Versuchen GOLD - Frei
மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயரும் இந்தியா
Dinamani Dindigul & Theni
|November 27, 2025
குடியரசுத் தலைவர் பெருமிதம்
-
'உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் பயணத்தில் வேகமாக முன்னேறுகிறது இந்தியா; இது, நமது நாடாளுமன்ற அமைப்பு முறையின் வெற்றிக்கு உறுதியான சான்று' என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
'மிகப் பெரிய ஜனநாயகமான இந்தியாவின் லட்சியங்களைப் பறைசாற்றும் நாடாளுமன்றம், உலகின் பல்வேறு ஜனநாயக நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது' என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
கடந்த 1949-ஆம் ஆண்டில் அரசியல் நிர்ணய சபையால் அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட நவ. 26-ஆம் தேதி அரசமைப்புச் சட்ட தினமாக கடந்த 2015-இல் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு அரசமைப்புச் சட்ட தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் (சம்விதான் சதன்) வரலாற்றுச் சிறப்புமிக்க மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, இரு அவைகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தேசத்தின் அடையாளம்: விழாவில் குடியரசுத் தலைவர் பேசியதாவது: நமது அரசமைப்புச் சட்டம், நாட்டின் பெருமைக்குரிய ஆவணம்; தேசத்தின் அடையாளம். காலனித்துவ மனநிலையைப் புறந்தள்ளி, தேசியவாத கண்ணோட்டத்துடன் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வழிகாட்டும் ஆவணமாகும்.
இந்தியாவில் நாடாளுமன்ற அமைப்புமுறையை ஏற்பதற்கு ஆதரவாக அரசியல் நிர்ணய சபையில் முன்வைக்கப்பட்ட வலுவான வாதங்கள் இன்றளவும் பொருத்தமானவை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதுடன், ஆழமான அரசியல் சிந்தனைக்கு ஆக்கபூர்வ மரபையும் வளர்த்தெடுத்துள்ளனர். எதிர்கால ஒப்பீட்டு ஆய்வுகளின்போது, இந்திய ஜனநாயகமும் அரசமைப்புச் சட்டமும் பொன்னெழுத்துகளால் விவரிக்கப்படும். உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதை நோக்கி இந்தியா வேகமாக பயணிப்பது, நமது நாடாளுமன்ற அமைப்புமுறையின் வெற்றிக்கு வலுவான சான்றாகும்.
Diese Geschichte stammt aus der November 27, 2025-Ausgabe von Dinamani Dindigul & Theni.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
கேரள முதல்வருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்
கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்துக்கு (கேஐஐஎஃப்பி) மாநில அரசு கடன் பத்திரங்கள் மூலம் பெற்ற வெளிநாட்டு முதலீடுகளில் பண முறைகேடு நடந்ததாக கூறி, முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலர் கே.எம். ஆப்ரகாம் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
1 min
December 02, 2025
Dinamani Dindigul & Theni
அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை
உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்
1 min
December 02, 2025
Dinamani Dindigul & Theni
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Dindigul & Theni
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Dindigul & Theni
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Dinamani Dindigul & Theni
இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்
மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்
1 min
December 02, 2025
Dinamani Dindigul & Theni
காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!
மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min
December 01, 2025
Dinamani Dindigul & Theni
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Dindigul & Theni
எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்
நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 mins
December 01, 2025
Dinamani Dindigul & Theni
கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்
கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
1 min
December 01, 2025
Listen
Translate
Change font size

