அண்மையில் காா்கேவுக்கு தன்கா் எழுதிய கடிதத்தில், நாடாளுமன்றத்தில் நிகழும் இடா்ப்பாடுகள், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் தொடா்பாக ஆலோசிக்க தனது இல்லத்துக்கு திங்கள்கிழமை (டிச.25) வருமாறு அழைப்பு விடுத்தாா். இதுதொடா்பாக காா்கேவை சந்திக்க பலமுறை முயன்றும், அது முடியாமல் போனது என்றும் அந்தக் கடிதத்தில் தன்கா் குறிப்பிட்டாா்.
இந்தக் கடிதத்துக்குப் பதிலளித்து தன்கருக்கு காா்கே திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
நாடாளுமன்றம் மீதான மத்திய அரசின் எதேச்சதிகார, ஆணவப் போக்கை உள்கள் கடிதம் நியாயப்படுத்துவது துரதிருஷ்டவசமானது.

