Essayer OR - Gratuit
விட்டுக்கொடுத்தலும் விலகுவதும் எதற்காக?
Thangamangai
|Thanga Mangai February 2024
குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா? அது எந்த நாட்டுப் பெண்கள் என்பதை பொருத்தும் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நம் தமிழ் நாட்டுப் பெண்கள் பற்றி மட்டும் பார்ப்போமே. மேலே படியுங்கள்.
-
கணவன் மனைவி உறவு சிறக்க வேண்டுமென்றால், குடும்பம் விளங்க வேண்டுமென்றால், விட்டுக் கொடுத்தல் மிகவும் அவசியம் ஆகும். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல் சிறப்பு ஆகும். குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா? அல்லது ஆண்களா? பல குடும்பங்களில் பெண்கள் தான் அதிகம் விட்டுக் கொடுப்பார்கள். சில குடும்பங்களில் ஆண்கள் அதிகம் விட்டுக் கொடுப்பதையும் நாம் பார்க்கிறோம்.
கணவனுக்கும் மனைவிக்கும் பல செயல்களில் கருத்து வேறுபாடுகள் வரலாம். இருவரும் வெவேறு சூழ்நிலைகளில் வளர்ந்து இணைந்தவர்கள் என்பதை மறக்கலாகாது. ஆணின் சிந்தனைகளும், வேறு. பெண்ணின் வேறு. அதனால் முக்கியத்துவங்களும் எண்ணங்களும் முக்கியத்துவங்களும் சண்டைகளும், கருத்து வேறுபாடுகளும் தவிர்க்க முடியாதவை என்பதை இரு பாலரும் உணர வேண்டும்.
பெண்கள் ஏன் அதிகம் விட்டுக் கொடுக்கிறார்கள்? இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பெண்கள் அதுவும் தமிழ் பெண்கள் இயல்பாகவே மிகவும் பொறுமைசாலிகள். கணவன் மீது உள்ள மரியாதையின் நிமித்தம் விட்டுக் கொடுக்கலாம். பெண்கள் திருமண பந்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதற்கு பங்கம் வந்து விடக் கூடாது என்பதற்காக விட்டுக் கொடுக்கலாம். குழந்தைகளுக்காக விட்டுக் கொடுக்கலாம். பொருளாதார ரீதியாக கணவனை சார்ந்திருப்பதனால் விட்டுக் கொடுக்கலாம். ஊர் உலகத்திற்கு பயந்து விட்டுக் கொடுக்கலாம். எது எப்படியோ, பெண்கள் விட்டுக் கொடுத்து நம் எல்லா குடும்பங்களையும் உடையாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது உண்மை.
இப்பொழுது இந்த விட்டுக் கொடுத்தல் கொஞ்சம் குறைந்து வருகிறது என்பது உண்மை தான். பெண்கள் பொருளாதார ரீதியாக ஆண்களை சார்ந்திருப்பது குறைந்திருப்பதால் ஏற்படும் விளைவு தான் இது. 'தான்' என்கிற அகந்தை இப்பொழுது பெண்களையும் பிடித்து ஆட்ட தொடங்கி விட்டது தான் காரணம்.
விட்டுக் கொடுப்பது தான் சிறந்த இல்லறத்திற்கு முதுகெலும்பு ஆகும். அது ஒன்றும் கேவலமில்லை. மற்றவர்கள், ஒற்றுமையாய் இருக்கும் உங்களை அதுவும் இதுவும் சொல்லி கலைக்க முயலுவார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அகந்தையை தூக்கி வீசுங்கள்.
Cette histoire est tirée de l'édition Thanga Mangai February 2024 de Thangamangai.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Thangamangai
Thangamangai
குடல் ஆரோக்கியம் பேணுவதன் அவசியம்!
காரணமே இல்லாமல் வயிறு உப்புசம், சோர்வு அல்லது ஏதோவொரு விதமான குழப்பத்தில் இருப்பதாக உங்களுக்கு எப்போதாவது தோன்றியிருக்கிறதா? அப்படியிருந்தால், அது உங்களுடைய குடல் ஏதாவது செய்தி சொல்ல முயல்வதாக எடுத்துக் கொள்ளலாம்.
2 mins
Thanga Mangai July 2025
Thangamangai
பாலின வன்முறைக்குத் தீர்வு என்ன?
பாலின அடிப்படையிலான வன்முறை என்பது உலகில் மிகவும் பரவலான மனித உரிமை மீறல்களில் ஒன்றாகும். இது ஒவ்வொரு நாட்டிலும், சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் நிகழ்கிறது.
2 mins
Thanga Mangai July 2025
Thangamangai
இதயம் காக்கும் வாழ்க்கை முறைகள்!
மாறுபட்ட பிராண வாயுவின் விபரீதங்களும் - ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் (Oxidative Stress), அதிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் வழி முறைகளும் - ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் (Anti Oxidants)
3 mins
Thanga Mangai July 2025
Thangamangai
ஆரோக்கியமான காலை உணவு!
காலை வேளை உணவு மிக முக்கியமானதாகும். வேலைப் பளுவைப் பொறுத்து காலை உணவு மாறுபடும். உடலுழைப்பு உள்ளவர் என்றால் மாவுச் சத்து உள்ள உணவுகளான இட்லி, தோசை, உப்புமா, சப்பாத்தி போன்றவற்றை நன்றாக எடுத்துக் கொள்ளலாம். அதனுடன் சேர்த்து புரதத்திற்காக முட்டை, நட்ஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
1 min
Thanga Mangai July 2025
Thangamangai
முதல் கடமை!
இளம் வயதிலேயே தொழிலதிபர் என்ற பட்டத்தைப் பெற்ற கனகசுந்தரத்திற்கு, தான் எத்தனை தொழில்களை செய்துவருகிறோம் என்பதுகூட தெரியாது.
2 mins
Thanga Mangai July 2025
Thangamangai
பசுமை திருமணம் செய்த சென்னைப் பெண்!
இன்றைய காலக்கட்டதில் உலகளாவிய பெரும் சிக்கலாக கழிவுகள் இருக்கின்றன. அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு இன்றைக்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது ஆறுதல் அளிக்கிறது.
3 mins
Thanga Mangai July 2025
Thangamangai
தங்கத்தை பெண்கள் விரும்புவது ஏன்?
நாட்டில் தங்கத்தின் விலையும், பெட்ரோல் விலையும் தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
3 mins
Thanga Mangai July 2025
Thangamangai
வெயிலால் ஏற்படும் தலைவலி போக சில எளிய வழிகள்!
தலைவலி என்பது எதனால் வருகிறது என்று சமயத்தில் காரணம் தெரிய வேண்டும்.
1 min
Thanga Mangai July 2025
Thangamangai
கோடையில் சருமத்தை பாதுகாக்க எளிய வழிகள்
கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்துக்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும்.
1 min
Thanga Mangai July 2025
Thangamangai
பெண்களுக்கான இயற்கை ஒப்பனை குறிப்புகள்!
அழகாக இருக்க அன்றாடம் காலையில் பல ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தி நீங்கள் சோர்வடைந்திருப்பீர்கள் என்றால் உங்களுக்குத் தான் இந்தக் குறிப்புகள்.
2 mins
Thanga Mangai July 2025
Listen
Translate
Change font size

