Essayer OR - Gratuit
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
Dinamani Erode & Ooty
|October 27, 2025
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, பலலட்சக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிகழ் ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த அக். 22 ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. விழா நாள்களில் கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் அதைத்தொடர்ந்து மற்ற பூஜைகளும் நடைபெறுகின்றன. மாலை 4.30 மணியளவில் கோயில் கடற்கரைக்கு சுவாமி எழுந்தருளுகிறார். இதையடுத்து, சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது.
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் விரதம் மேற்கொண்டுள்ள லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் கோயில் வளாகத்தில் பக்தி பாடல்களைப்பாடி வழிபட்டு வருகின்றனர். வண்ண மின் விளக்குகளால் ராஜகோபுரமும், கோயில் வளாகமும் ஜொலிக்கின்றன.
Cette histoire est tirée de l'édition October 27, 2025 de Dinamani Erode & Ooty.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
காங்கிரஸின் அணுகுமுறையால் கூட்டணியில் அதிருப்தி
அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
June 09, 2026
Dinamani Erode & Ooty
காங்கிரஸ் தன்னை வலுப்படுத்த முயல்வது தவறா?
கேரளம், மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தனது கட்சியை வலுப்படுத்த முயல்வது எப்படி கூட்டணியைப் பலவீனப்படுத்தும் செயலாகும் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார்.
1 min
June 09, 2026
Dinamani Erode & Ooty
மின்வாரியத்தில் 15,000 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்
1 min
June 09, 2026
Dinamani Erode & Ooty
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 09, 2026
Dinamani Erode & Ooty
தமிழகத்தில் 5 மாதங்களில் 145 பேர் உடல் உறுப்பு தானம் !
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த ஐந்து மாதங்களில் 145 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 800 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Erode & Ooty
ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா
ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.
1 mins
June 09, 2026
Dinamani Erode & Ooty
தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!
தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.
2 mins
June 09, 2026
Dinamani Erode & Ooty
ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Erode & Ooty
வாக்களித்தால் மட்டும் போதுமா?
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.
3 mins
June 09, 2026
Dinamani Erode & Ooty
அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டி சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை காலை சிற்றுண்டி சாப்பிட்ட 11 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
1 min
June 09, 2026
Listen
Translate
Change font size
