कोशिश गोल्ड - मुक्त
Heartfulness Magazine Tamil - October 2023

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ
पढ़ना Heartfulness Magazine Tamil केवल एक सदस्यता के साथ 10,000+ अन्य पत्रिकाएँ और समाचार पत्र
कैटलॉग देखेंकेवल Heartfulness Magazine Tamil की सदस्यता लें
इस अंक में
மனிதர்களிடையே உள்ள மனநல பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவற்றை கையாள்வதற்கான முயற்சிகளை நடைமுறைப்படுத்தவும் அக்டோபர் 10ம்தேதி, உலக மனநல
தினமாக அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும், இன்று பல கலாச்சாரங்களில், மனநலன் பற்றி பேசுவது தயக்கத்திற்குரிய ஒரு விஷயமாகவும், மனநோய்க்கு தீர்வு அளிக்கக்கூடிய ஒரு சிகிச்சை முறையாகவும் தான் அணுகப்படுகிறது. யோகா, ஆயுர்வேதம், பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும்
பிற பண்டைய மரபுகள் - மனம், உணர்வுகள் மற்றும் உடல் என தனித்தனியாக அல்லாமல் ஒன்றாக சிகிச்சை அளிக்கும் பரந்த அணுகுமுறையை கொண்டுள்ளன. மனநலன் என்பதை உயர்நிலைகளை அடைந்து முழுமை பெறுவதற்கான மற்றும் உணர்வுறுநிலையின்
விரிவாக்கத்திற்கான ஒரு வளர்ச்சிப் பயணமாக கருதுகிறார்கள்.
எனவே, இந்த பதிப்பில், மனநலன் பற்றி மேலும் ஆழமான ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இளைஞர்கள் மனநலனுடன் இருப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கும், அவர்கள் முழுமை பெறுவதற்கும் உகந்த குறிப்புகளை தாஜி வழங்குகிறார். ஆச்சார்ய ஸ்ரீ வர்மா, மனநலனிற்கான
ஆயுர்வேத அணுகுமுறையின் எளிமையை விளக்குகிறார். சித்தார்த்தா வி.ஷா., கலையின் மூலம் நிதானத்தை கற்றுக்கொள்வதற்கும் அது எவ்வாறு குணப்படுத்துதலுக்கு உதவுகிறது என்பதையும்
விவரிக்கிறார். தாமஸ் ஸ்டான்லி, ஷிண்டோ முறையில் நமது வீட்டில் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவதால் ஏற்படும் நேர்மறையான விளைவுகளை போற்றுகிறார். மேலும் மேரி கெர்ரிகன் அத்தியாவசிய இடத்தை உருவாக்குவதன் மதிப்பைப் பற்றி பேசுகிறார். வேதோ சாட்டர்ஜி முழுமையாக நிகழ்தருணத்தில் இருத்தல் குறித்தும், மம்தா சுப்ரமணியம் உள்ளொளியை ஒளிரச்செய்வது குறித்தும் ஆய்வு செய்கின்றனர். இசக் அடிஸஸ், நமது முந்தைய அனுபவங்கள்
தற்போதைய மனநிலையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராய்கிறார். மேலும் பரிதி சிங், வெற்றி மற்றும் மன உளைச்சல் குறித்து விளக்குகிறார். காஜல் குப்தா, கவனமுள்ள பெற்றோர்களாக இருப்பதற்கான குறிப்புகளை வழங்குகிறார்.
உங்கள் மனநலனை மேம்படுத்திக்கொள்வதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள்
அனுபவங்களை contributions@heartfulnessmagazine.com. என்ற தளத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்.
हाल के अंक
June 2025
July_August 2025
May 2025
April 2025
March 2025
February 2025
January 2025
December 2024
November 2024
October 2024
September 2024
August 2024
July 2024
June 2024
May 2024
April 2024
March 2024
February 2024
January 2024
December 2023
November 2023
September 2023
August 2023
July 2023
June 2023
May 2023
April 2023
March 2023
February 2023