Try GOLD - Free
நோபல் போட்டியில் டிரம்ப்!
Dinamani Karur
|June 26, 2025
அமைதிக்கான நோபல் பரிசுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரைப் பரிந்துரைக்க முடிவெடுத்துள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது அந்நாட்டில் கடும் விமர்சனத்தையும், எதிர்ப்பையும் சந்தித்துள்ளது.
அதேநேரத்தில் தனது அமைதிப் பணிகளுக்காக தனக்கு இதுவரை 4 முதல் 5 முறை நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், நோபல் பரிசு தாராளமயக்கொள்கையைக் கொண்ட தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, தமக்கு தரமாட்டார்கள் என்றும் டிரம்ப் அதிருப்தி தெரிவித்தார்.
இது ஒருபுறம் இருக்க இதுவரை எத்தகைய உலகத் தலைவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்ற கடந்தகால அமைதி நோபல் வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் டிரம்ப் கூறுவதில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளது என்பது தெரியவரும்.
கடந்த 2009-இல் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால், சமீபகால அமெரிக்க அதிபர்களில் வெளிநாடுகள்மீது அதிக தாக்குதல்களை நடத்தி ஏராளமான அப்பாவி மக்களின் உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தவர் ஒபாமா.
ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஆப்கானிஸ்தான், இராக், சிரியா, லிபியா, யேமன், சோமாலியா, பாகிஸ்தான் என 7 நாடுகள் குண்டு களால் துளைத்தெடுக்கப்பட்டன. இவை அனைத்தும் பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், தலிபான் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்பினரைக் குறிவைக்கும் தாக்குதல் எனக் கூறப்பட்டது. ஆனால், இதில் பொது மக்களும் பெருமளவில் உயிரிழந்தனர்.
ஒபாமாவுக்கு முன்பு அதிபராக இருந்த ஜார்ஜ் டபிள்யு புஷ் ஆட்சிக் காலத்தைவிட ஒபாமா ஆட்சிக் காலத்தில் வெளிநாடுகளில் அமெரிக்க தாக்குதல் 10 மடங்கு வரை அதிகரித்தது.
This story is from the June 26, 2025 edition of Dinamani Karur.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Karur
Dinamani Karur
சமன்செய்து சீர்தூக்கும் கோல்!
தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.
3 mins
November 03, 2025
Dinamani Karur
அன்புள்ள ஆசிரியருக்கு...
காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.
1 min
November 03, 2025
Dinamani Karur
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Karur
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Karur
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Karur
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Karur
அம்மானை!
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Karur
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Karur
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Karur
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Translate
Change font size
