வன்முறையை ஒடுக்க முப்படைகளுக்கு உத்தரவு
Dinamani Chennai|May 11, 2022
இலங்கையில் பலி 8-ஆக உயர்வு; அமைதி காக்க அதிபர் வேண்டுகோள்
வன்முறையை ஒடுக்க முப்படைகளுக்கு உத்தரவு

கொழும்பு, மே 10:

இலங்கையில் வன்முறையை ஒடுக்கும் வகையில், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முப்படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இதற்கிடையே, திங்கள்கிழமை நடந்த வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்தது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் மகிந்த ராஜபட்ச ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் கொழும்பில் அதிபர் அலுவலகம் அருகேயுள்ள காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் மீது மகிந்த ராஜபட்சவின் ஆதரவாளர்கள் திங்கள்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். இதையறிந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மகிந்தவின் ஆதரவாளர்கள் மீது போராட்டக்காரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, மகிந்த ராஜபட்சபிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். ஆனாலும், வன்முறையை நிறுத்த முடியவில்லை. அம்பந்தோட்டாவில் உள்ள ராஜபட்ச சகோதரர் களின் தந்தை நினைவிடம், வீடு, குருநாகலில் உள்ள மகிந்தவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். மேலும் 14 முன்னாள் அமைச்சர்கள், 18 எம்.பி.க்கள், ராஜபட்ச குடும்பத்தின் ஆதரவு தலைவர்களின் வீடுகள் தாக்கப்பட்டன.

கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் நடந்த வன்முறையில் சுமார் 250 பேர் காயமடைந்தனர். ஆளும் கட்சி எம்.பி. அமரகீர்த்தி அதுகொரலா உள்பட 4 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 8-ஆக அதிகரித்தது.

துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு: இந்நிலையில், வன்முறைக்குப் பின்னர் முதல் முறையாக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அதிபர் கோத்தபய ராஜபட்ச ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், 'பொதுமக்கள் அமைதிகாக்கும் படியும், குடிமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்தும்படியும் கேட்டுக்கொள்கிறேன். அரசியல் மற்றும் பொருளாதார பிரச்னைகளுக்கு தீர்வுகாண அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.

Esta historia es de la edición May 11, 2022 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

Esta historia es de la edición May 11, 2022 de Dinamani Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 8500 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAMANI CHENNAIVer todo
அளவுக்கு அதிகமான மழையால் நிலச்சரிவு
Dinamani Chennai

அளவுக்கு அதிகமான மழையால் நிலச்சரிவு

பப்புவா நியூ கினியா பிரதமர்

time-read
1 min  |
May 30, 2024
10 சதவீத வளர்ச்சி கண்ட இந்திய வாகன விற்பனை
Dinamani Chennai

10 சதவீத வளர்ச்சி கண்ட இந்திய வாகன விற்பனை

இந்தியாவில் வாகனங்களின் சில்லறை விற்பனை கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 10 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது.

time-read
1 min  |
May 30, 2024
ருத்ரா எம்-2 ஏவுகணை விமானத்திலிருந்து ஏவி வெற்றிகர சோதனை: டிஆர்டிஓ
Dinamani Chennai

ருத்ரா எம்-2 ஏவுகணை விமானத்திலிருந்து ஏவி வெற்றிகர சோதனை: டிஆர்டிஓ

ருத்ரா எம்-ஐஐ ஏவுகணையை சுகோய்-30 எம்கே-ஐ போா் விமானத்திலிருந்து செலுத்தி வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.

time-read
1 min  |
May 30, 2024
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து, பிரணாய்
Dinamani Chennai

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து, பிரணாய்

சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

time-read
1 min  |
May 30, 2024
பிரிஜ் பூஷண் மகனின் பாதுகாப்பு வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு
Dinamani Chennai

பிரிஜ் பூஷண் மகனின் பாதுகாப்பு வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தின் கைசா்கஞ்ச் தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சி எம்.பி. பிரிஜ் பூஷண் சிங்கின் மகனுமான கரண் பூஷண் சிங்கின் பாதுகாப்பு வாகனம் (கான்வாய்) மோதியதில் 17 வயது சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா். பெண் ஒருவா் காயமடைந்தாா்.

time-read
1 min  |
May 30, 2024
நவீன் பட்நாயக் உடல்நிலை குறித்து அறிய விசாரணைக் குழு
Dinamani Chennai

நவீன் பட்நாயக் உடல்நிலை குறித்து அறிய விசாரணைக் குழு

பிரதமர் மோடி

time-read
1 min  |
May 30, 2024
ஒடிஸா கனிம வளங்களால் மத்திய அரசுக்குத்தான் அதிக பலன்
Dinamani Chennai

ஒடிஸா கனிம வளங்களால் மத்திய அரசுக்குத்தான் அதிக பலன்

வி.கே.பாண்டியன்

time-read
1 min  |
May 30, 2024
பாஜக திட்டங்களால் சிறு தொழில்களுக்கு பெரும் இழப்பு
Dinamani Chennai

பாஜக திட்டங்களால் சிறு தொழில்களுக்கு பெரும் இழப்பு

பிரியங்கா காந்தி

time-read
1 min  |
May 30, 2024
10,793 ஊராட்சிகளுக்கு விரைவில் விளையாட்டு உபகரணங்கள்
Dinamani Chennai

10,793 ஊராட்சிகளுக்கு விரைவில் விளையாட்டு உபகரணங்கள்

தமிழக அரசு தகவல்

time-read
1 min  |
May 30, 2024
Dinamani Chennai

தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்கள் மீது காணொலி வழி விசாரணை

ஜூன் 10 முதல் நடத்த முடிவு

time-read
2 minutos  |
May 30, 2024