Essayer OR - Gratuit

நாமும் இருக்கிறோம் பேருக்கு!

Dinamani Dharmapuri

|

April 22, 2025

நாட்டின் மிக மிக முக்கியப் பிரச்னைகளின் மூலங்களை ஆய்ந்து, சார்பு நிலையின்றி நல்தீர்வுக்கான நடைமுறை சாத்தியங்களை பரிசீலித்து, நாடும் நாட்டு மக்களும் நலம் பெறும் வகையில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

- - ரவிசுப்பிரமணியன்

எழுத்துப் பணிகளுக்கு மத்தியில் ஓர் ஆவணப்பட இயக்குநராக அவ்வப்போது இணையத்தில் ஆவணப் படங்களைப் பார்ப்பது என் வழக்கம். அப்படி சமீபத்தில் ஆவணப் படங்களை நான் தேடி இணையத்தில் உலாவிய போது, 'எழுநா' என்ற ஓர் இலங்கை வலைதளத்தில் இரண்டு ஆவணப் படங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது.

இந்தப் படங்களைப் பற்றி பிறகு பேசுகிறேன். அந்த வலைதளத்துக்குள் உள்ளே சென்றபோது கண்ட விஷயங்கள் மிக அபூர்வமாகவும் ஆச்சரியத்தைத் தரக்கூடியதாகவும் அமைந்திருந்தன. 'எழுநா' ஒரு சமூக கலை இலக்கிய ஆய்விதழ். இலங்கையும் இலங்கை சார்ந்த ஆய்வுகளும் கட்டுரைகளாக அத்தளத்தில் முன் வைக்கப்பட்டிருந்தன. எழுத்தாளர்களை, பல் துறை சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர்களின், கலைஞர்களின் ஆக்கங்களை அதில் வாசிக்க முடிந்தது. ஆனால், இதில் பங்கேற்றவர்கள் அனைவரும் உலகெங்கு முள்ள ஈழத்தமிழர்களாக மட்டுமே இருந்தனர்.

இலங்கையின் வரலாறு, பண்பாடு, சமூகவியல், மானுடவியல், மொழியியல், அரசியல், பொருளாதாரம், சூழலியல், சட்டம் போன்ற பல தளங்களில் கனமான பல் வேறு கோணங்கள் நிறைந்த மனச்சாய் வற்ற, ஆழமான ஆய்வு கட்டுரைகள் அதில் வெளியிடப்பட்டிருந்தன.

மாத இதழ் தவிர, யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மருத்துவ ஏட்டுப் பிரதிகளை ஒருங்கிணைத்து பால. சிவகடாட்சம் அச்சில் முதன் முதலில் பதிப்பித்த 'இரசவர்கம்', 1865-ஆம் ஆண்டு ஈழத்தின் திருகோணம லையில் பிறந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் பின்னர் மாநிலக் கல்லூரி யிலும் கல்வி கற்று பின் தனது 37-ஆவது வயதில் உயிர் நீத்த தி.த. சரவணமுத்துப் பிள்ளை எழுதிய 'தமிழ்ப்பாஷை' எனும் ஆய்வு நூல், இனவிரோத உணர்ச்சி சார்ந்த அரசியலிலிருந்து விடுபட்டு தேசிய இனங் களின் விடுதலைக்கும் சமத்துவ வாழ்வுக் குமான தமிழ் முஸ்லிம் மக்கள் தமக்குள் ளும் தமக்கு வெளியேயும் செய்ய வேண்டி யவை குறித்த விவாதங்களைப்பற்றி பேசும் வ.ஐ.ச. ஜெயபாலன் எழுதிய 'தோழமை யுடன் ஒரு குரல்', இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மலையகத்தமிழர்கள் குறித்து பேசும் மலையகம் எழுகிறது என்ற தலைப் பில் வி.ரி.தர்மலிங்கம் எழுதியது போன்ற நூல்களும், சமகாலப் பிரச்னைகள் தொடர்பான ஆய்வு அடிப்படையிலான மேலும் தரமான சில நூல்களும் வெளியி டப்பட்ட தகவல்கள் அதில் உள்ளன.

PLUS D'HISTOIRES DE Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Dharmapuri

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Dharmapuri

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Dharmapuri

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Dharmapuri

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பிரதமர் குறிப்பிட்டது திமுகவைதான்; தமிழக மக்களை அல்ல: பாஜக

'பிகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டது திமுகவைதான்' தமிழக மக்களை அல்ல' என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

time to read

1 min

November 01, 2025

Dinamani Dharmapuri

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Dharmapuri

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size