்டி, நாகர்கோவில்/திருச்செந்தூர்/உடன்குடி/ஆறுமுகனேரி, செப். 5:

ஓட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள வ.உ.சி. நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, தமிழக அரசு சார்பில், மாவட்ட ஆட்சியர் டி. இளம்பகவதன், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. எம்.சி.சண்முகையா அகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவர், வ.உ.சிதம்பரனாரின் வாரிசுதாரர் உ.செல்விக்கு சால்வை அணிவித்து கௌரவித்ததுடன், வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு புகைப்படங்களை பார்வையிட்டார்.

விழாவில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன் பாண்டியன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஐவகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கோவில்பட்டியில் சைவ வேளாளர் சங்க கட்டடத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு சைவ வேளாளர் சங்க துணைச் செயலர் பிரபு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தணிக்கையாளர் சுந்தரம், நிர்வாக குழு உறுப்பினர்கள் அதிநாராயணன், ஆறுமுக நாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கடம்பூர் செ.ராஜு எம்.எல்.ஏ. ஆகியோர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில் நகர்மன்றத் தலைவர் கருணாநிதி தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தேமுதிக நகரச் செயலர் நேதாஜி பாலமுருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் சீனிவாசன், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்புத் தலைவர் தமிழரசன், விசிக நகரச் செயலர் கருப்பசாமி பாண்டியன், திருக்குறள் கூட்டமைப்பு சார்பில் மாநில துணைத் தலைவர் கருத்தபாண்டி, தூத்துக்குடி மாவட்டச் செயலர் செல்லத்துரை என்ற செல்வம் உள்ளிட்ட பலர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Dinamani Kanyakumari से और कहानियाँ

Dinamani Kanyakumari

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Kanyakumari

உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை

நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Kanyakumari

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Kanyakumari

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Kanyakumari

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

time to read

2 mins

December 02, 2025

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Kanyakumari

கேரள முதல்வருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்துக்கு (கேஐஐஎஃப்பி) மாநில அரசு கடன் பத்திரங்கள் மூலம் பெற்ற வெளிநாட்டு முதலீடுகளில் பண முறைகேடு நடந்ததாக கூறி, முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலர் கே.எம். ஆப்ரகாம் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Kanyakumari

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Kanyakumari

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

time to read

1 min

December 02, 2025

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Translate

Share

-
+

Change font size