Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

சுற்றுச்சூழல் சிதைந்தால் சுற்றுலா இல்லை!

Dinamani Tiruchy

|

June 12, 2025

சுற்றுலாப் பயணிகளைப் பொருத்தவரை பெரும்பாலானோருக்கு விழிப்புணர்வு இல்லை. தீவிர கண்காணிப்பும் கடும் அபராதமும் மட்டுமே சுற்றுலாப் பயணிகளைப் பொறுப்புடன் செயல்பட வைக்கும். ஆனால், சுற்றுலாவால் ஏற்படும் சுற்றுச்சூழல் சேதங்கள் அனைத்தையும் தாமாக முன்வந்து நீதிமன்றம் விசாரிப்பது என்பது முடியாத காரியம்.

- முனைவர் இரா.கற்பகம்

மத்திய-மாநில அரசுகள் எல்லாமே சுற்றுலாவை மேம்படுத்த அதிக முயற்சிகள் எடுத்து வருகின்றன. பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி ஒரு கடமையாக, அருகாமை-தொலைவு என்றெல்லாம் பார்க்காமல், கூட்டம் கூட்டமாக சுற்றுலாத் தலங்களை மக்கள் முற்றுகையிடுகிறார்கள்.

மலைப்பிரதேச சுற்றுலா, கோடைக்கால சுற்றுலா, குளிர்கால சுற்றுலா, மழைக்கால சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா, மருத்துவ சுற்றுலா, கல்வி சுற்றுலா, கலாசார சுற்றுலா, சூழல் சுற்றுலா, கானுயிர் சுற்றுலா-என சுற்றுலா ஒரு பெரும் வணிகமாக மாறிவிட்டது.

இச்சுற்றுலா வணிகத்தினால் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனால், அரசுகளோ, அதிகாரிகளோ, பொதுமக்களோ இதைப் பற்றிச் சற்றும் கவலைகொள்ளவில்லை என்பது மிகப் பெரிய சோகம்! ஒரு பக்கம் 'காலநிலை மாற்றம்', 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' என்றெல்லாம் பல்வேறு நாடுகள் கூட்டம் போட்டு, கருத்தரங்குகள் நடத்தி, விவாதம் செய்கின்றன.

மறுபக்கம் 'சுற்றுலா' என்ற பெயரில் எல்லா நாடுகளுமே சுற்றுச்சூழலைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன. மேலை நாடுகளில் மக்கள்தொகை குறைவு; சீனா, ஜப்பான் போன்ற அதிக மக்கள்தொகை உள்ள நாடுகளில் சுற்றுலாப் பயணிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள்; சுற்றுலாவுக் கான கட்டணம் மிக அதிகம்; மேலும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்தந்த நாட்டுச் சட்டங்களை மதித்து நடக்கும் பொறுப்பான சுற்றுலாப் பயணிகள். இதனால் எல்லாம் அங்கு சுற்றுலாப் பயணிகளால் சுற்றுச்சூழலுக்கு எவ்விதக் கேடும் ஏற்படுவதில்லை.

நம் நாட்டுக்கு வருவோம். சுற்றுலாத் தலங்கள் எங்கிலும் கூட்டம்; சப்தம்; குப்பை; நெகிழிப் புட்டிகள், பைகள்; ஒழுங்கின்மை..... மேலை நாட்டவரிடமிருந்து மதுவையும், ஆடைக் குறைப்பையும் கற்றுக்கொண்ட நாம், அவர்களிடமிருந்து பொறுப்புணர்வைக் கற்றுக்கொள்ளவில்லையே! 'ஒரே ஒரு நபராக இருந்தாலும் ஆங்கிலேயர் வரிசையில்தான் நிற்பார்' என்று ஆங்கிலேயரின் ஒழுங்கைப் பற்றிச் சொல்வதுண்டு.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அதிர்ந்து பேச மாட்டார்கள்; பயணச் சீட்டாகட்டும், உணவாகட்டும், வரிசையில் பொறுமையாக நின்று பெறுவார்கள். நம் மக்களைப் போல் முண்டியடித்துச் சண்டையிட்டு அசிங்கப்படுத்த மாட்டார்கள். எப்போது மக்களிடம் பொறுப்புணர்வும் நாகரிகமும் இல்லையோ, அதை மக்களிடம் கண்டிப்புடன் கொண்டு வருவது அரசுகளின் கடமை.

WEITERE GESCHICHTEN VON Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruchy

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Tiruchy

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruchy

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Tiruchy

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

December 01, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்

நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time to read

1 mins

December 01, 2025

Translate

Share

-
+

Change font size