கை கோக்கும் மாநகர கயவர்
Dinamani Chennai|May 16, 2024
உலகின் உன்னத மறை நூல் திருக்குறள் என்று வானுயர போற்றப்படுகிறது. வள்ளுவர் பெருமான் பார்வை படாத விடயம் ஒன்றுமேயில்லை என்ற அளவில் வாழ்வியலில் அத்துணை நடைமுறைகளையும் ஆராய்ந்துள்ளார். ரொளடிகளையும் விட்டு வைக்கவில்லை!
ஆர்.நடராஜ்
கை கோக்கும் மாநகர கயவர்

மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பார் யாங்கண்டதில் என்றார் வள்ளுவர். தோற்றத்தில் மக்களை போலவே கயவர் உள்ளனர், இந்த ஒற்றுமையை வேறு எங்கும் பார்க்க முடியாது என்று வியக்கிறார். மனிதனிடம் அந்தக் கொடூரம் ஒளிந்திருக்கிறது. எப்போது மிருகமாவான் என்று கணிக்க முடியாது. நடக்கும் வன்முறைகளைப் பார்த்தால் மிருகத்தனம்தான் எங்கும் பரவியிருப்பதை நிரூபிக்கின்றது.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிகழ்வுகள், மனித உடலுக்கு ஊறு விளைவிக்கும் மோதல்களில் பதியப்பட்ட வழக்குகளில் காவல்துறை கறாரான நடவடிக்கை எடுத்தால்தான் சட்டம் ஒழுங்கு சீராக இயங்கும். எந்த அளவில் இத்தகைய வழக்குகள் நேர்மையாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு எதிரிகளுக்கு தண்டனை சட்டப்படி பெறப்படுகிறது என்பது காவல்துறையின் செயல்பாடுகளின் அளவுகோலாக கருதப்படும்.

பொது இடங்களில் வெட்டு குத்து நடைபெறுவது சமுதாயத்தில் பீதியை கிளப்பும். கொடூரமான கொலைகள், சமீபத்தில் நெல்லையில் நடந்தது போல் வெட்டிக் கொலை செய்து தீக்கிரையான உடல் வீசப்படுவது போன்ற கொலைகள் பயங்கர சூழலை உருவாக்கும். இம்மாதிரி நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தால் மக்களுக்கு காவல்துறை மீதுள்ள நம்பிக்கை குறையும். காவல்துறை நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத மக்களின் ஒத்துழைப்பு அற்றுப்போகும். இதுவே சட்டம் ஒழுங்கு சீர்குலைவிற்கு வித்திடும்.

தேசிய குற்ற ஆவண வாரியம் 2022-ஆம் ஆண்டு வரை மாநிலங்களில் நிகழ்ந்த குற்றங்களும் அதன் காரிய காரணங்களும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இந்திய தண்டனை சட்டப்படி பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 35.61 லட்சம். தமிழ்நாட்டில் 1.91 லட்சம். மாநிலங்களில் ஆண்டுதோறும் வழக்குகள் குறையலாம் அதிகமாகலாம். ஆனால் தமிழ்நாட்டில் 2021-இல் பதியப்பட்ட வழக்குகள் 3.22 லட்சம், 2020-இல் 8.9 லட்சம். 2022-இல் 1.91 லட்சம் வழக்குகள். முந்தைய வருடங்களைவிட 300% சரிவு ஆச்சரியம் அளிக்கிறது. முழுமையாக வழக்குகள் பதியப்படுகிறதா என்பதை தலைமை கண்காணிக்க வேண்டும்.

Diese Geschichte stammt aus der May 16, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der May 16, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
'சூப்பர் 8' நம்பிக்கையில் பாகிஸ்தான்
Dinamani Chennai

'சூப்பர் 8' நம்பிக்கையில் பாகிஸ்தான்

டி20 உலகக் கோப்பை போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கனடாவை செவ்வாய்க்கிழமை வென்றது.

time-read
1 min  |
June 12, 2024
பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்
Dinamani Chennai

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் திட்டத்தில் மத்திய அரசு இருப்பதாக சட்டத்துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 12, 2024
போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க இயக்கம்
Dinamani Chennai

போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க இயக்கம்

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க பெரும் இயக்கம் தொடங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

time-read
2 Minuten  |
June 12, 2024
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் காவல் துறையினரின் நிலைப்பாட்டில் மாற்றம்
Dinamani Chennai

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் காவல் துறையினரின் நிலைப்பாட்டில் மாற்றம்

‘ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் காவல் துறையினரின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவதாகவும், அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மட்டுமே இது நடக்கிறது’ எனவும் சென்னை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

time-read
1 min  |
June 12, 2024
வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு தாக்கி மூவர் உயிரிழப்பு
Dinamani Chennai

வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு தாக்கி மூவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை வீட்டுக் கழிப்பறைகளில் விஷ வாயு கசிந்து வெளியேறியதில் மாணவி உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
June 12, 2024
திருச்சி விமான நிலைய புதிய முனையச் செயல்பாடு தொடக்கம்
Dinamani Chennai

திருச்சி விமான நிலைய புதிய முனையச் செயல்பாடு தொடக்கம்

விமானங்களுக்கு 'வாட்டர் சல்யூட்' அடித்து வரவேற்பு

time-read
1 min  |
June 12, 2024
செல்வப்பெருந்தகை பேச்சுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எதிர்ப்பு
Dinamani Chennai

செல்வப்பெருந்தகை பேச்சுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எதிர்ப்பு

காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழுவில், தனித்துப் போட்டியிடுவது தொடா்பாக அந்தக் கட்சியின் தலைவா் செல்வப்பெருந்தகை பேசியதற்கு முன்னாள் தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எதிா்ப்பு தெரிவித்தாா்.

time-read
1 min  |
June 12, 2024
Dinamani Chennai

அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி மேம்பாடு

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் கல்வி மேம்பாட்டை மாவட்ட ஆட்சியா்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று தலைமை செயலா் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளாா்.

time-read
1 min  |
June 12, 2024
Dinamani Chennai

சென்னையில் கடத்தப்பட்ட இளைஞர் விழுப்புரத்தில் மீட்பு

சென்னையில் இருந்து காரில் கடத்தப்பட்ட இளைஞரை விழுப்புரம் எல்லையில் போலீஸாா் மீட்டனா்.

time-read
1 min  |
June 12, 2024
Dinamani Chennai

கழிவுநீர் தொட்டியை மனிதர்கள் மூலம் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை

தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எச்சரிக்கை

time-read
1 min  |
June 12, 2024