அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது
Dinamani Chennai|August 18, 2022
உயர்நீதிமன்றம் தீர்ப்பு
அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது

சென்னை, ஆக. 17: சென்னையில் கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்றும், கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

இதன்மூலம் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியதும் செல்லாததாகியுள்ளது.

சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 23, ஜூலை 11-ஆம் தேதிக ளில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலராகவும், ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தப் பொதுக் குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பட்டது. இதை விசாரித்த உச்சநீதி மன்றம், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்க உத்தரவிட்டது.

அதன்படி நடைபெற்ற வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் புதன்கிழமை தீர்ப்பளித்தார்.

தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது:

ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் கோரிக்கை விடுத்ததாக எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் வாதிட்டுள்ளனர். ஆனால், அவ்வாறு தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்பதற்கு எந்த ஒரு புள்ளிவிவரமும் தாக்கல் செய்யப்படவில்லை. குறிப்பாக, இதே இரட்டைத் தலைமை முதல்வராகவும், துணை முதல்வராகவும் பதவி வகித்து சுமார் நான்கு ஆண் டுகள் வெற்றிகரமாக அரசை நடத்தியுள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்து கட்சியின் பல முடிவுகளை எடுத்துள்ளனர். தேர்தல் கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட முடிவுகளையும் எடுத்துள்ளனர். அப்படிஇருக்கும்போது, திடீ ரென கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூலை 11-ஆம் தேதிக்குள் கட்சியின் தலைமையில் மாற்றம் வேண்டும் என்று ஒன்றரை கோடி தொண்டர்கள் எவ்வாறு முடிவு செய்தனர்?

Diese Geschichte stammt aus der August 18, 2022-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der August 18, 2022-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
தோல்விக்கு அஞ்சி ஓடுகிறார் ராகுல்: பிரதமர் மோடி விமர்சனம்
Dinamani Chennai

தோல்விக்கு அஞ்சி ஓடுகிறார் ராகுல்: பிரதமர் மோடி விமர்சனம்

ராகுல் காந்தி தேர்தல் தோல்விக்கு அஞ்சி ஓடுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மேலும், 'மக் களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவில் தோல்வியடையும்' என்றும் அவர் கூறினார்.

time-read
1 min  |
May 04, 2024
ரேபரேலியிலும் ராகுல் போட்டி
Dinamani Chennai

ரேபரேலியிலும் ராகுல் போட்டி

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகு தியில் போட்டியிட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

time-read
1 min  |
May 04, 2024
கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?
Dinamani Chennai

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

தில்லி கலால் கொள்கை பணப்பரிவா்த்தனை விவகாரத்தில் கைதாகியுள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் குறித்து பரிசீலிக்கவிருப்பதால் அது தொடா்பாக மே 7-ஆம் தேதி நடைபெறவுள்ள விவாதங்களுக்கு தயாராக வரும்படி அமலாக்கத் துறையை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

time-read
1 min  |
May 04, 2024
வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்
Dinamani Chennai

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

வட தமிழக மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்துக்கு இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவா் பாலச்சந்திரன் கூறினாா்.

time-read
1 min  |
May 04, 2024
சென்னையில் போர்ச்சுகல் திரைப்பட விழா
Dinamani Chennai

சென்னையில் போர்ச்சுகல் திரைப்பட விழா

சென்னையில் ‘லூசோபோன்’ எனும் போா்ச்சுகல் திரைப்பட விழாவை போா்ச்சுகல் கௌரவ தூதா் அலிசன் புளோரன்ஸ் எமோட்டா தொடங்கிவைத்தாா்.

time-read
1 min  |
May 04, 2024
Dinamani Chennai

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு

அரக்கோணம் அருகே ஆளில்லாத ரயில் பாதையைக் கடக்க முயன்ற சிற்றுந்து மீது ரயில் மோதிய விபத்தில் 9 கிராம நிா்வாக அலுவலா்கள் உள்பட 11 போ் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
May 04, 2024
பேச்சு சுதந்திரத்தின் மாண்பை உயர்த்திப் பிடிப்போம்: முதல்வர்
Dinamani Chennai

பேச்சு சுதந்திரத்தின் மாண்பை உயர்த்திப் பிடிப்போம்: முதல்வர்

பேச்சு சுதந்திரத்தின் மாண்பை உயர்த்திப் பிடிப்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 04, 2024
உதகை, தாளவாடியில் பலத்த மழை
Dinamani Chennai

உதகை, தாளவாடியில் பலத்த மழை

கத்திரி வெயில் தொடங்கும் நிலையில் தாளவாடி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

time-read
1 min  |
May 04, 2024
Dinamani Chennai

ஊரக - நகரப் பகுதிகளில் குடிநீர் பிரச்னை: அரசுத் துறைச் செயலர்கள் நேரில் கள ஆய்வு

தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து அரசுத் துறைகளின் செயலா்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனா்.

time-read
1 min  |
May 04, 2024
ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்
Dinamani Chennai

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்

‘மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றியுள்ளது ஆளும் திரிணமூல் காங்கிரஸ்’ என்று பிரதமா் மோடி குற்றம்சாட்டினாா்.

time-read
1 min  |
May 04, 2024