Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

மகாகவி பாரதியார் - சில நிகழ்வுகள்...!

Dinamani Chennai

|

March 02, 2025

பாரதியாரின் நெருங்கிய நண்பராக இருந்த மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் மகள் யதுகிரியம்மாள். மகாகவி பாரதியாரின் வளர்ப்பு மகள் என்றுகூட இவரைச் சொல்லலாம். அந்த அளவுக்கு மகாகவி பாரதிக்கு யதுகிரிடம் பாசம்.

- ரவிசுப்பிரமணியன்

மகாகவி பாரதியார் - சில நிகழ்வுகள்...!

யதுகிரியம்மாளின் பாரதி நினைவுகள் புத்தகத்தினுடைய முதல் அத்தியாயமே 'ஏலேலோ பாட்டு' என்ற தலைப்பில் வெகு சுவாரஸ்யமாக இப்படித் தொடங்குகிறது.

ஒரு நாள் சாயங்காலம் பாரதியாரின் பெண்கள் இருவர், நாங்கள் நான்கு பேர், ஆக ஆறு சிறுவர்களும், பாரதியாரின் மனைவி செல்லம்மாவுடன், பாரதியாரும் கடற்கரை வந்து சேர்ந்தோம். மணி ஆறரை இருக்கும். மணல் மேல் உட்கார்ந்து வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தோம். அருகில் செம்படவர் சிலர் கூடைகளில் மீன்களைத் திரப்பி விட்டுச் சந்தோஷமாய்ப் பாடி பஜனை செய்து கொண்டு சென்றார்கள்.

பாரதியாருக்குப் பெரிய சங்கீத கச்சேரிகளைக் காட்டிலும் சாதாரண பாம்பாட்டி, வண்ணான், நெல் குத்தும் பெண்கள், செம்படவர்கள், உழவர் - இவர்களுடைய பாட்டு என்றால் ரொம்ப இஷ்டம். அதனால் எங்களோடு பேசிக்கொண்டிருந்தவர் அந்தச் செம்படவர் பாட்டுக்குச் 'சபாஷ்' சொல்ல ஆரம்பித்தார்.

நான் அவரைப் பார்த்து, "இதென்ன வேடிக்கை! அவர்கள் அர்த்தம், ராகம் ஒன்றுமில்லாமல் பாடும் பாட்டை நீர் இவ்வளவு மெச்சுகிறீரே? எங்களுக்கு ஒன்றுமே புரிகிறதில்லையே!" என்றேன்.

அதைக்கேட்டு செல்லம்மா, "அவர் ஒரு பித்து என்பது உனக்குத் தெரியாதா? வீதியில் மாரியம்மன் எடுத்துக்கொண்டு உடுக்கையடிப்பவன் வந்தால், இவர் கூத்தாடுகிறார்; தம் நினைவே கிடைப்பாது. இப்போ சாயங்கால வேளை; கடற்கரை; அலைகளின் ஒலி; இதோடு தாளம் போடும் அர்த்தமில்லாத பாட்டு! கேட்க வேண்டுமா?" என்று சொல்லிச் சிரித்தாள்.

உடனே பாரதியார் எழுந்தார். ஒரு பென்சிலும் காகிதமும் எடுத்துக் கொண்டு அந்தச் செம்படவரிடம் ஓடினார்; அதில் இருந்த ஒரு கிழவனை அந்தப் பாட்டை அடி அடியாகச் சொல்லும்படி கேட்டார்; பிழைகளைத் திருத்திக் கொண்டு எங்களிடம் வந்து, "நீங்களெல்லாரும் என்னைக் கேலி செய்கிறீர்களே! பிரபஞ்சத்தின் அடிப்படையை அந்தச் செம்படவன் எனக்கு உபதேசம் பண்ணினான்" என்றார்.

செல்லம்மா: ஆகா! நீங்கள் எல்லாருக்கும் சிஷ்யர்தான்! முதல் தெய்வமாகிற மடத்தின் குருவுக்கு மாத்திரம் சிஷ்யர் அல்ல!

பாரதியார்: இதோ பார், செல்லம்மா. உன் அர்த்தமில்லாத மூட வழக்கத்தை எனக்குச் சொல்லாதே! அந்தச் சாரமில்லாத, உண்மையல்லாத விஷயங்களை என் உயிர் போனாலும் நம்ப மாட்டேன். செம்படவன் அவனுக்குரிய தொழில் செய்தாலும், அவன் உயிரும் என் உயிரும் ஒன்றே!

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

இந்திய திறமைசாலிகளால் அதிக பயனடைந்தது அமெரிக்கா

எலான் மஸ்க் கருத்து

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

வக்ஃப் சொத்து தகவல்கள் பதிவேற்றம்: கால அவகாசத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல், திறன் மற்றும் மேம்பாடு (யுஎம்இஇடி) வலைதளத்தில் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை கட்டாயம் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை மறுப்பு தெரிவித்தது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை

நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு

ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151-ஆக உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

தொழிலக உற்பத்தியில் 13 மாதங்கள் காணாத சரிவு

இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளர்ச்சி, கடந்த 13 மாதங்கள் காணாத அளவுக்கு 0.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

தில்லி கார் வெடிப்பு வழக்கு: அல் ஃபலா நிறுவனருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபடுத்தப்படும் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைதாகியுள்ள அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் ஜாவத் அகமது சித்திக்கியை 14 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை

நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

அமளியுடன் தொடங்கிய நாடாளுமன்றம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.

time to read

1 min

December 02, 2025

Translate

Share

-
+

Change font size